(Reading time: 21 - 41 minutes)

ன்று இரவு ஊருக்கு போகனும்ன்னு மாதவன் சொன்னதால தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுஜாதா... லஷ்மி அப்படி பேசினாலும்.. தர்ஷினி மறுவீடு முடிஞ்சு புகுந்த வீட்டுக்கு போகிறவரைக்கும் மாமா வீட்டு சார்பில் சாவித்திரி இங்க இருந்து தர்ஷினியை வழி அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தார்கள்...

சுஜாதாவுக்கு மனசே ஆறவில்லை... அம்மா அப்பா முகத்தைக் கூட பார்க்காம வளர்ந்தவ தான் சுஜாதா... குடும்பத்துக்காகவும் பாசத்துக்காகவும் அவ ரொம்ப ஏங்கியிருக்கா... வளர்மதிக்கு கல்யாணம் ஆகி செந்தில் அவர்களோடு இருக்க இவளை அழைத்த போது... புதிதாக திருமணம் ஆனவர்களோடு இருந்து தொல்லை தர வேண்டாம் என்று எண்ணி தான் அவள் மறுத்தாள்... ஆனால் வளர்மதியும் இல்லாமல் தனியாக கஷ்டப்பட்டிருக்கிறாள்...

அப்போது தான் மாதவன் இவளை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக கூறினார்... அவளுக்கும் மாதவனை பிடித்திருந்தது.... ஆனால் அவர் குடும்பத்தில் தன்னை மருமகளாக ஏற்பார்களா என்று இவள் யோசித்தாள்...

ஆனால் அந்த சந்தேகத்துக்கே இடமில்லாமல் அவளை அந்த வீட்டு மருமகளாக்க சம்மதித்தது மட்டுமில்லாமல்... அனைவரும் இவள் மீது அன்பும் செலுத்தினர்... தனக்கும் ஒரு குடும்பம் கிடைத்ததில் இவளும் சந்தோஷப் பட்டாள்.

ஆனால் அப்போதே லஷ்மி மற்றவர்களை போல் இருக்கமாட்டாள்... துடுக்காக பேசுவது... மற்றவர்களை அவள் பேச்சால் காயப்படுத்துவது தான் அவளது குணம்... அதுவும் சாவித்திரியிடம் தான் மிகவும் கடுமையாக நடந்துக் கொள்வாள்...

ஆனால சாவித்திரி அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்... என்னவோ என்னை ஆரம்பத்திலிருந்து லஷ்மிக்கு பிடிக்கலை.... இருந்தாலும் நான் அதை பொறுத்துப்பேன்... எங்கம்மா சொல்லியிருக்காங்க... வீட்டு பிறந்த பொண்ணுங்களை கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டுக்கு வரும் போது கண் கலங்க வச்சு அனுப்பக் கூடாது... அது பாவம்ன்னு சொல்வாங்க... அதான் நான் லஷ்மி பேசறதை கண்டுக்கமாட்டேன்... நீயாவது அவக்கிட்ட நல்ல பேரு வாங்குன்னு சொல்வாள்...

அதிலிருந்து சுஜாதாவும் லஷ்மி மனசு நோகாமல் தான் நடந்திருக்கா... இப்போ கூட தேவா யுக்தா கல்யாண பேச்சை லஷ்மி மனசு கஷ்டப்படாம வேண்டாம்ன்னு சொல்லனும் என்று தான் யோசித்திருந்தாள்...

ஆனால் லஷ்மி இப்படி திடிரென்று இந்த பேச்சை ஆரம்பித்து... அத்தனை பேரின் முன்னாடி தன் மகளை இப்படி அவமானப்படுத்துவாள் என்று சுஜாதா எதிர்பார்க்கவில்லை... இவ்வளவு நாள் லஷ்மி மனசு கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு இவள் நினைத்ததுக்கு இது தான் பரிசா..?? என்று அவள் மனது கேள்விக் கேட்டது...

ஆனால் இத்தோடு இது முடியபோவதில்லை... இன்று மட்டுமல்ல... இன்னும் கூட இந்த மாதிரி அவமானங்களை தன் மகள் பட வேண்டியிருக்கும் என்றோ... ஏன் தன் வாயால் கூட தன் மகளை இப்படி பேசப் போகிறாள் என்றோ அப்போது அவள் அறியவில்லை... ஊருக்கு கிளம்ப தயாரானாள்.

சென்னைக்கு போக எல்லோரும் தயாராகிவிட்டனர்... சாவித்திரி இப்போது அவர்கள் கூட செல்லப்போவதில்லை... ஆனால் இப்போது சங்கவியும் சென்னைக்கு வரப் போவதில்லை என்று கூறினாள்... பெரியவர்களுக்கு ஆச்சர்யம்... ரெண்டுப்பேரும் ஒன்னா இருக்கனும்ன்னு தானே நினைப்பாங்க... இப்போ என்ன ஆச்சுன்னு..??

ஆனால் யுக்தா உடனே அதற்கு பதில் சொன்னாள்... "அம்மா... கவி சாவிம்மாக் கூட வரேன்னு சொல்லிட்டா.. நாம போகலாம் என்றாள்..." ரெண்டுபேருக்கும் ஏதோ சண்டைன்னு பெரியவர்கள் நினைத்தார்கள்..

 என்னத்தான் ரொம்ப ஒற்றுமையான சகோதரிகளாக இருவரும் இருந்தாலும்...  இவர்களுக்கும் சில சமயத்தில் கருத்து வேறுபாடு வரும்... இதில் ஒருவர் மீது ஒருவருக்கு கோபமும் வரும்... ஆனால் அந்த கோபம் இரண்டு நாள் கூட தாங்காது... நீ தான் சமாதானப் படுத்த வேண்டும் என்று இருவருமே நினைத்ததில்லை... உடனே தங்கள் மீது தவறு இல்லையென்றாலும் ஒருவருக்கொருவர் பேசிவிடுவர்...

இப்போதும் ஏதோ அதுபோல் சண்டை தான்... இருவரும் சீக்கிரம் சமாதானமாகி விடுவர் என்று பெரியவர்களும் அதை கண்டு கொள்ளவில்லை... சாவித்திரி சங்கவியை தவிர மற்ற மூவரும் புறப்பட்டனர்...

அவர்கள் சென்றதும் கவி அவள் அறைக்கு வந்தாள்...  கவி புறப்படலாமா என்று சம்யு கேட்ட போது இவள் இப்போது வரப் போவதில்லை என்று மறுத்து விட்டாள்... அதற்கு சம்யுவும் " நீ என் மேலே கோபமா இருக்கேன்னு தெரியுது... நீ எப்போ வரனும்னு நினைக்கிறீயோ அப்ப வா... நான் போகிறேன் என்று கிளம்பிவிட்டாள்.. அதைத் தான் இப்போது யோசித்து கொண்டிருந்தாள் கவி...

உண்மையில் சம்யு மீது இவளுக்கு கோபமில்லை... கவி கடவுள் கிட்ட அடிக்கடி வேண்டிக்கிற விஷயமே... ரெண்டுப்பேரும் ஒற்றுமையா இருக்க வேண்டும் என்பதுதான்... ஆனால் அவர்களுக்கு நடக்கும் விஷயங்கள் கூடவா ஒற்றுமையாக நடக்க வேண்டும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.