(Reading time: 11 - 22 minutes)

"தை ஏன் உன்கிட்ட சொல்றேனா!நீ ரகுவை ஏத்துப்பன்னு இல்லை...நான் போராடி தோற்றுவிட்டேன்.

தீக்ஷா....அவளுக்கும்,உனக்கும் இடையான பந்தம் வலுப்பட தான் சொன்னேன்.வேற யாரோட பந்தமும் உனக்கு எடுத்துக்காட்டா சொல்ல தோணலை கண்ணா!"

-ராகுல் கண்களில் அவனறியாமல் இருத்துளி கண்ணீர்.

"குட்நைட்!"-மெல்ல நழுவினார் சரண்.

நீண்ட நேரமாய் எதையோ சிந்தித்தப்படி இருந்தான்.

ரகுவின் மேல் இருந்த வெறுப்பு சற்றே அடங்கி இருந்தது.

யாரோ வந்து பின்னால் நிற்பது போன்ற உணர்வு...

திரும்பினான்.அவனைக் கவனித்தப்படி நின்றிருந்தாள் மது.

ஆனால் ஏதும் பேசவில்லை.

அவள் கண்பார்வையே அவனை சென்று உறங்கும்படி கூறியது...

அவள் திரும்ப,

"மா!"என்ற குரல் அவளை தடுத்தது.

அவன் எழுந்து வந்தான்.

"அன்னிக்கு செய்த பாவத்துக்கு பிராயசித்தம் பண்ணுற வரைக்கும் பேச கூடாதுன்னு சொன்னீங்க!

இனி பேசலாமா?"

"..............."

"தப்பு தான்மா!நான் பண்ணது தப்புதான்!வேணும்னா என்ன அடி!ஆனா பேசாம இருக்காதே!வலிக்குதும்மா!"-அவன் கண்ணீர் சிந்துவதை தாய் மனம் ஏற்க மறுத்தது.

விழிகள் இரண்டும் கரைய தொடங்க,தன் மகனை தன் நெஞ்சோடு அணைத்தாள் மது.

"ஐ...ஐ...ஐ ஆம் ஸாரிம்மா!"

"டேய்!போடா! பைத்தியக்காரா..."

".............."

"உனக்கும் அழுத்தம் அதிகம்ல...இப்போதான் பேச தோணுதுல?"

"அன்னிக்கு நீ பிராயசித்தம் பண்ணாம பேசுனா செத்ததுக்கு சமம்னு சொல்லியும் நான் எப்படி பேசுவேன்."

"ஒருவேளை உன் சதியை நீ கல்யாணம் பண்ணலைன்னா பேசி இருக்கவே மாட்டியா?"-அவள் 'உன் சதி' என்று அழுந்த உரைத்தது அவன் மனதில் ஆழமாய் பதிந்தது.

"நான் எப்படி உன்னை விட்டுக்கொடுப்பேன்?அதுக்கு நான் செத்துடுலாம்மா!"

"அப்படியே அறைந்தேன்னா,என்ன பேச்சு இது?கொன்னுடுவேன் ராஸ்கல்!"-அவன் புன்னகைத்தான்.

"என்ன?"

"இந்த திட்டு எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன்மா!"

"அறந்த வாலு...!போய் தூங்கு நேரமாகுது பார்!"

"ம்..."

"கண்ணா!"

"ம்?"

"நான் ஒண்ணு சொல்லட்டா?"

"ம்...."

"தீக்ஷா ரொம்ப பாவம்டா!சின்ன வயசுலே தாய் பாசத்தை இழந்தவ!ஒரு பொண்ணுக்கு பரிபூரண ஆனந்தமே கணவனோட அன்பு தான்!எனக்கு புரியுது...நீ நிலைமையை ஏற்றுக்க அவகாசம் வேணும்னு!அட்லீஸ்ட் அதுவரைக்கும் அவ உணர்வுகளை புரிந்து,நல்ல துணையா இருக்குற நண்பனா இருக்கலாம்ல!"-அவன் மௌனித்தான்.

"என்னடா?"

"என் அம்மூக்குட்டி சொன்னா சரியா தான் இருக்கும்!"-என்று மதுவின் கன்னத்தை கிள்ளினான்..

"அடி!போடா!"-என்றவள் துரத்தவும் அங்கிருந்து ஓடிவிட்டான்.

தாயின் முன் ஆனந்தித்திருந்தாலும்,அறையின் வாயிலில் தடுமாறி நின்றான்.

ஒரு நிலைக்கு வந்தவன் கதவை திறந்தான்.மணி பதினொன்று என்றது.அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளருகே அமர்ந்தவன் நீண்ட நேரமாய் எதையோ யோசித்தான்.

அவன் கண்களில் தட்டுப்பட்டது அவள் அணிந்திருந்த வளையல்.அன்று விவாஹத்திற்கு செல்லும் முன் மதுவிடம் அதை கழற்றி கொடுத்திருந்தாள் அவள்.இன்று மீண்டும் அது அவள் கரம் சேர்ந்தது.மற்றொரு கரத்தை கண்டான்.அதுபோன்ற மற்றொரு வளையல் அதில் இல்லை.

பெண் பார்க்க செல்லும் போது மது உரைத்தது நினைவில் வந்தது..

"ஒரு வளையலை போட்டுட்டேன்.இன்னொரு வளையலை என் பையன் சீக்கிரமே போடுவான்!"-ஆக,அவள் கரமும் சரி அந்த வளையலும் சரி அவனுக்காக தான் காத்திருக்கின்றன அல்லவா???

மெல்ல மெத்தையில் சாய்ந்தவன் அப்படியே உறங்கி போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.