(Reading time: 21 - 41 minutes)

"ப்படி பேசனாங்க பத்தியா கவி... கல்யாணம் வேண்டான்னதும் என்னோட கேரக்டரை பத்தி தப்பா பேசறாங்க... வெளிநாட்டுல இருந்து வந்தா... தப்பானவளா இருக்கனுமா...??

இங்கத் தானே 12வயசு வரைக்கும் இருந்தேன்... பாட்டி பொண்ணுங்க எப்படி இருக்கனும்ன்னு நமக்கு சொல்லி கொடுத்திருக்காங்க தானே... அதுக்கப்புறமும் நம்ம அம்மா அப்பாவை பார்த்து தானே வளர்ந்தோம்... நம்ம குடும்பத்துல எவ்வளவு ஒழுக்கமா இருக்காங்கன்னு நமக்கு தெரியாதா...?? நான் தப்பான வழியில போய்டுவேனா..?? "

"விடு சம்யு... அவங்க சொல்லிட்டா அது உண்மையாயிடுமா...?? நாங்கெல்லாம் உன்னை அப்படி நினைப்போமா...?? அவங்க சொன்னதை மறக்கப் பாரு..??"

"கவி... தேவாவுக்கும் எனக்கும் கல்யாணம் பேசினது உனக்கு ஏற்கனவே தெரியுமா...??"

"சாரி சம்யு... அத்தை இதைப்பத்தி அடிக்கடி பேசுவாங்க... பொதுவா சொந்தத்துக்குள்ள இப்படி பேசறதெல்லாம் சகஜம் தானே... அதைப்பத்தி தீவிரமா பேசுனா அப்ப சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன்...

ஆனா அத்தை.. சித்தப்பாக்கிட்ட பேசினதோ... இல்லை இப்படி எல்லாருக்கும் முன்னாடி உன்கிட்ட கேப்பாங்க.. இதுமாதிரி கேவளமா பேசுவாங்கன்னோ தெரியாது.."

"சரி விடு கவி... எனக்கு இப்படி நடக்கனும்ன்னு இருக்கு..."

"சரி சம்யு... நான் ஒன்னு கேக்கட்டுமா...?? நீ ஏன் தேவாவை வேணாம்ன்னு சொன்ன..??"

"எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு தான் சொன்னேன்... அத்தை தான் பிடிவாதமா கேட்டாங்க... அதான் அப்படி சொன்னேன்..." தயக்கமாக சொன்னாள்.

"அத்தைக்கிட்ட சொன்ன காரணத்தையே என்கிட்ட சொல்லாத... கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம லைஃப் எப்படி இருக்கும்... நம்ம ஃப்ரண்ட்ஷிப் எப்படி இருக்கும்ன்னு நீயே என்கிட்ட பேசியிருக்க...

நமக்கு கல்யாண வயசு வந்துடுச்சு... இப்படி மேரேஜ் ப்ரபோசல்ஸ் வரும்... நமக்கு பிடிச்சா தான் நம்ம வீட்டில் தொடர்ந்து பேசுவாங்க... அப்படி வரன் வந்தா கொஞ்சமாவது யோசிப்போம்...

அத்தை கேட்டப்போ... யோசிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்கலாம்... அப்பா அம்மாக்கிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கலாம்... ஆனா நீ உடனே தேவாவை பிடிக்கலன்னு சொல்லிட்ட...

ஒருவேளை அத்தைக்கிட்ட சொன்ன மாதிரி இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னா... அப்போ கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தா அப்போ தேவாவை கல்யாணம் பண்ணிப்பியா..??"

"கவி... இந்த டாபிக்கை இத்தோடு விடேன்.."

"சம்யு... ஏன் தேவாவை வேண்டாம்ன்னு சொன்ன... தேவா உனக்கு நல்ல ஜோடி... தேவாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ ரொம்ப சந்தோஷமா இருப்ப.."

"கவி... தேவாவை என்னால அப்படி நினைச்சு பார்க்க முடியாது... தேவா என்ன யாரையும் என்னால அப்படி நினைச்சு பார்க்க முடியாது..."

"அப்படின்னா அதுக்கு என்ன அர்த்தம் சம்யு..."

"அதுக்கு அர்த்தம் நான் ஒருத்தரை லவ் பண்றேன்னு அர்த்தம்... ஆமாம் கவி நான் பிருத்வியை லவ் பண்றேன்... இப்போ இல்ல... நான் நியூயார்க் போனதில இருந்தே எனக்கு பிருத்வியை பிடிக்கும்... அது எப்போ காதலா மாறுச்சுன்னு எனக்கே தெரியாது... ஆனா இப்போ பிருத்வியை நான் ரொம்ப காதலிக்கிறேன்.... என்னால பிருத்வியை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..."

"சம்யு.. இது என்ன பைத்தியகாரத்தனம்.."

"நீ இப்படி தான் சொல்லுவன்னு தெரியும் கவி... அதான் உன்கிட்ட சொல்லமா மறைச்சிட்டேன்.."

"சம்யு.. நீ என்கிட்ட சொல்லலைங்கறது பெரிய விஷயமில்லை... இது சாத்தியமா..?? அதுதான் இப்போ முக்கியம்... சின்ன வயசுல இருந்த ஃப்ரண்ட்ஷிப்பை இப்போ காதல்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியே...

அந்த பிருத்வியை பத்தி உனக்கென்ன தெரியும்... சரி பிருத்வி நல்ல ஆளா இருந்தாலும்... பிருத்வி உன்னை காதலிப்பாரா..?? அதெல்லாம் யோசிச்சுப் பார்த்தியா..??"

"எல்லாமே நானும் யோசிச்சு பார்த்தது தான் கவி... இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கு... என்னோட காதல் நிறைவேறும்... பிருத்வி மனசுல எனக்கு ஒரு இடமிருக்கும்..."

"பிருத்வி மனசுல என்ன இருக்குன்னு தெரியாம... நீ உன் மனசுல காதலும் நம்பிக்கையும் வச்சிருக்கியே... அது உடைஞ்சு போச்சுன்னா.. என்ன பண்ணுவ...??"

"என் காதல் நிறைவேறும்... கண்டிப்பா என்னோட கல்யாணம் பிருத்வியோட நடக்கும்... நான் பாஸிட்டிவா திங்க் பண்றேன்.. நீ ஏன் நெகட்டிவா யோசிக்கிற..."

"இப்படி நடந்தா என்ன ஆகும்..?? இந்த யதார்த்தத்தை புரிஞ்சிக்கன்னு தான் சொல்றேன்... இதுக்கு மேலயாவது புரிஞ்சிக்க.. இந்த அளவுக்கு நம்பிக்கை வச்சு தோத்துபோய்ட்டா எனக்கு பயமா இருக்கு... நீ தாங்கிப்பியான்னு தெரியல... அவ்வளவு தான் நான் சொல்வேன்" சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.