(Reading time: 21 - 41 minutes)

".. சித்தப்பா ஃபோன் பண்ணாரா... "

இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே திரும்பவும் லஷ்மி அங்கு வந்தார்.

"கவி.. இங்க என்ன செய்யற அங்க யுக்தா உன்னை தேடறாப் பாரு..."

தேவாக் கிட்ட பேசினா இவங்களுக்கு எப்படித்தான் மூக்குல வேர்க்குதோ... உடனே வந்துடுவாங்களே.. இவங்கத்தானே சம்யுவை கூட்டிட்டுப் போனாங்க.." என்று மனதிலேயே நினைத்துக் கொண்டு சம்யுவை பார்க்கச் சென்றாள்.

நலங்கு வைப்பதில் இருந்து திருமணம் வரை எல்லாமே நல்லப்படியாக நடந்தது, யுக்தா, கவி இருவரும் சந்தோஷமாக இருந்தனர், பொதுவா ஒரு கல்யாணம் நடக்கும் போது சொந்தபந்தத்தில் அடுத்து யாருக்கு கல்யாணம்ன்னு பேச்சு வரும்... இங்கக்கூட அடுத்த கல்யாணம் யுக்தாவிற்கா.. இல்லை சங்கவிக்கா... என்ற பேச்சு எழுந்தது,

லஷ்மி ஒருபடி மேல போய் யுக்தாவை அவங்க மாமியார் வீட்டு சொந்தங்களிடையே.. எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்... இவத்தான் என் வீட்டு மருமகளா வரப்போறவன்னு சொல்லலன்னாலும் அவளது பேச்சிலேயே எல்லாரும் அதை கண்டுக் கொண்டனர்..

தன்னோட சகோதரி அங்கே ஹீரோயினா இருக்கறதை ஒதுங்கி நின்னு பார்த்துகிட்டு இருந்தா கவி... அங்க இருப்பவங்கள கவிக்கு ஏற்கனவே தெரியும்.... அடிக்கடி ஏதாவது விஷேஷங்களில் அவங்களையெல்லாம் பார்த்திருக்கா... ஆனா யார்க்கிட்டயும் அவ பேசினதில்லை... தேவாவோட தாத்தா பாட்டி மட்டும் தான் இவக்கிட்ட நல்லா பேசுவாங்க...

அதனாலேயே இவ சம்யுக் கூட போகாம ஒதுங்கியிருந்தா... லஷ்மி அத்தை சம்யுக்கிட்ட பாசமா நடந்துக்கறதையும்... அவளை எல்லார்க்கிட்டேயும் அறிமுகப் படுத்தி வைப்பதையும் பார்த்து சந்தோஷப்பட்டாலும்... அதையும் மீறி உள்ளுக்குள்ள ஒரு வலியை உணர்ந்தாள் சங்கவி...

யுக்தாவிற்கோ அதெல்லாம் புரியவில்லை ரொம்ப வருஷத்துக்கு பிறகு ஊருக்கு வந்திருப்பதால் தான் அத்தை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தறாங்கன்னு நினைத்துக் கொண்டாள்.

திருமணம் முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்தார்கள்... பொண்ணும் மாப்பிள்ளையும்... மாப்பிள்ளை வீட்டுக்கு போயிருந்தார்கள்... தங்கள் வீட்டுக்கு போகாமல் மாதவன் குடும்பம் லஷ்மி வீட்டிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள்...

பொண்ணோட கல்யாணம் முடிந்ததும் அடுத்து பையனோட கல்யாணத்தையும் முடிவு பண்ணனும்ன்னு லஷ்மி நினைத்து அவள் அண்ணனிடம் பேசினாள்... மாதவனும் இன்னும் அதைப் பத்தி முடிவெடுக்காததால் சென்னைக்குப் போய் கலந்துப் பேசிட்டு சொல்கிறேன் என்று கூறினார்..

ஆனால் லஷ்மி இப்போதே அதை பற்றி பேசி முடிவெடுக்கலாம் என்றாள்... யுக்தாவிடம் அதைப்பற்றி பேசவில்லை அதனால் நிதானமாக பேசலாம் என்றார் மாதவன்... ஆனால் லஷ்மியோ தானே யுக்தாவிடம் சம்மதம் கேட்க போவதாக கூறினாள்..

எல்லோரும் ஒரே இடத்தில் தான் இருந்தார்கள்... சாவித்திரி, சுஜாதா, கவி, யுக்தா, தேவா, லஷ்மியின் கணவர், மற்று சில சொந்தகாரர்கள் என்று அனைவருமே அங்கே குழு குழுவாக பேசிக் கொண்டிருந்தனர்... அங்கே சென்ற லஷ்மி நேராக யுக்தாவிடம் சென்றாள்...

"யுக்தா... என் பொண்ணோட கல்யாணம் முடிஞ்சிடுச்சு..  அடுத்து என்னோட பையனுக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு இருக்கேன்... சொல்லும்மா என்னோட பையன் தேவாவை கட்டிக்க சம்மதமா..."

இந்த விஷயம் ஓரளவுக்கு அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இந்த விஷயத்தை இப்படி அவசரமாக கேட்டதில் எல்லோருக்கும் கொஞ்சம் அதிர்ச்சி என்றால்... யுக்தாவுக்கோ பேரதிர்ச்சி... பிருத்வியை தவிர வேறொருவனை அவளால் கணவனாக ஏற்க முடியுமா... ஏன் அப்படி நினைத்து தான் பார்க்க முடியுமா....? யாரை திருமணம் செய்துக் கொள்ள சொன்னாலும் அவள் மறுக்கத்தான் போகிறாள்... ஆனால் இப்படி இத்தனை பேர் முன்னாடி கேட்டால் என்ன சொல்வது...

பிருத்வியும் இவளை காதலிக்கிறான் என்றால் அதை இப்போதே கூட வெளிப்படையாக சொல்லிவிடுவாள்... அவள் அப்பா, அம்மா மறுக்க போவதில்லை... ஆனால் இப்போது கேட்டால் இவள் என்ன சொல்லுவாள்...

"என்னம்மா யுக்தா... நான் கேட்டுகிட்டு இருக்கேன்... நீ அமைதியா இருக்க.."

"அத்தை நான் என்னோட கல்யாணத்தை பத்தியே யோசிச்சதில்லை... திடிரென்று வந்து கேட்டா நான் என்ன சொல்றது..."

"நான் அப்பாக் கிட்ட ஏற்கனவே சொன்னது தான் யுக்தா... இப்போ கல்யாணத்தை முடிவு தான் செய்யப்போறோம் அதுக்கப்பிறகு ஆறு மாசமோ இல்ல ஒரு வருஷமோ கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்... என்னம்மா சொல்ற..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.