(Reading time: 32 - 64 minutes)

"மா பிருத்வி நான் சொன்னது உண்மைதான்... நான் உங்களை காதலிக்கிறேன்.. அதுவும் இப்ப இல்லை.. 12வருஷத்துல உங்களை நினைக்காத நாளே இல்ல... எப்போ எனக்கு உங்க மேல காதல் வந்துச்சுன்னுல்லாம் தெரியாது... ஆனா நான் உங்களை காதலிக்கிறேன்...

என்னப் பார்த்தா லூசு மாதிரி தெரியலாம்... இல்ல என்மேல கோபம் கூட வரலாம்... சொல்லாத காதலுக்கு மதிப்பில்லைன்னு நான் எப்பவோ படிச்சிருக்கேன் பிருத்வி...

உங்கக்கிட்ட என் காதலை சொல்லாம என்னோடவே மண்ணோடு மண்ணா புதைஞ்சு போகறதை நான் விரும்பல...

எனக்கு தெரியும் என் காதல் நிறைவேறாதுன்னு... அட்லீஸ்ட் என் காதலை உங்கக்கிட்ட சொல்லிட்ட திருப்தியாவது எனக்கு இருக்கட்டுமே...

அதுமட்டுமில்ல... மனசுக்குள்ள காதலை வச்சிக்கிட்டு ஜஸ்ட் ஒரு ஃப்ரண்டா உங்க கூட பழக முடியல பிருத்வி... அதுக்கு கொஞ்சம் எனக்கு டைம் எடுக்கும்... ரீஸன் சொல்லாம உங்களை தவிர்க்கிறதுக்கு... உங்கக்கிட்ட என்னோட சிட்டுவேஷனை சொல்லிடலாமில்லை..."

"......"

"நீங்க கவலைப்படாதீங்க பிருத்வி... உங்களுக்கும் சப்னாவுக்கும் நடுவுல நான் வரமாட்டேன்... இன்னும் ஒரு மாசம் தான் இங்க இருப்பேன்... அப்புறம் நியூயார்க் போய்டுவேன்... உங்களை என்னைக்கும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்.." அவள் மனதில் இருந்ததை சொல்லிவிட்ட திருப்தியுடன் அவன் பேசுவதற்கு முன் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

நடுநிசி ஆகியும் தூக்கம் வரவில்லை பிருத்விக்கு... யுக்தா அவள் தூக்கத்தை தொலைத்தது மட்டுமில்லாமல்... இன்று அவனது தூக்கத்தையும் சேர்த்து தொலைத்திருந்தாள்... அவன் சிந்தனை முழுவதும் யுக்தாவைப் பற்றியே இருந்தது... அவள் சொன்னது போல் அவளை பைத்தியம் என்று நினைக்கவோ... இல்லை அவள் மீது கோபப்படவோ முடியவில்லை...

இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவனுக்கு புரியவில்லை... சிறுவயது ஞாபகம் அவனுக்கும் இருக்கிறது... ஆனால் அதைப் பெரிதாக யுக்தாவிடம் பேச அவன் நினைத்ததில்லை... ஆனால் அவள் எதையும் மறக்காமல் நினைத்துக் கொண்டிருப்பது அவனுக்கே ஆச்சர்யமான விஷயம் தான்... ஆனால் இவன் மேல் காதலோடு இருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை... இது தெரியாமல் அவளோடு நட்பாக பழகி அவனை அறியாமலேயே அவளுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறானே...

அவளே புரிந்துக் கொண்டு விலகிச் செல்வதில் சந்தோஷம் தான்... ஆனால் நியூயார்க் போகப் போகிறேன் என்கிறாளே... கொஞ்ச நாட்களுக்குள் முன் தானே நான் இங்கேயே இருக்கப் போகிறேன் என்று இவனிடம் கூறினாள்... இப்போது போகிறேன் என்று அவள் கூறினாள் என்றால் அதற்கு காரணம் இவன் தானே...

யுக்தாவின் மனதில் காயத்தை ஏற்படுத்திவிட்டு சப்னாவுடன் இவனால் சந்தோஷமாக வாழ முடியுமா...?? அவன் மனது கேட்கும் கேள்விக்கு பிருத்வியால் பதில் சொல்ல முடியவில்லை... இதற்கு தீர்வு தான் என்ன..?? இதற்கான தீர்வை பிருத்வி கண்டுப்பிடிப்பானா..?? இல்லை விதி இதற்கு ஒரு தீர்வு வைத்திருக்கிறதே... அதை தான் அவன் ஏற்பானா..??

யுக்தா நீ இப்படி சுயநலமா இருப்பேன்னு நான் நினைக்கவேயில்லை... உன் காதலை பிருத்வி கிட்ட சொன்னா போதும்ன்னு நினைச்சு பிருத்விக்கு உறுத்தலை ஏற்படுத்திட்டியே... அவர் எப்படி அதிர்ச்சியா உட்கார்ந்துக்கிட்டு இருந்தார்ன்னு பார்த்தல்ல..." அவள் மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவளிடம் பதிலில்லை...

இரண்டு நாட்களாக என் காதல் சொல்லாமலேயே செத்துப் போச்சான்னு அவ உருகிக்கிட்டு இருந்ததும்... தேவா மனசுல என்னை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருந்திருக்குமோன்னு அவ யோசிச்சதும் தான் அங்க தேவாவை பார்க்கவும் அவளை அறியாமலேயே அதை வெளிப்படுத்திவிட்டாள்... ஆனால் அதுவே இவளுக்கு இப்போது ஆறுதலாக இருக்கிறது...

"சொன்னா என்ன... அந்த திருப்தியோடு நான் காலம் முழுக்க வாழ்ந்திடுவேன்... நான் நியூயார்க் போய்டுவேன் அப்புறம் பிருத்வி எல்லாமே மறந்துடுவார்... சப்னாக்கூட அவர் சந்தோஷமா இருப்பார்..." அவள் மனசு கேட்டக் கேள்விக்கு அவள் மனசே பதில் சொல்லிக் கொண்டது...

"சரி.. நீ நியூயார்க் போறேன்னு சொல்றியே... அப்போ கவியோட பிருத்வி தான் உனக்கு முக்கியமா...?? அவளையும் விட்டுட்டு போகப் போறீயா..??"  என்று அவள் மனது திரும்பவும் கேள்வி கேட்டது...

"அவளை விட்டுட்டு போக எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு... ஆனா என்னோட நிலைமை புரிஞ்சா.. அவளே என்ன நியூயார்க் போக சொல்லுவா... நான் நிரந்தரமா அங்கேயே இருக்கப் போறதில்லையே... பிருத்வியோட பிரிவை ஏத்துக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும்... இங்கயோ... இல்ல பெங்களூர் போனாலோ மத்தவங்க மூலமா பிருத்வி பத்தி அடிக்கடி கேள்விப்பட வேண்டியிருக்கும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.