(Reading time: 21 - 41 minutes)

09. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

ன்னிரண்டு வருடங்களில் அவர்கள் ஊரில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்... அவர்கள் வீடு அப்படியே தான் இருந்தது... அது கேசவன் பார்த்து பார்த்து கட்டிய வீடு... அப்போது  யுக்தாவும்... கவியும்... சிறியவர்கள்... அப்போது இருந்த சின்ன வீட்டை இடித்து கொஞ்சம் பெரிய வீடாக கட்டினார் கேசவன்... சாவித்திரிக்கு இந்த வீட்டை விட்டு போகவே மனசில்லை...

கவி சென்னையில் இருந்து வேலை பார்க்க வேண்டும் என்றதால் தான்... அங்கே சென்னையில் வீடு இருக்கும் போது ஏன் வெளியில் தங்க வேண்டும் என்று மாதவனும் சுஜாதாவும் சொன்னதால் ஒரு வருடமாக கவியோடு சேர்ந்து சென்னை வீட்டில் இருக்கிறாள் சாவித்திரி... இருந்தாலும் இந்த வீட்டை ஆளை வைத்து பராமரித்துக் கொண்டிருக்கிறாள் அவள்... அதுவும் இவர்கள் வந்து தங்கப் போவது தெரிந்து.. அதற்கு தகுந்த ஏற்பாடுகளை ஏற்கனவே செய்ய சொல்லி இருந்தாள் சாவித்திரி.

யுக்தாவிற்கு இங்கு வந்ததும் கேசவன் ஞாபகம் ரொம்ப அதிகமாகவே வந்தது...

Kadalai unarnthathu unnidame

அவர் புகைப்படத்துக்கு முன் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்... அதை உணர்ந்த கவி அவளை ஆறுதல் படுத்தினாள்..

ட்ராவல்ஸில் கார் ஏற்பாடு செய்து வந்திருந்தால் நள்ளிரவே வந்துவிட்டார்கள்... விடிந்தால் பந்தகால் அது முடிந்ததும் முதல் நலங்கு தாய்மாமா வீட்டு சார்பாகத் தான் வைக்க வேண்டும்... அதுவரை சிறிது ஓய்வெடுக்க முடிவு செய்திருந்தனர்...

நான்கு மணிக்கு நல்ல நேரம் என்பதால் அப்போது பந்தகால் நடைப்பெற்றது... யுக்தாவும் கவியும் வீட்டிலியே இருந்துக் கொண்டனர்... அவர்கள் ஊரில் பந்தகால் என்பது சாதாரணமாக சென்னையில் செய்வது போல் இல்லாமல்... அதற்கே மேள தாளம் வைத்து... ஊரில் உள்ளவர்களை அழைத்து... சாப்பாடு போட்டு விமர்சையாக நடக்கும்...

தாய்மாமா வீட்டு நலங்கு என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தனர் சுஜாதாவும் சாவித்திரியும்... அப்போதே தாய்மாமா வீட்டு சீரையும் தர்ஷினியிடம் கொடுக்க வேண்டும்... அவளுக்கு கொண்டு வந்த நகை, புடவை, மற்ற சீர்வரிசைகளையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

 பந்தகால் நடுவதிலிருந்து அனைத்தையும் தனது வீடியோ கேமராவில் பதிவு செய்துக் கொண்டிருந்தான் தேவா...

அழகான எளிய காட்டன் புடவை அணிந்துக் கொண்டு கவியும் யுக்தாவும்... நலங்குக்கு வந்தார்கள்... நலங்குக்கு காட்டன் புடவை, பெண் அழைப்புக்கும் வரவேற்புக்கும் டிசைனர் புடவை, திருமணத்திற்கு பட்டுபுடவை என்று தேடி தேடி இந்த ஒருவாரத்தில் வாங்கி வைத்திருந்தனர்.

இருவரும் உள்ளே நுழைந்ததும்... "வெய்ட் வெய்ட்... ரெண்டுப்பேரும் கொஞ்சம் நில்லுங்க" என்று தேவா நிறுத்தினான், இருவரும் புரியாமல் பார்த்தனர்...

"ரொம்ப நாளுக்கு அப்புறம் சிஸ்டர்ஸ் ரெண்டுபேரையும் ஒன்னா பாக்கறேன்... இருங்க உங்களை ஒரு ஸ்டில் எடுக்கறேன்..."

"ஆ... சரி தேவா..."-கவி.

அவன் மொபைலில் இருவரையும் புகைப்படம் எடுத்தான்..

" தேவா.. வாட்ஸ் அப்ல இந்த போட்டோவை எனக்கு அனுப்பிடு.."- கவி.

"எப்படி இருக்க தேவா..." - யுக்தா.

"நான் நல்லா இருக்கேன் யுக்தா.. நீ எப்படி இருக்க..."

"நல்லா இருக்கேன் தேவா..."

இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே லஷ்மி அத்தை அங்கு வந்தாள்... யுக்தாவிடம் நலம் விசாரித்துக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் லஷ்மி...

"என்ன தேவா... சம்யுவை பார்த்ததும் உன்னோட ரியாக்டிங் எப்படி இருக்குமோ..?? அப்படின்னு நான் எவ்வளவு திங்க் பண்ணி வச்சிருந்தேன்..

நீ என்னடான்னா சும்மா நலம் விசாரிப்போட விட்டுட்டியே..."

"ஏன் சங்கு... வொய் திஸ் கொலவெறி.. பன்னிரண்டு வருஷத்துக்கு அப்புறம் என்ன பார்க்கிற யுக்தா... என்னடா இவன் நம்மல பார்த்து இப்படி வழியுறான்னு நினைக்கனுமா...??"

"பரவாயில்ல தேவா... நீ கூட புத்திசாலித்தனமா யோசிக்கிற.."

"ஆமாம் என்ன ஒருவாரமா நீ ஃபோன் கூட பண்ணல சங்கு... யுக்தாவை பார்த்தா மத்தவங்கல்லாம் உன்னோட கண்ணுக்கு தெரியமாட்டாங்களே.."

"நீ வேற தேவா... இருக்கற வேலையில சம்யுக் கூட இருக்கவே நேரம் கிடைக்கல.. ஆமா நீ ஃபோன் பண்ணலாம்ல்ல.. அவங்க வந்ததைப் பத்தி கூட கேக்கலையே..."

"ஹே.. யாரு கேக்கல... மாமாவே ஃபோன் பண்ணாரு... கல்யாண வேலை எப்படி நடக்குதுன்னு கேட்டாரு.. நானும் எல்லாரையும் பத்தி விசாரிச்சேன், எனக்கும் இங்க நிறைய வேலை இருந்துதில்ல.. அதான் பேச முடியல..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.