(Reading time: 32 - 64 minutes)

"ன்ன தேவா... தர்ஷினி மறுவீடு முடிஞ்சு போக இன்னும் 3நாள் இருக்கே... அதுக்குள்ள ஊருக்குப் போக போறீயா..??"

"இதுக்கு மேலே லீவ் எடுக்க முடியாது சங்கு... கல்யாணம் நடந்த அன்னைக்கே என்னை வச்சு அந்த சடங்கெல்லாம் முடிச்சிட்டாங்க... அதான் நாளைக்கு ஊருக்குப் போகனும்... ஆமாம் நீ ஊருக்கு போகலையா..??"

"அம்மா... தர்ஷினி கிளம்பினதும் போய்டுவாங்க... நான் கோவில்ல பௌர்ணமி பூஜை முடிஞ்சதும் போவேன்..."

"அதுக்கு இன்னும் பத்து நாள் இருக்கே... அதுவரைக்கும் இங்கேயா இருக்கப் போற... இன்னும் 5 நாள் தானே உனக்கு லீவ்.."

"ஒரு 5 நாளுக்கு மெடிக்கல் லீவ் எடுத்துப்பேன்..."

"என்ன மெடிக்கல் லீவ் போட்டு பூஜை...?? அதுவும் யுக்தா வந்திருக்க சமயத்துல அவக் கூட இல்லாம...??"

"அவளுக்காக தான் வேண்டியிருக்கேன் தேவா.." என்று யுக்தா ஏன் திருமணம் வேண்டாமென்றால் என்ற காரணம்... அவளின் காதல்... அதில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு... இதையெல்லாம் அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

"நீ நினைப்பதெல்லாம் கரெக்ட் தான் சங்கு... ஆனா இப்போ யுக்தா கூட பிருத்வி நல்லா பழகறதா தானே சொல்ற... அவ காதலை புரிஞ்சு பிருத்வி அவ காதலை ஏத்துக்கலாம் இல்லையா...??"

"என்ன தேவா... சம்யு காதல் ஜெயிச்சா சந்தோஷப் பட்ற முதல் ஆளு நானா தான் இருப்பேன்... ஆனா அது நடக்குமா...??

பிருத்விய ஒருதடவை தான் பார்த்திருக்கேன்... நல்ல டைப் மாதிரி தான் தெரியுது... ஆனா ஒருத்தர பார்வையால மட்டுமே எடை போட முடியாதே..??? சம்யு இந்த ஒரு வாரத்துல பழகனத வச்சு பிருத்விய பத்தி சொல்லியிருக்கா... அதெல்லாம் ஓகேன்னாலும்... பிருத்வி லைஃப்ல வேற ஒரு பொண்ணு இருக்கக்கூட வாய்ப்பு இருக்குள்ள...

இதப்பத்தி சம்யுக்கிட்ட சொல்லலை... சொல்லி அவளை கஷ்டப்படுத்த விரும்பல... ஆனா இது சாத்தியம் இல்லைன்னு சொல்ல முடியுமா..??"

"நீ சொல்ற பாயிண்டும் கரெக்டா தான் இருக்கு சங்கு... ஆனா இதெல்லாம் யோசிச்சிட்டு காதல் வராதே...?? இப்போ நீ யாரையாவது லவ் பண்ணி இது ஒத்து வராது.. விட்டிடுன்னு உன்கிட்ட சொன்னா... உன்னால அந்த காதலை மறந்துட முடியுமா..?? இல்ல உடனே வேற ஒருத்தரை தான் ஏத்துக்க முடியுமா..??"

அந்த அவஸ்தைய நான் தான் ஏற்கனவே அனுபவிச்சிக்கிட்டு இருக்கேனே தேவா... அதனால தான் என்னோட தங்கைக்கும் அதே கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்..

"எனக்கு புரியுது தேவா.. ஆனால் ஒருவேளை அவள் காதல் தோல்வியில முடிஞ்சா அதை அவள் ஏத்துக்கணும்... அதான் இந்த வேண்டுதல்.."

"சரி நீ வேண்டிக்கோ.. அதை நான் தப்புன்னு சொல்லலை... இருந்தாலும் யுக்தா கிட்ட பேசாம இருக்காதே... பேசிடு.."

"ம்ம்ம்..."

"ஆமா அத்தை போய்ட்டாங்கன்னா தனியாவா இருக்கப்போற..."

"இல்லை தேவா பக்கத்து வீட்டு அக்கா துணைக்கு படுத்துப்பாங்க... அம்மா அதுவரைக்கும் இருக்கேன்னு தான் சொன்னாங்க... சித்தி தனியா கஷ்டப்படுவாங்கன்னு நான் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்..."

"சரி... தாத்தா பாட்டி கொஞ்ச நாள் இங்க தான் இருப்பாங்க... அவங்களை உன்னோட வந்து இருக்க சொல்றேன்..."

"எதுக்கு தேவா... அவங்களை கஷ்டபடுத்திக்கிட்டு நான் தனியா இருந்துப்பேன்.."

"நீ சும்மா இரு... உனக்குன்னா அவங்க வருவாங்க... " என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் விடைப்பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

ஆட்டோவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு அந்த கடற்கரை மணலில் கொஞ்சம் வேகமாகவே நடந்தாள் யுக்தா...

காலையில் எழுந்ததிலிருந்தே மிகவும் சந்தோஷமாக இருந்தாள் அவள்... எழுந்ததும் கவியிடமிருந்து ஃபோன்... அவள் சமாதானமாகிவிட்டாள்... இவள் காதலைப் பற்றி எதுவும் பேசவில்லை அவள்... சாதாரணமான பேச்சுகள் தான் அவர்களுக்குள் இருந்தது... குலதெய்வம் கோவில்ல வேண்டுதல் இருக்கு அதனால் தான் ஊருக்கு வரவில்லை... அது முடிஞ்சதும் வரேன் என்றாள்... கண்டிப்பாக இவளுக்காக தான் வேண்டியிருப்பாள்... வழக்கம் போல ரெண்டு நாட்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டார்கள்...

இந்த சந்தோஷத்தோடு வீட்டில் உலவிக் கொண்டிருந்தாள் யுக்தா... அப்போது தான் பிருத்வி ஃபோன் பண்ணி நேற்று போலவே பீச்க்கு வரமுடியுமா..?? என்று அழைத்தான்.. இவளைப் பற்றி சொல்லவா வேண்டும்... இதோ உடனே கிளம்பிவிட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.