(Reading time: 11 - 22 minutes)

10. என் மனதை தொட்டு போனவளே - VJ G

வீட்டுக்கு வந்தார்கள், ருத்ரா கதவைத் திறந்தான், உள்ளே நீட்டாக இருந்தது, எல்லாம் சுற்றிப் பார்த்தார்கள், மூன்று பெட் ரூம் கொண்ட பிளாட் ரொம்ப நன்றாக இருந்தது, நல்ல ஏரியா குமாருக்கு ரொம்ப பிடித்தது. ‘சரி மச்சான், நீங்க சொல்ற மாதிரியே நான் இங்கே வந்துர்டறேன், நீங்க விலையாக எனக்குக் கொடுத்து விடுங்கள் நான் வாங்கிக்கிறேன்,’ என்றான் குமார்

‘குமார் எப்படியிருந்தாலும் இது உங்களுக்கு தான் அப்படியிருக்கும் போது உங்க மனசு கேக்கலியா வாடகை கொடுத்து விடுங்கள், உங்கள் பேரில் இன்னொன்னு வாங்கிப் போடுங்கள், அதை வாடகைக்கு விட்டு உங்க லோனைக் கட்டுங்கள், அவ்வளவுதான்,’ என்றான்.

‘சரி,’ என்று அரை மனதாக சொன்னான்

en manathai thottu ponavale

‘சித்ரா வீட்டுக்கு என்ன, என்ன வேண்டுமென்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொடு, நான் இன்றே ஆர்டர் பண்ண வேண்டும்,’

கிச்ன்னுக்கு வேண்டியதெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டாள், ‘இல்லை சிஸ்டர் நம் வீட்டில் மிக்ஸி, பிரிஜ், இதெல்லாம் இருக்கு என்றான் குமார் ,சரி அதெல்லாம் புதுசா இருக்கட்டுமே?’ என்றான் ருத்ரா

‘இல்ல அனாவசியமா அதெல்லாம் வேண்டாம்,’ என்றான் குமார்

‘இல்லை இருக்கட்டும், நம் வீட்டில் பெரிப்பா, சித்தப்பா, அண்ணா, இவங்கள் எல்லாம் ஏதாவது கிப்ட் கொடுக்கணும் இல்லையா அதான்,’ என்றான் ருத்ரா

சித்ரா லிஸ்ட் போட்டுக் கொடுத்தாள் ருத்ராவிடம்

ருத்ரா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், குமார் அங்கிருந்த ஒவ்வொரு பால்கனியிலும் என்ன தெரிகிறது என்று பார்க்க போய்விட்டான்,

இவர்கள் பார்வையாலேயே ஒருவருக்கொருவர் அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தனர்…..

'என்னங்க அப்படிப் பார்க்கிறீங்க'

'உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது, அவ்வளவு அழகா இருக்கே நீ,' என்றான் ருத்ரா, அவன் குரலில் ஏதோ வித்யாசம் தெரிந்தது

'நீயும் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாய், என்ன விஷயம்’ என்று  கேட்டான், அவள் வெட்கத்துடன் சிரித்தாள், அவன் அவளை இழுத்து அணைக்க அவள் அருகில் போனான், அப்போது மச்சான், என்று குமார் கூட்டுக் கொண்டே வரும் குரல் கேட்டவுடன், கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டான், அவர்களிருவர் முகமும், ஏதோ மாதிரி இருந்தது, அதைப் பார்த்து குமார் புரிந்துக் கொண்டான், கரடி மாதிரி தான் வந்து விட்டதை நினைத்துக் கொண்டான்

'என்ன குமார்,' என்று கேட்டான் ருத்ரா, அதற்குள் தான் சுதாரித்தான்

'இல்லை கிளம்பலாமா?' என்று கேட்டான்

'ம், கிளம்பலாம்' என்றான் ருத்ரா, சித்ராவைப் பார்த்துக் கொண்டே ஒரு பெரு மூச்சை வெளியிட்டான்

