(Reading time: 21 - 41 minutes)

11. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

"ன்ன சொல்ற தேவா... நீ சொல்றது உண்மையா..?? ஆச்சர்யத்தோடு கேட்டாள் சங்கவி... அவளால் நம்பமுடியவில்லை... பிருத்வி சம்யுவின் காதலை ஏற்று கொண்டானா..?? சம்யுவின் காதல் வெற்றி அடைந்து விட்டதா..?? தேவா ஃபோனில் சொன்ன தகவலில் அவளுக்கு சந்தோஷம்..

"என்ன சங்கு நான் ஏன் பொய் சொல்லப் போறேன்.. பிருத்வி முன்னாடியே.. யுக்தா பிருத்வியை காதலிக்கிறதா சொன்னா... ரெண்டுப்பேருக்கும் வாழ்த்துக்கள் சொன்னேன்... பிருத்வி சிரிச்சுக்கிட்டே கை குலுக்கினான்.."

"தேவா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... நான் இதை எதிர்பார்க்கல... சம்யு காதல் நிறைவேறிடுச்சுல்ல வேறென்ன வேணும் எனக்கு..." சந்தோஷமா அவனிடம் கூறிவிட்டு ஃபோனை வைத்தாள்...

Kadalai unarnthathu unnidame

இவ்வளவு நடந்திருக்கு ஏன் சம்யு என்கிட்ட சொல்லல..?? ஓ இன்னும் என்மேலே கோபம் போலப் போலிருக்கு... என்று மனதில் நினைத்துக் கொண்டு சம்யுவிற்கு ஃபோன் செய்தாள்... அதற்கு பதில் நாட் ரீச்சபிள் என்ற பெண் குரல் தான் கேட்டது...

அம்மா நானே... பிருத்வி சம்யு காதலை ஏத்துக்க மாட்டான்னு நினைச்சேன்... சம்யு கவலைப்படக் கூடாதுன்னு தான் உங்கக்கிட்ட வேண்டிக்கிட்டேன்... ஆனா என் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு முன்னாடியே நீங்க சம்யுவுக்கு அருள் புரிஞ்சிட்டீங்க... எந்த தடையும் இல்லாம நான் இந்த வேண்டுதலை நிறைவேத்திடுவேன்... மனசுக்குள்ளே அம்மனிடம் வேண்டிக் கொண்டாள்...

பேருக்கு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு.. எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா... மனதில் ஆயிரம் யோசனைகள்...

எதேச்சையாக அங்கு வந்த மாதவன் தன் மகளை பார்த்தார்... சில நாட்களாக தன் மகள் எப்போதும் போல இல்லை... அதை அவர் கவனித்துக் கொண்டிருந்தார்... அவரை பொறுத்தவரை தன் மகள் இப்படி இருப்பதற்கு தன் தங்கை பேசியது தான் காரணம் என்று நினைத்துக் கொண்டார்...

"யுக்தா... என்னடா ஒரு மாதிரி இருக்க..."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லப்பா... நான் நல்லா தான் இருக்கேன்...

அப்பா நாம எப்போ நியூயார்க் போகப் போறோம்..."

"என்னடா நாம இங்க வந்து இன்னும் ஒரு மாசம் கூட முடியலையே... அதுக்குள்ள நியூயார்க் போகறதப் பத்தி பேசற..."

"இல்லப்பா முன்னாடியே டிக்கெட் புக் பண்ணனும்ல... அதான் கேட்டேன்.."

"யுக்தா... நீ உன் அத்தை சொன்னதையே யோசிச்சுக்கிட்டு இருக்கியா... அவள விட்டு தள்ளுடா... அவளுக்கு என் பொண்ணைப் பத்தி என்ன தெரியும்...?? அவ பேசனுதுக்கு இப்படி வருத்தப்படற... நியூயார்க் போலாம்னு சொல்ற..."

"இல்லப்பா அத்தை சொன்னதுக்கு நான் வருத்தப்படல... ஏதோ பேசிட்டாங்க விடுங்க..."

"சரிடா... கவியும் அண்ணியும் ஊரிலிருந்து வரட்டும்... வந்ததும் ஊட்டி இல்ல கொடைக்கானல் அதுமாதிரி எங்கேயாவது போய்ட்டு வரலாம் என்ன.. அப்படி இப்படின்னு ஒரு மாசம் போய்டும்... அப்புறம் நியூயார்க் போலாம்..."

"சரிப்பா... ஆங் அப்புறம் போனவாரம் நெட்ல புதுசா ஒரு டிஷ் பார்த்தேன்... அதை இன்னிக்கு ட்ரை பண்ணப் போறேன்... அதை டெஸ்ட் பண்ணிப் பார்க்க போற எலி நீங்க தான்..."

"ஆல்ரெடி உங்கம்மாக்கு நான் எப்பவோ எலியாயிட்டேன்... இது எதையும் தாங்கும் உடம்பு டா..."

சிரித்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள்... நல்லவேளை அப்பா நான் இப்படி இருக்கறதுக்கு அத்தை பேசினது தான் காரணம்னு நினைச்சிக்கிட்டாரு... இனிமேயாவது கொஞ்சம் சாதாரணமா இருக்கப் பழகனும்... அப்பாக்காக சொல்லிட்டு வந்தாலும் கொஞ்சம் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பினால் நல்லது... அதனால் சமையலில் இறங்கினாள்..

தன் மகள் மற்றும் கணவனின் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தாள் சுஜாதா...அவள்  மகளின் நிலையை குறித்து இன்னும் அவளுக்கு சந்தேகம் தான்... இப்போது தன் மகள் சொன்னது போல் நியூயார்க் போனால் என்ன... ஒருவேளை அவளுக்கு பிருத்வியை மணக்கும் எண்ணம் இருந்து... அது நிறைவேறவில்லை என்று வருந்தினால்... நியூயார்க் போனாலாவது கொஞ்சம் சரியாவாள்  என்று தோன்றியது அவளுக்கு... அதைப் பற்றி பேச கணவனிடம் சென்றாள்...

"என்னங்க ஏதோ எலின்னு காதுல விழுந்தது..."

"அது ஒன்னுமில்ல சுஜா... எலி ஓடன மாதிரி இருந்துச்சு... நம்ம வீட்ல எலி இருக்காப்பான்னு நம்ம யுக்தா கேட்டாம்மா... எலியா?? இருக்காதேன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்..."

"சும்மா பேச்சை மாத்தாதீங்க... என்னோட சமையலை குறை சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே...

அதை விடுங்க... ஏங்க நாம இப்பவே நியூயார்க் போனா என்ன..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.