(Reading time: 8 - 15 minutes)

02. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..

திங்கள் வந்து சாயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா..

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..

உண்மையம்மா உண்மைய நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்ன கண்ணே..”

தீபாவளி இனிப்புகளை அனைவருக்கும் கொடுத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து கணிணியை உயிர்ப்பித்தாள் மகி..மெசெஜ் நோட்டிவிகேஷன் ஒன்று இருந்தது..

“ஹாய்,ஸ்வீட் நல்லா இருந்தது,ஹௌ வாஸ் யுவர் ட்ரிப்,”- ராம்

“தேங்ஸ்,யா நல்லா இரூந்துதது..:)”-மகி..

மகியின் மனதில் குளிர் காற்றின் சாரல்..முகத்தில் புன்னகை தவழ வேலை செய்து கொண்டிருந்தவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு நின்றாள் திவ்யா,என்னடீ அமுல் பேபி தனியா சிரிச்சுட்டு இருக்க??என்ன விஷயம்,?

மகி மனதில் ஒன்றும் நினைக்காததால் சிரிப்பின் காரணத்தை கூறினாள்..யாரு ராம்ஆ இவ்ளோ பேசினது..நா வந்த இத்தனை நாள்ள அவரு யார்டயும் ரெண்டு வார்த்தை தொடர்ந்து பேசி பார்த்தது இல்ல,இப்போ என்னடானா…ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

ஏய் உடனே ரொம்ப ஓட்டாத..போ போய் வேலைய பாரு,.- மகி..

எல்லாம் நேரம் டீ..-திவ்யா

இடைவேளையயில் தோழிகள் அனைவரின் காதுகளுக்கும் விஷயம் பரவ மகியை கிண்டல் செய்து வாட்டி எடுத்து விட்டார்கள்..ஒரு எல்லைக்கு மேல் பொறுக்க முடியாமல் மகி அனைவரிடமும்,

“ஆமா..நா அவர சைட் அடிக்குறேன்னே வச்சுக்கோங்க..அதுக்கு இப்போ என்ன.?என்றாள் வீம்பாய்..அவ்வளவு தான் அன்றைய இடைவேளை எப்படி முடிஞ்சுருக்கும்நு சொல்லனுமா….தன் இடத்தில் வந்து அமர்ந்தவளிடம் மீண்டுமாக திவ்யா வந்து,

“ஹே சாரி டீ,.சும்மா விளையாட்டுக்குத் தான் அவங்ககிட்ட சொன்னேன்,இப்படி ஆகும்நு நெனைக்கல..”

ச்ச,..ச்ச…திவி எதுக்கு சாரிலா சொல்ற..ஜஸ்ட் ஃபார் ஃபன் தான..என்ன ஒன்னு நம்ம கூட்டம் சும்மாவே ஆடுவாங்க இதுல இப்படி ஒரு சலங்க வேற கிடச்சுறுச்சு இனி பின்னி எடுத்துருவாங்க..சமாளிப்போம்..எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா..”என்றாள் சிரித்துக் கொண்டே சினிமா பாணியில்…

வளை இப்படி  கலாய்ப்பதே தினமும் வாடிக்கையாகிவிட்டது தோழிகளுக்கு..ஆனால்,அனைவருக்கும் அசராமல் ஈடு கொடுப்பாள் நம் மகி...இவ்வாறாக நாட்கள் செல்ல,டீம் ஔட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யக் கூறி அறிவிப்பு வந்தது..சத்யா வாலன்டியர்ஸ் பொறுப்பை திவ்யா மகியிடம் ஒப்படைத்து இருந்தார்..திவ்யா,ஔட்டிங் செல்ல வேண்டிய இடம்,உணவு போன்ற பொறுப்புகளையும்,மகி யார் யார் வருகிறார்கள்,என்று கணக்கெடுக்கும் பொறுப்பையும் பகிர்ந்து கொண்டனர்..ஒவ்வொருவராக முடித்துவிட்டு பரணியிடம் வந்தவள் அவனது வருகையைஉறுதி செய்துவிட்டு சிநேகமாய் புன்னகைத்து நகர்ந்தாள்..இன்னும் மீதம் இருப்பது ராம் மட்டுமே,ஏனோ அவனிடம் நேரில் பேசுவதற்கு படபடப்பாய் உணர்ந்தாள் மகி..வழக்கம் போல் சாட் வின்டோவை ஓபன் செய்து டைப் பண்ண ஆரம்பித்தாள்..

“ஹாய் ராம்”

“ஹாய் மகி,சொல்லுங்க..”

“நெக்ஸ்ட் மந்த் டீம் ஔட்டிங் ப்ளான் பண்ணிருக்காங்க..உங்க Availability கன்பார்ம் பண்ணீங்கனா பைனல் லிஸ்ட் குடுத்துடுவேன்…

“ஹா,..இதுல லா இன்ட்ரஸ்ட் இல்லீங்க இதுவரை போனதும் இல்ல…எதுக்கும் என்ன டவுட் லிஸ்ட் லயே வச்சுகோங்க..வில் கன்பார்ம் யு ஷார்ட்லி..நீங்க போறீங்களா?

“ஸேம் தாட் தான் ராம்..மோஸ்ட்லி போ மாட்டேன் பட் அஸ வாலன்டியர் நேம் குடுத்துதான் ஆகனும்..”

ஓ…யா,..:)

அண்ட் உங்க கான்டாக்ட் நம்பர்??டீம்ல எல்லார் நம்பரும் இருக்கு..ஜஸ்ட் ஃபார் அன் எமர்ஜென்சி..இது என் நம்பர் 95********-ராம்

“99********”

ஓ.கே. தங்க்ஸ்..:)

ராம் & பரணி மதிய ஷிப்டில் இருப்பதால் இரவு உணவு அலுவலகத்திலேயே முடித்துவிடுவர்..அன்று சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பரணி,அந்த பொண்ணு இன்னைக்கு என் ப்லேஸ்க்கு வந்தா டா ராம்..

எந்த பொண்ணு??என்று அறியாதவன் போல் கேட்டான்..ஏனோ பரணி மகியைப்  பற்றி பேசுவதை அவன் மனம் விரும்பவில்லை..

அதான்டா நீயூ ஜாய்னி மகி,..

ஓ…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.