(Reading time: 21 - 41 minutes)

"த்தை நான் கல்யாணத்த பத்தியே யோசிக்கலன்னு சொல்றேன்... நீங்க கல்யாணத்தை தள்ளி வச்சுக்கலாம்ன்னு சொல்றீங்க..."

"ஏன் கல்யாணம் வேண்டாம்..??? என்னோட பையனை பிடிக்கலையா...?? அவன் கருப்பா இருந்தாலும்... கலையா தானே இருக்கான்... நல்லா படிச்சிருக்கான்... நல்ல வேலையில் இருக்கான்.. அப்புறம் என்ன...???

"அத்தை தேவாப் பத்தி ஒன்னும் பிரச்சினை இல்லை... நான் இப்போ கல்யாணம் வேண்டாங்கறத பத்தி தான் பேசறேன்.."

"ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த கிராமத்துல வந்து கஷ்டப்படனும்ன்னு பார்க்கிறீயா..?? நீ சென்னையிலையே தேவாக் கூட இருக்கலாம்... நீ நியூயார்க்லயே இருக்கனும்ன்னாக் கூட தேவாவுக்கு அங்க ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணலாம்..."

"அத்தை... திரும்ப திரும்ப கல்யாணம் நடக்கப் போறதப்பத்தியே பேசறீங்க... நான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றேன்..."

"யுக்தா.." என்று லஷ்மி பேசும் முன்னரே மாதவன் குறுக்கிட்டார்...

"லஷ்மி... யுக்தா இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றாளே... எதுக்கு இப்போ விடாப்பிடியா அதைப்பத்தியே கேக்குற... விடு.."

"இல்லண்ணா..."

"அம்மா... யுக்தாக்கு இஷ்டமில்லைன்னா விடுங்க... எதுக்கு கட்டாயப்படுத்திறீங்க.." தேவாவும் அவன் கருத்தை கூறினான்.

"நீ சும்மா இரு தேவா... இங்கப் பாரு யுக்தா நீ இந்த கல்யாணம் வேண்டான்னு சொல்றீயா..  இல்லை என்னோட பையனை வேண்டாம்ன்னு சொல்றீயா..."

"அத்தை இப்படி கேட்டதுக்கு அப்புறம் நான் என்ன சொல்ல... எனக்கு தேவாவை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை... காரணம் என்னன்னு கேக்காதீங்க..."

"வெளிநாட்டுல இருந்து வந்திருக்கல்ல... அந்த திமிரு தானே... என் பையனை வேண்டாம்ன்னு சொல்ற... நீ என்ன வேண்டாம்ன்னு சொல்றது... உன்னை மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்காம இருக்கறது என்னோட பையனுக்கு நல்லது தான்...

அங்க வெளிநாட்டுல எத்தனை பேரு கூட சுத்திக்கிட்டு இருந்தீயோ... இங்க பட்டணத்துக்கு போறதுங்களே கெட்டு கீரைவிதையாகி வருதுங்க..."

"லஷ்மி... என்ன விட்டா ரொம்ப பேசுற... ஏதோ தங்கச்சியாச்சேன்னு பார்த்தா... என் பொண்ணை கேவலமா பேசுற..."

"என்ன நான் தப்பா சொல்லிட்டேன்... வெளிநாட்டுல இருக்க என்னோட அண்ணன் பொண்ணை தான் என்னோட பையனுக்கு கட்டப் போறேன்னு சொன்னதும்... எத்தனையோ பேரு முகத்தை சுளிச்சாங்க... அந்த பொண்ணு குடும்பத்துக்கு லாயக்கு படுமான்னு கேட்டாங்க...

நான் தான் அண்ணன் பொண்ணாச்சேன்னு தேவாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேன்... ஆனா இது தப்புன்னு இப்போ தானே தெரியுது... இவ என்ன என்னோட பையனை வேண்டாம்ன்னு சொல்றது... நானே சொல்றேன் இவ என் பையனுக்கு வேண்டாம்..."

"லஷ்மி... நீ அளவுக்கு அதிகமா பேசுற..."

"மாமா... அம்மா பேசனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்... அம்மா நீ முதலில் உள்ள வா..." என்று தேவா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விடாமல் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே போனான்...

தற்குப் பிறகு அங்கே இருக்க பிடிக்காமல் மாதவன் குடும்பம் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள்... சாவித்திரியும் சுஜாதாவும் தன் மகளை கேவலமாக பேசிய போதும் கூட இதுவரை குடும்பத்தில் எந்த பிரச்சனையையும் பெரிதாக்கதவர்கள் இப்போதும் கூட அமைதியாகவே இருந்தனர். இருந்தாலும் வீட்டிற்கு வந்ததும் புலம்ப தான் செய்தனர்...

"விடுங்க எதுக்கு புலம்பறீங்க... அவ கிடக்கறா... அவ பேசுனா என் பொண்ணு தப்பானவ ஆயிடுவாளா.. அதான் யுக்தா இப்போ கல்யாணம் வேண்டான்னு சொல்லிட்டாளே.. இத்தோடு விட்டிடுவோம்... லஷ்மியோட குணத்தை பத்தி தெரிஞ்சாலும் இப்படி கேவலமா யோசிப்பாளான்னு... நம்ம பொண்ணை அங்க கல்யாணம் பண்ணிக் குடுக்கறதுக்கு முன்னாடியே தெரிஞ்சுதே...

என்ன தான் தேவா நல்ல பையனா இருந்தாலும்... மாமனார், மாமியார் எல்லாருடனும் இருந்துதானே ஆகனும்... இது சரிப்பட்டு வராது..." என்று மாதவன் தான் அவர்களை சமாதானப்படுத்தினார்... ஆனாலும் தன் சொந்த ஊரிலேயே தன் மகள் அவமானப்படுத்தப்பட்டதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... திருமணமும் முடிந்துவிட்டதால்... இன்றே ஊருக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.

வீட்டிற்கு வந்ததும் தனியே சென்றுவிட்டாள் யுக்தா... அவளை தேடிச் சென்றாள் கவி...

"சம்யு... இன்னும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கீயா..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.