(Reading time: 32 - 64 minutes)

நியூயார்க் போய்ட்டா ஓரளவுக்கு அதை தவிர்க்கலாம்... அதனால நான் நியூயார்க் போகறது தான் கரெக்ட்... இவ்வளவு நாள் நானும் கவியும் பிரிஞ்சு தானே இருந்தோம்... எங்க அன்பு என்ன குறைஞ்சா போய்டுச்சு... கவி என்ன கண்டிப்பா புரிஞ்சிப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... இந்த கேள்விக்கும் அவள் மனசு பதில் சொல்லிக் கொண்டது...

ஆனால் ரெண்டுநாளா அவ மனசு கேட்ட சில கேள்விக்களுக்கு அவளுக்கு விடையே கிடைக்கவில்லை... ஏன் பிருத்வியின் மேல் இருந்த நட்பு காதலா மாறுச்சு...?? ஏன் பிருத்வியின் மனசுல என்ன இருக்குன்னு தெரியாமலேயே என் காதல் ஜெயிக்கும்ன்னு நம்பிக்கை வந்துச்சு..?? ஏன் இங்க வந்த உடனே சப்னா பத்தி தெரியாம என் நம்பிக்கை அதிகமாகும்படியான செயல்கள் நடந்துச்சு..??

கடவுள் நான் கேக்காமலேயே நல்ல அப்பா, அம்மா, சகோதரின்னு எல்லாமே கொடுத்தவரு... நான் வேண்டிக் கேட்டும் பிருத்விய மட்டும் ஏன் கொடுக்கல?? ஏன் நான் வேண்டிக் கேட்டது அவருக்கு தெரியவில்லையா..?? இல்லை தெரிஞ்சும் சும்மா இருக்காரா..?? எத்தனையோ பேருக்கு காதல் அழகானதா அமஞ்சிடுது... எனக்கும் மட்டும் ஏன் காலம் முழுமையும் அது வலியக் கொடுக்குது...?? இவளின் இத்தனை கேள்விகளுக்கும் எவ்வளவு யோசித்தும் விடையே கிடைக்கவில்லை...

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்...

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்...

தவம் போல் இருந்து யோசிக்கிறேன்... அதை தவணை முறையில் நேசிக்கிறேன்...

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்...

கேட்பதை அவனோ அறியவில்லை...

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே...

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை...

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்...

உறக்கம் இல்லா முன்னிரவில்... என்

உள்மனதில் ஒரு மாறுதலா...

உறக்கம் இல்லா முன்னிரவில்... என்

உள்மனதில் ஒரு மாறுதலா...

இரக்கம் இல்லா இரவுகளில்... இது

எவனோ அனுப்பும் ஆறுதலா...

எந்தன் சோகம் தீர்வதற்கு...

இது போல் மருந்து பிரிவில்லையே...

அந்த குழலை போல் அழுவதற்கு...

அத்தனை கண்கள் எனக்கில்லையே...

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்...

நாம நினைச்சதெல்லாம் உடனே நடந்துட்டா... நாம கேட்டதெல்லாம் உடனே கிடைச்சிட்டா... கடவுள்ன்னு ஒருத்தர் இருக்கறதையே நாம மறந்துடுவோம்...

நாம நினைச்சது உடனே நடந்துட்டா... அதில் இருக்கும் சுவாரசியம் உடனே காணாமல் போய்விடும்... நாம கேட்டது உடனே கிடைச்சிட்டா அதில் இருக்கும் ஈர்ப்பு குறைந்துவிடும்... அதற்கு மதிப்பே இல்லாமல் போய்விடும்... அதனால் தான் கடவுளுக்கு தெரியும்... யாருக்கு... எதை... எப்போது கொடுக்கனும் என்று...

யுக்தாவிற்கும் அவளின் பிருத்வியை கொடுக்க வேண்டும் என்றுதான் கடவுள் நினைக்கிறார்... ஆனால் அதிலும் அவர் ஏதோ கணக்கு வைத்திருக்கிறார்... அதை அறியாத யுக்தா... அவளின் பிருத்வி அவளுக்கு கிடைக்கும் வரை... இப்படி வேதனை பட்டு தானே ஆக வேண்டும்.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.