(Reading time: 21 - 41 minutes)

ன் காதல் திருமணத்தில் முடியாது என்று தெரிந்தே இவளுக்கு தேவாவின் மீது காதல் வந்தது.. இதோ இப்போது சம்யு தேவாவை மணக்க போவதில்லை என்றாலும் இவள் காதல் நிறைவேறுமா என்ன..?? பாசமாய் தன் அண்ணன் மகள் என்று சொன்ன சம்யுவையே அனைவரின் முன்னிலையில் கேவலப்படுத்திய அத்தை.. எப்போதுமே இவளை பிடிக்காது... இப்போது மட்டும் இவளை மருமகளாகவா ஏற்கப் போகிறார்..

மனிதர்களை விட பணம் தான் இப்போது அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கிறது... சம்யு இல்லையென்றால் அவளை விட வசதியானவளை தான் தேவாவிற்கு அவள் அத்தை தேர்ந்தெடுக்கப் போகிறாள்... தேவாவும் தன் அம்மாவின் விருப்பப்படி தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி இருக்கிறான்... இவளுக்கு தேவா கிடைப்பான் என்பது எப்போதுமே எட்டாத கனவு தான்...

இதில் இதே போல் தன் சகோதரியின் நிலைமையும் ஆக வேண்டுமா..?? இது தான் இப்போது இவளின் வருத்தம்... பிருத்வி சம்யுவின் காதலை ஏற்பானா...??? அப்படி ஏற்கவில்லையென்றால் தன் சகோதரியின் நிலைமை... அவள் வருத்தப்படுவதை இவளால் பார்க்க முடியுமா...??  இந்த குழப்பத்தில் இவள் சம்யு மீது கோபமாக இருப்பது போல் இருந்தால் தான் சம்யுவும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள்...

அதுமட்டுமல்ல இவள் குழப்பத்தில் இருக்கும் போது... தன் குலதெய்வ கோவில் பௌணர்மி பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு விளக்குப் போட்டு அம்மனிடம் வேண்டிக் கொள்வாள்... சிறுவயதில் தன் அன்னையோடு சேர்ந்து சென்று அவளுக்கும் இதில் ஒரு நம்பிக்கை...

சம்யுவின் காதல் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான்.. ஒருவேளை தோல்வியால் முடிந்தால் அதை தாங்கும் சக்தியை சம்யுவுக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வேண்டி கொள்ள போகிறாள்...

அதோடு அத்தனை பேர் முன்னிலையில் தேவாவை சம்யு வேண்டாமென்று மறுத்த போது... தேவாவின் முகத்தில் தோன்றிய வருத்தத்தை இவள் கண்டுக்கொண்டாள்... தேவாவிடம் இதைப்பற்றி பேசி ஆறுதல் சொல்ல வேண்டும்... இந்தக் காரணங்களால் தான் கவி ஊருக்குப் போக மறுத்துவிட்டாள்.

சென்னையை நோக்கி அந்த கார் பயணித்துக் கொண்டிருந்தது... கல்யாணத்தில் கலந்துக் கொண்ட அலுப்பில் சுஜாதாவும் மாதவனும் உறங்கிக் கொண்டிருந்தனர்... வரும்போது தான் ரயிலில் வர டிக்கெட் கிடைக்காததால் கார் ஏற்பாடு செய்துக் கொண்டு வந்தனர்... ஒருவாரத்திற்கு பின் கிளம்ப ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு தான் வந்தனர்... ஆனால் இப்போது மூன்றே நாட்களில் கிளம்புவதால் திரும்பவும் காரிலேயே செல்கின்றனர்... இருந்தாலும் இருவரும் உறங்கி கொண்டு வந்தனர்... ஆனால் யுக்தாவுக்கோ உறக்கம் வரவில்லை...

எதையுமே நிதானமாக செய்ய வேண்டும் என்று தான் யுக்தா நினைப்பாள்... பிருத்வியின் மீது காதல் இருந்தாலும்... கல்யாணத்தைப் பற்றி இப்போது அவள் யோசித்ததில்லை... சென்னையில் கவியோடும் பிருத்வியோடும் இருக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் போதும் என்று நினைத்து தான் இந்தியா வந்தாள்...

இங்கு பிருத்வியோடு பழக ஆரம்பித்த பின் ஒரு நல்ல தோழியாக இருந்து அதன்பின் தன் காதலை வெளிப்படுத்தலாம் என்றிருந்தாள்... அப்போதே கவியிடமும் தன் காதலைப் பற்றி கூறலாம் என்று நினைத்திருந்தாள்...

ஆனால் இந்த அத்தை செய்த குழப்பத்தில் கவிக்கு எல்லாம் தெரிந்துவிட்டது... அவளின் இப்போதைய நடவடிக்கை... இந்த காதல் பைத்தியக்காரத்தனம்... இதற்கு என்னுடைய ஒத்துழைப்பு இல்லை என்பதுதான்... கவியிடம் இவள் காதலை பற்றி சொல்லி புரிய வைப்பதற்கு பதிலாக... பிருத்வியிடமே உடனடியாக தன் காதலை சொல்லிவிட வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டாள் யுக்தா...

பிருத்வியின் பதிலை தெரிந்துக் கொண்டாள்... கவியின் கவலையாவது குறையும்... இவளுக்கு தெரியும் பிருத்வி இவள் காதலை மறுத்தாள்... இவளின் நிலைமையை நினைத்து கவி வருத்தப்படுவாள்... அதனால் தான் இவளும் இதுவரை கவியிடம் எதுவும் சொல்லாதிருந்தாள்... இப்போது பிருத்வியின் பதில் என்னவாக இருக்கும்... ஒருவேளை பிருத்வி இவள் காதலை மறுத்துவிட்டாள்... இவளின் நிலைமை என்ன..?? இப்போது இவளுக்கே புரியவில்லை...

உன் பேரை சொல்லும் போதே...

உள் நெஞ்சில் கொண்டாட்டம்...

உன்னோடு வாழத்தானே...

உயிர் வாழும் போராட்டம்...

நீ இல்லை என்றால் என்னாவேன்...

நெருப்போடு வெந்தே மண்ணாவேன்..

வெற்றியோ தோல்வியோ தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று யுக்தா முடிவெடுத்து விட்டாள்..

ஆனால் அவளுக்கு தெரியவில்லை... எப்போது சென்னைக்கு வருவோம்... இந்த யுக்தாவை எப்போது பார்ப்போம்... எப்படி பிருத்வியை திருமணம் செய்து கொள்வோம் என்று சப்னா மும்பையில் காத்து கொண்டிருக்கிறாள் என்று...

சப்னாவை பற்றி அறியும் முன்னரே... தன் காதலை பிருத்வியிடம் யுக்தா சொல்லிவிடுவாளா...???

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.