'போகலாம் குமார்,' என்று ருத்ரா சொல்லவும், அவர்கள் வெளியே போனார்கள், ருத்ராவும் அவர்களுடன் வெளியே போனான், அவன் மனதில் சித்ராவையே நினைத்துக் கொண்டிருந்தான், அவன் தன்னிலையில் இல்லை, இவளை அனுப்பி விடலாமா, அவள், வெகுவாக தன்னை ஆக்ரமித்துக் கொண்டாள், யார் இருக்கிறார்கள், இல்லை என்று தெரியவே மாட்டேன் என்கிறதே? என்று நினைத்துக் கொண்டிருந்தான்,

சித்ராவும் அதையே நினைத்தாள். குமார் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தான் ஒன்றும் புரியவில்லை, எல்லாவற்றிற்கும் ‘ஊம்’ கொட்டிவந்தான் ருத்ரா.

வீடு வந்துவிட்டார்கள், சித்ரா தாத்தா ரூமுக்குப் போனாள், அங்கு சிவகாமியும் இருந்தார், ' வா சித்ரா,தாத்தாவுக்கு நீ இல்லாமல், ஒண்ணும் முடியல்ல, இந்தா வத்தில தட்டு, வந்திருக்கிறவர்களுக்கு எல்லாம் இதை வைத்துக் கொடு, என்று ஒரு பெட்டியில் இருக்கும் புடவைகளைக் கொடுத்தார். ‘கல்யாணத்தப்போ, நமக்கு இதுக்கெல்லாம் டைம் இருக்குமோ இல்லையோ, இப்பவே கொடுத்திடலாம்.’

சித்ராவும், வெளியே வந்து கற்பகம், கமலா, இருவரையும் கூப்பிட்டு, கொடுக்கச் சொன்னாள், வித்யாவும், அவளுடன் சேர்ந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்து உதவினாள். இதை எல்லாம் தூரத்திலிருந்து ருத்ரா பார்த்துக் கொண்டிருந்தான்,  

அவன் மனதிலிருப்பதை அவளிடம் எப்படிச் சொல்லுவது அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் , அவளுக்கும் தன்னைப் போலவே உணர்வு இருக்குமா, இப்போது சொல்லலாமா இல்ல, இன்னும் கொஞ்சநாள் போகட்டுமா? என்று வித விதமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் 'இங்க வா ருத்ரா,' என்று அம்மா அழைத்தாள்

'என்னம்மா?' என்று வந்தான்

'ஒண்ணுமில்லைப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ கண்ணா, ரொம்ப அலையற, இன்னும் ஒரு பத்து நாள் அலைய வேண்டியிருக்கு,' என்று தன்னோட கூட உட்கார்த்தி வைத்துக் கொண்டாள், அவனை வாஞ்சையாக தடவி கொடுத்தாள், அவனும் அப்படியே அவள் மீது சாய்ந்துக் கொண்டான்,இன்னொரு பக்கத்தில், வித்யா வந்து உட்கார்ந்தாள், அவளையும் ஒரு கையால் தடவிக் கொடுத்தாள், அதை அவர்களுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்தாள். அந்த நிலையில் அவர்கள் மூவர்களையும் பார்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. வித்யா அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள், அவள் அம்மா சிரித்து அவளை திரும்பி பார்த்தாள்.”ருத்ரா, உனக்கும், வித்யாவுக்கும் கூட கல்யாணம் பண்ணனும், நம்ம வித்யாவுக்கு நல்ல பையனா பார்க்கணும்” என்றாள், அவன் 'ம்ம்...' என்று அவன் முனு முணுத்தான், அவன் நினைபெல்லாம் சித்ராவாக இருந்தது, அவன் அம்மா மடியில் படுத்துக் கொண்டான், அவன் அம்மாவுக்கு ஆச்சர்யம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.