(Reading time: 8 - 15 minutes)

ன்னவோடா அந்த பொண்ண பாத்தா மத்த பொண்ணுங்கள மாறி கலாய்க்க தோணல – என்றான் சீரியசாய்..

ஏதோ ஒரு இனம் புரியா படபடப்பு ராமின் மனதினுள்..

ஏன்டா என்னாச்சு??-ராம்..

இல்லடா.,அந்த பொண்ணு பேசுறத பாக்கும் போது ஒரு குழந்தை ஃபீல் வருதுடா..எனக்கு தங்கை இருந்திருந்தா இப்படி தான் இருக்கனும்நு தோனுது மச்சி..

ப்பூபூபூ…இவ்ளோதானா..-ராம்..

டேய் எவ்ளோ ஃபீல் பண்ணி பேசிட்டு இருக்கேன் இவ்ளோதானாநு சொல்ற என்றான் கடுப்புடன்..

நீ குடுத்த பில்டப்ல என்னவோ ஏதோநு நெனச்சுடேன்டா பரணி …சரி சரி தங்கச்சி யாவே நினைச்சுக்கோ நீயும் எவ்ளோ பேரு கூடதான் கனவுல டூயட் பாடிட்டே இருப்ப கொஞ்ச நாள்,மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்நு பாடு..

எல்லாம் என் நேரம்டா,.சரி ஔட்டிங் பத்தி என்ன ப்ளான் பண்ணிருக்க..நா என் தங்கச்சி கூப்ட்டதுக்காகவே போக போறேன்..- பரணி

உன் அலம்பல் தாங்கலடா நண்பா..நா யோசிச்சு சொல்றேன்டா..நீ போறனா நானும் வர ட்ரை பண்றேன்..

ம்ம்ம் சரி மச்சி..டைம் ஆச்சுடா கிளம்பலாம்..

ன்றிலிருந்து மகியும் ராமும் பொதுவான குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொள்வது வாடிக்கையானது..இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை..

அன்றைய பொழுது அழகாக விடிந்தது..மகியும்,திவ்யாவும் ஔட்டிங் ஏற்பாடு செய்திருந்த ரிசாட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர்..

ஒரு வழியா இங்க வரதுக்கு ஒத்துகிட்டயே..ம்ம்ம்..மீரா மட்டும் கம்பல் பண்ணலனா மேடம் யெஸ்கேப் ஆய்ருப்ப தான..-திவ்யா..

ஆமா டீ..இதெல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட்டே இல்ல..ஹாஸ்டல் ல நிம்மதியா தூங்கிருப்பேன்..இப்படி டார்ச்சர் பண்றாங்க..என்று சலித்துக் கொண்டாள்..

அப்போது அவளது அலைபேசி அழகாக சிணுங்கிகயது,

“மௌனமே உன்னிடம் அந்த மௌனம்

தானே அழகு..

பார்வைகள் போதுமே அதில்

பாஷை பேசிப் பழகு..”

திரையில் தெரிந்த எண்ணை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

“ராம்”

அவன் நம்பரை பதிவு செய்த உடனேயே இந்த பாடலைத் தான் ரிங்டோனாக வைக்கத் தோன்றியது அவளுக்கு…

திவ்யாவின் அதட்டலினால் சுய நினைவிற் கு வந்தவள் அதை ஆன் செய்து அழைப்பை ஏற்றாள்..

ஹலோ மகி..திஸ் ஸ் ராம்..

ஆங் சொல்லுங்க ராம்..

இல்ல நா ஓ.எம்.ஆர் ரோட்ல இருக்கேன்.,அங்க இருந்து வேன் அரேன்ஞ் பண்ணிருக்கிறதா சொன்னாங்க,அதான் நீங்க ரீச் ஆய்டீங்களாநு கேக்கலாமேநு பண்ணேன்..

ஓ..நா ஆன் தி வே ராம்..பட் வேன் வந்துடுச்சுநு சொன்னாங்களே..நா வேணா யார்ட்டயாவது கேட்டு சொல்றேன்,டு மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க…

ஓ.கே. மகி கேட்டு சொல்லுங்க..ஹே ஹே வெய்ட்,மகி வேன்அ பாத்துட்டேன்,.தங்க்ஸ் பார் தி கெல்ப்..நீங்க பாத்து வாங்க..பாய்..

ஓ.கே. ராம்…பை..

பேசி முடிக்கவும் அவர்களின் பேருந்து நிறுத்தம் வரவும் சரியாக இருந்தது..இருவரும் வேனில் சென்று அமர்ந்தனர்..ராம் மகியை பார்த்து சிநேக புன்னகையை உதிர்த்தான்..இருபது நிமிடத்தில் ரிசாட்டை அடைந்தனர்..அன்றைய நாள் முழுதும் இனிமையாக கழிந்தது..உள்அரங்க விளையாட்டுகள்,ஆட்டம்,பாட்டம் என நேரம் போனதே தெரியவில்லை அனைவருக்கும்..பரணிக்கும்,மகிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு துளிர்ந்திருந்தது..அண்ணா என்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள் மகி..

ரவு ஒன்பது மணி அளவில் விடுதியை அடைந்தாள் மகி..திவ்யா விற்கு ரீச்ட் சேவ்லி என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நகர போனவள்,மீண்டும் வந்த மெசெஜ் டோனில் மொபைலைப் பார்வையிட்டாள்,.2 மெசெஜ் நோட்டிவிகேஷன் காட்டியது..ஒன்று பரணியிடம் இருந்து,

ஓய் குட்டி பொண்ணு ரீச்ட்டா?

சிரித்துக் கொண்டே அதற்கு பதிலலித்தவள்,அடுத்த மெசெஜ்ஜை திறந்தாள்..யாருநு சொல்லனுமாங்க நம்ம ஹீரோ சார் தான்..

ஹாய் மகி,மெசெஜ் மீ ஒன்ஸ் யு ரீச்சீட்..டேக் கேர்..

விச்சித்தரமாய் இருந்தாலும் ஏனோ அவள் மனம் குத்தாட்டம் போடுவதை அவளால் தடுக்க முடியவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.