(Reading time: 11 - 22 minutes)

வள் கண் நிறைந்தது, 'இல்லை தாத்தா இதெல்லாம் வேண்டாம்,' என்றாள்

'அப்ப நீ என்னை உண்மையா தாத்தாவாக நினைக்கலை, அதான் நீ வேண்டாம்கிற, இல்ல?'

அவள் ருத்ராவைப் பார்க்க, அவன் கண்ணால் எடுத்துக் கொள் என்று ஜாடைக் காட்டினான்

அவள், 'தாத்தா, நான் புடவை மட்டும் வாங்கிக்கிறேன்,' என்றாள்

'அதெல்லாமில்லை நீ எல்லாம் எடுத்துக் கொண்டு கல்யாணத்துக்கு இதே புடவையும் நகையும் போட்டு கொண்டுவரவேண்டும்,' என்று கண்டிப்பாக கூறினார்

அவர்கள் இருவர் காலில் விழுந்து ஆசி பெற்று அதை வாங்கிக் கொண்டாள்,

அங்கிருந்து இருவரும் நகர்ந்தனர், அப்போது தாத்தா, 'நீ தினமும் வர வேண்டும் என்று சொன்னார், “இல்லை தாத்தா, நான் வேலைக்குப் போகணும்”, என்றாள்

'நான் உன் முதலாளியிடம் பேசறேன், அதனாலே நீ இங்கே வந்துடு” என்றார் தாத்தா,

சிவகாமி பாட்டியும் 'ஆமாம் தாத்தா தான் உன் முதலாளியுடன் பேசறேன்னு சொல்லறாரே அப்புறம் என்ன?’ என்றார்

அவளோ, ருத்ராவைப் பார்த்தாள் அவன் முகமோ இறுகி இருந்தது, ஒன்றும் சொல்லவில்லை.

'நான் போயிட்டு வரேன் தாத்தா, வரேன் பாட்டி' என்று கூறி கொடுத்த பையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள், கற்பகம் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு போனாள்

வன், காரை எடுத்து வந்தான், அவளை தன் பக்கத்தில் வந்து உட்காரச் சொன்னான், அவள் யோசித்து சுத்தி யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்து ஏறினாள்

என்ன 'சுத்தி சுத்தி பார்க்கறே, யாராவது பார்க்கிறார்களா என்றா, எல்லோருக்கும்தான் எல்லாம் தெரிகிறதே அப்புறம் என்ன?’ என்று ஒரு விதமாய் கேட்டான் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

'என்ன அப்படிப் பேசுகிறீர்கள்,' என்று கேட்டு வாயை மூடிக் கொண்டாள்.

அவன், அவளைக் கூடவே வைத்துக் கொள்ள ஆசை, ஆனால் அவள் கூட இருந்தால் ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது, என்ன செய்வது, தாத்தா வேறு அவளை வந்தே ஆக வேண்டுமென்கிறார், அந்த வயதானவர் ஆசையைக் கெடுத்தா மாதிரி ஆகிவிடும், என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

'என்ன ரொம்ப யோசனைபோல் இருக்குது?' என்று கேட்டாள்

'ம்ம்ம், சரி தாத்தா உன்னை தினம் வரச் சொல்லியிருக்கிறாரே , நீ என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டான்,

'தெரியலைங்க, இந்த வேலை வேறு ரொம்ப முக்கியம், நானும் எங்க அம்மாவும் வாழ, இந்தப் பணம் ரொம்ப முக்கியம், தாத்தா மனசு வாடக் கூடாதே என்று வேறு கவலையா இருக்கு, என்ன செய்வது என்றே தெரியலை' என்றாள்.

'சரி தாத்தாவை விடு, உனக்கு என்ன ஆசை, இங்கு தினம் வருவதற்கா, இல்லையா, அதைச் சொல், பிறகு மத்ததைப் பார்க்கலாம்,' என்றான்.

அவள் தலையைக் குனிந்துக் கொண்டாள், 'இன்னுமா உங்களுக்குப் புரியலை? எனக்குப் பிடிச்சிருக்கா, இல்லையான்னு?' என்று கேட்டாள்

'அது எப்படி சொல்லாமல் எனக்குத் தெரியும், சித்ரா' என்றான் அவன்

அவள் பதில் பேசவில்லை, அவன் மறுபடியும் கேட்டான் 'என்ன சித்ரா பேச மாட்டேங்கிற'

'நீங்க பேசத்தான் காத்துக் கொண்டு இருக்கேன்' என்றாள் தலையைக் குனிந்து கொண்டு, அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான், அழகே வடிவமாய் தன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவளைப் பார்த்து கொஞ்ச நேரம் 'பீச்சில் காத்து வாங்கி விட்டு போகலாமா?' என்று கேட்டான்

'உங்களுடன் எங்கு வேணுமானாலும் வரேன்' என்றாள், அவனை அறியாமல், அவள் சொன்ன அந்த வார்த்தையில், உருகி அவளை அள்ளி அணைக்கணும் போலிருந்தது அதைக் கட்டுப் படுத்திக் கொண்டு, அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான், அவன் குரல் கிறங்கி இருந்தது, 'நான் எங்கு கூட்டாலும், நீ வருவாயா?,' என்று கேட்டு அந்தக் கையை தன் வாய் அருகில் எடுத்துக் கொண்டு போய், முத்தம் கொடுத்தான், அவளும் அதில் கிறங்கிப் போனாள்.

அவளும் அவன் கையை முத்தம் கொடுத்தாள், அவன் காரை ஓரம் கட்டினான்

'என்ன பண்ணிட்ட! என்னால் இப்போ காரை ஓட்ட முடியாது', என்றான்

அவள் வெட்கத்தில் தலையை குனிந்தாள்

'ஹேய், என்ன வெட்கம், பீச்சுக்குப் போகலாமா ?உன்னோடப் பேசணும்'

'ம்ம்' என்றாள்

திரும்பி அவள் கையை முத்தம் கொடுத்து, காரை எடுத்தான்

பீச்சுக்கு போனான் ஒரு இடத்தில் காரை நிறுத்தினான். இருட்டியிருந்தது, அவளை இழுத்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் அதை அவள் எதிர் பார்க்கவில்லை. அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்திருந்தது அந்த இருட்டிலும் நன்றாகத் தெரிந்தது

'இப்படி அடிக்கடி முகம் சிவந்தால், அப்படியே உன்னை என்னென்னவோ செய்யவேண்டும் போல் இருக்கு சித்து, நீ என்னை முழுக்க ஆண்டுண்டிருக்கே, எனக்கே தெரியாமல் நான் உன்னிடம் விழுந்து விட்டேன், நான் மீண்டு வரும் வழி தெரியலே, நீ சொல்லு நான் என்ன செய்யணும், எனக்கு ஒரு வழி சொல்லு,' என்று தன்னை மறந்துச் சொல்லிக் கொண்டிருந்தான்

'நானும், அதேதான் உங்களைக் கேட்கனும்னு இருந்தேன், நீங்கதான் இதுக்கு ஒரு வழி சொல்லணும்,' என்று அவள் வெட்கத்தோடு சொன்னாள்.

Episode # 09

Episode # 11

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.