(Reading time: 32 - 64 minutes)

10. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

ந்த கடற்கரையில் அலைகளின் சத்தத்தில் பிருத்வி சிரிப்பது யாருக்கும் கேட்கவில்லையென்றாலும்... பார்ப்பவர்களுக்கு அவன் இவளை பார்த்து கேளியாக சிரிக்கிறான் என்று தெரியும் தானே..?? அதனால் அவனை பார்த்து முறைத்தாள் யுக்தா... ஆனால் அவள் முறைப்பது தெரிந்தும் அவன் சிரித்தக் கொண்டிருந்தான்.

நடந்தது இதுதான்... கவி இவளோடு வரவில்லை என்று சொன்னதும்... இவள் வீராப்பா வந்துட்டாளும்... அவக் கூட பேசாம இருப்பது யுக்தாவிற்கு கஷ்டமாக இருந்தது... மத்த நேரத்தில் சண்டைப் போட்டாலும் சமாதானம் ஆக முடிந்த மாதிரி இப்போ ஆக முடியாதே...

இவள் காதலோட ஆழத்தை கவிக்கு புரிய வைக்கனும்... இல்லை அவ சொன்ன மாதிரி இது நடக்குமான்னு யோசிக்கனும்... இதை ரெண்டயுமே உடனே செய்ய முடியாதே... அதுவரைக்கும் கவியோட கோபத்தை பொறுத்துக்கிட்டு தானே ஆகனும்...

Kadalai unarnthathu unnidame

அவ என்ன அங்கேயே வா இருக்கப் போறா... எப்படியோ வேலைக்குப் போக வந்து தானே ஆகனும்... அப்புறம் ஒரே வீட்டில் ரெண்டுப்பேரும் பேசாம இருக்க முடியுமா...?? இப்படியெல்லாம் மனச சமாதானப்படுத்திக்கிட்டாலும்... வீட்டுக்கு வந்ததிலிருந்து கவலையாவே இருந்தது யுக்தாவிற்கு... எப்பவும் போல பிருத்வி வீட்டுக்கு போகனும்னு கூட அவளுக்கு தோணல...

இருந்தாலும் பிருத்வி கிட்ட பேசினால் நல்லா இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது... பிருத்விக்கு ஃபோன் பண்ணி வெளியே வர முடியுமா...?? என்று கேட்டாள்... அவனும் வருவதாக ஒத்துக் கொண்டான்... கடற்கரைக்கு வந்தார்கள்..

வந்ததிலிருந்து இவன் விஷயத்தை விட்டு விட்டு மற்ற எல்லாம் விஷயத்தையும் கூறி... இந்த கல்யாணம் வேண்டாமென்றதால் கவி இவளிடம் கோபமாக இருப்பதாகக் கூறி புலம்பி தள்ளினாள்... அதை கேட்டுத் தான் அவன் சிரித்தான்.

"என்ன பிருத்வி... நான் வருத்தத்தில புலம்பினா... நீங்க சிரிக்கிறீங்க..."

"இல்லை யுக்தா... நீ நியூயார்க் போகறதுக்கு முன்னாடி இங்க இருந்தப்ப... லீவ்க்கு ஊருக்கு போய்ட்டு வந்தா... நீ கவிக் கூட என்னல்லாம் பண்ணன்னு ஒரு லிஸ்ட்டே என் கிட்ட ஒப்பிப்ப...அதுல நீ கவிக்கூட சண்டைப் போட்டது... அப்புறம் சமாதானம் ஆனது... ஏன் சண்டை வந்தது என்ற காரணம்... இதுதான் ஹைலைட்டா இருக்கும்...

ஆனால் இப்பவும் நீ அதே மாதிரி இருக்க... இன்னமும் கவிக்கூட சண்டைப் போட்டா இப்படி ஃபீல் பண்ற..??"

உண்மை தான் அங்க கவியோடு நடந்ததை இவனிடம் சொல்வதும்... இவனைப் பற்றி கவியிடம் சொல்வதும் தான் இவள் வாடிக்கயே... இதை அப்படியே ஞாபகம் வைத்திருக்கிறான் இவன்... இருந்தும் ஏன் எதுவும் ஞாபகம் இல்லாதது போல் நடந்துக் கொண்டான்... ஒருவேளை இப்போது பழக பழக எல்லாம் ஞாபகம் வருகிறதோ.. இதெல்லாம் ஞாபகம் இருந்தால் நல்லது தானே... அப்போது தானே தன்னுடைய காதலை புரிய வைக்க முடியும்... யுக்தா இப்படி யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..

"யுக்தா என்ன ஆச்சு..?? அவள் முன் சொடக்கு போட்டு அவளை அழைத்தான்.

"ஒன்னுமில்ல பிருத்வி... உங்களுக்கு தெரியாது.... என்னவோ கவிக் கூட பேசலைன்னா ரொம்ப கஷ்டமா இருக்கும்... ரெண்டு நாளைக்கு மேல தாங்க முடியாது... எப்படியும் உடனே சமாதானம் ஆகிடுவோம்... இப்பவும் சமாதானம் ஆகிடனும்... அப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்... அதுவரைக்கும் யாராவது ஆள் கிடைச்சா இப்படி தான் புலம்புவேன்...

தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டீங்கள்ள...??"

"இது உன்னோட கல்யாணம்... இது பிடிக்கலன்னு நீ வேண்டாம்ன்னு சொன்னா ஏன் கவி கோவிச்சிக்கனும்... சரி அது உங்க சிஸ்டர்ஸ் ரெண்டுபேருக்கும் இருக்கற சீக்ரெட் மேட்டர் அத நீ என்கிட்ட சொல்ல மாட்டேங்குற..."

"கரெக்டா கண்டுபிடிச்சிட்டானே... இவன் மேலே இவள் வச்சிருக்க காதல் தான் இப்போ இவர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்குன்னு இவன் கிட்ட சொல்ல முடியுமா...??  அவள் மனசுக்குள்ளயே சொல்லிக் கொண்டாள்... அவனே திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான்...

"நீ கூப்பிட்டதும் வந்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு யுக்தா... ஏற்கனவே அங்கே நடந்ததை  சுஜாதா அத்தை அம்மாக்கிட்ட  சொல்லிட்டாங்க.... அம்மா எங்கக் கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க...

நீ அதை நினைச்சு கஷ்டப்படுவ... ஏதாவது ஆறுதல் சொல்லலாம்னு வந்தா... நீ அதைப் பத்தி பேசாம... கவி பேசலைன்னு வருத்தப்படிறீயே... உங்க அத்தை பேசினத நினைச்சு நீ ஃபீல் பண்ணலையா..?

"அன்றைக்கு ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு பிருத்வி... ஆனா அப்புறம் யோசிச்சப்ப தான் புரிஞ்சுது... அத்தை ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டாங்க... உண்மையிலேயே என்ன அப்படி தப்பா நினைச்சிருந்தா... அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ண நினைச்சிருப்பாங்களா...??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.