(Reading time: 32 - 64 minutes)

த்தனை பேர் முன்னாடி தேவாவை நான் வேண்டாம்ன்னு சொன்னது அவங்களுக்கு கஷ்டமாக தானே இருந்திருக்கும்... என்ன நிதானாமா நேரம் பார்த்து இந்த டாபிக்கை பேசியிருக்கலாம்... அத்தைக்கு எதிலேயும் அவசரம் தான்..."

"உன்னை இப்படி பேசியிருக்காங்க... அப்பவும் அவங்க மேல நீ கோபப்படலையே... ரொம்ப அதிசயமா இருக்கு யுக்தா..."

"விடுங்க பிருத்வி... என்ன தான் அவங்க எனக்கு ரத்த சம்பந்தப் பட்ட உறவா இருந்தாலும்...  சின்ன வயசுல இருந்து அவங்க அவ்வளவா நெருக்கம் கிடையாது... அதனால அவங்க பேசினது என்னோட மனசை கஷ்டப்படுத்தல... "

என்று சொன்னாள்...

சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பிவிட்டனர்... அவள் அத்தை பேசியது அவளுக்கு அவ்வளவா வருத்தத்தை ஏற்படுத்தவில்லை... ஆனால் விரைவில் அவளுக்கு நெருக்கமானவர்களே அவள் மீது அதே குற்றத்தை சுமத்தப் போகிறார்களே அப்போது அவள் என்ன செய்யப் போகிறாள்..??

தேவாவை எப்படி பார்ப்பது... அத்தை வீட்டுக்கு போனால் ஏதாவது சொல்வார்களோ என்று கவி நினைத்துக் கொண்டிருந்த போதே... தேவாவே அவளை காண அங்கு வந்தான்...

"ஹாய் சங்கு... மாமா அத்தை கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போலாம்னு தான் இங்க வந்தேன்... சாவித்திரி அத்தை தான் அவங்க நேத்தே கிளம்பிட்டதா சொன்னாங்க...

அம்மா இப்படி பேசுவாங்கன்னு நான் நிச்சயமா எதிர்பார்க்கலை சங்கு..." என்றான் தேவா... ஆனால் அவன் பேசியும் அவள் அமைதியாக இருந்தாள்..

"நீயும் அம்மா மேல கோபமா இருக்கேன்னு தெரியுது... என்ன பண்ண அம்மா பேசினது எனக்கும் பிடிக்கலை தான்... ஆனா அவங்க என்னோட அம்மாவா போயிட்டாங்களே.."

"........"

"சங்கு... எங்க அம்மா ரெண்டு ஆம்பள பசங்களுக்கு அப்புறம் பொறந்த ஒரே செல்ல பொண்ணு... ரெண்டு அண்ணனுங்களுக்கு செல்ல தங்கச்சின்னு செல்லமா வளர்ந்தவங்க...

புகுந்த வீட்டிலேயும் போய் புது உறவுகளோடு இருக்கும் சந்தர்ப்பம் அமையல... எங்க தாத்தா பாட்டிக்கு எங்க அப்பா ஒரே பையன்... அப்பாக்கு இங்கையே வேலை... தாத்தாவும் பாட்டியும் சொந்த ஊரை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க...

ஆரம்பத்திலேயே தனிக்குடித்தனம்... சுதந்திரமா இருந்துட்டாங்க... சரி எங்களை வளர்க்கும் பொறுப்பாவது அவங்களுக்கு இருந்ததா...?? தனியா இருக்கோம் பசங்களை நாங்க வளர்க்கிறோம்ன்னு சொல்லி தாத்தா பாட்டியே எங்களை வளர்த்தாங்க... எந்த பொறுப்புமே அவங்களுக்கு இருந்ததில்லை... அவங்க நினைக்கிறது நடக்கனும்... எல்லாமே அவங்க இஷ்டப்படி இருக்கனும்... அப்பாவும் அவங்க இஷ்டப்படியே விட்டுட்டாரு... யாரும் இப்படி இருன்னு சொல்ல இருந்ததில்லை...

எங்க கல்யாணம் அவங்க இஷ்டப்படி நடக்குனும்னு அம்மா நினைச்சாங்க... அதிலேயும் தர்ஷினிக்கு தேடாமலே வரன் கிடைச்சிடுச்சு... அதனால என்னோட கல்யாணமாவது அவங்க விருப்பப்படி இருக்கனும்ன்னு நினைச்சாங்க... யுக்தா அதுக்கு ஒத்துக்கலன்னதும்...அவங்களுக்கு கோபம்... என்ன பேசறோம்ன்னு தெரியல... "

"புரியுது தேவா... நானும் சின்ன வயசிலேருந்து அவங்களை பார்த்துகிட்டு தானே இருக்கேன்... ஆனா அத்தனை பேர் முன்னாடி கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணை இப்படியெல்லாம் பேசறாங்களே... அவ வாழ்க்கையை அது பாதிக்காதா...??"

"நானும் அப்பாவும் அம்மாவோட தப்பை புரிய வக்க முயற்சி பண்ணோம்... ஆனா இப்போ அவங்க புரிஞ்சிக்கிற நிலைமையில் இல்ல... எனக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கும்போது... இதுக்கு போய் யுக்தாவை அப்படி பேசிட்டோமேன்னு அப்போ அவங்க தப்பை புரிஞ்சுப்பாங்க..."

"தேவா... அத்தையை விடு, சம்யு உன்னை வேண்டாம்ன்னு சொன்னது உனக்கு கஷ்டமாக தானே இருந்துச்சு..."

"அப்படியெல்லாம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்... கொஞ்சம் வருத்தமா தான் இருந்துச்சு... ஆனா யுக்தாவை காதலிக்கிறேன்.. அவ இல்லைன்னா உயிரை விட்டிடுவேன்னு டயலாக் எல்லாம் விட மாட்டேன்...

நான் கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட மனைவியை லவ் பண்ணனும்னு நினைக்கிற டைப்... அது யுக்தான்னு அம்மா சொன்னதால அவக்கூட என் லைஃப் எப்படியிருக்கும்ன்னு திங்க் பண்ணியிருக்கேன்... ஆனா அவ விருப்பத்தை பத்தி தெரியாததால நான் அளவுக்கு அதிகமால்லாம் யோசிச்சதில்லை... எப்போ அவளுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சதோ... அப்பவே அந்த விஷயம் முடிஞ்சிடுச்சு...

இனி முகம் தெரியாத எனக்கு மனைவியா வரப்போறவள நினைச்சு கனவு காண வேண்டியதுதான்.."

"நீ எப்படி ஃபீல் பண்ணுவியோன்னு நினைச்சு கவலைப்பட்டேன் தேவா..."

"ஹே... விடு இதெல்லாம் பெரிய விஷயமில்லை... ஆ அப்புறம் நான் நாளைக்கு ஊருக்குப் போறேன்... அங்க போய் அத்தை மாமாவை பார்த்து மன்னிப்பு கேட்டுக்கிறேன்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.