(Reading time: 11 - 22 minutes)

09. என் மனதை தொட்டு போனவளே - VJ G

'தாத்தா, உங்களுக்கு யார் என்று தெரியாதுனீங்க, இப்ப நீங்க சொல்லறதை பார்த்தால் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் போலிருக்கு,’ என்று அவரைக் கேட்டாள்

இம்முறை குறும்பாக சிரிப்பது பேரனின் முறையாயிற்று,

அப்போது அங்கு வந்த கற்பகம், ருத்ரா, ‘உன் ஆபீஸ் பையன் யாரோ கிருஷ்ணன் குடும்பத்தாரை அழைத்து வந்திருக்கிறான்,’ என்றாள்

en manathai thottu ponavale

‘இதோ வந்துவிட்டேன்,’ என்று தாத்தாவை பார்த்தான், ‘வா போகலாம்,’ என்று தாத்தா சொன்னார்

அவர்கள் எல்லோரும் கீழே வந்தனர்

'வாங்க, வாங்க என்று வரவேற்றார் நீலகண்டன், நீங்கல்லெல்லாம் வந்தது, ரொம்ப சந்தோசம், சமையலுக்கு கேட்டுக் கொண்டது போல் கூட்டிவந்து விட்டீர்கள்' என்றார் நீலகண்டன்

அப்போது சிவகாமி அங்கு வந்தார், அவரிடம், கிருஷ்ணன் குடும்பத்தாரை அறிமுகப் படுத்தினார்,

அப்போது அங்கு வந்தான் கார்த்திக், கனகாவைப் பார்த்தவுடன் ஷாக் ஆகி விட்டான், அவர்களிடம் 'இதான் என் கடைசி பையன் கார்த்திக்,' என்று அறிமுகப் படுத்தினார், மற்றவர்களையும் வரச் சொல் என்று கூறி

'கார்த்திக் இவர்கள் நம் ஊர்காரர்கள்,' என்று அறிமுகப் படுத்தினார்

கனகாவும், கார்த்திக்கும் கண்களால் பேசிக் கொண்டார்கள்

கார்த்திக், அவன் அப்பா காதில் ஏதோ சொன்னான், அவர் எல்லோரிடமும் ‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள், நான் இதோ வருகிறேன்,’ என்றார் நீலகண்டன், அப்போது சிவேஷ், கணேஷ், தினேஷ் எல்லாரும் வந்தார்கள் அவர்கள் மனைவிகளும் வந்தார்கள் ருத்ராதான் எல்லோரையும் அறிமுகப் படுத்தினான், அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நைசாக நழுவினான், கார்த்திக்கு ஹெல்ப் பண்ணனும்.....,

அங்கே தாத்தா ரூமில் அவன் சொல்லிக் கொண்டிருந்தான் அவன் காதலை அப்போது அதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார், நீலகண்டன்

'இப்போது சொல்லிட்டேனேப்பா,’ என்றான் கார்த்திக்

'சரி, பார்க்கலாம்' என்றார் நீலகண்டன்

'தாத்தா, தினேஷ் சித்தப்பாக்கு எப்படி, முடித்தீர்களோ அதே போல் இவன் கல்யாணத்தையும் இந்த இரண்டு கல்யாணத்தோடு வைத்துக் கொல்லாம்,’ என்று கண்ணடித்துக் கொண்டு கூறினான் ருத்ரா

அவரும் குறும்பாக சிரித்துக் கொண்டு ‘பார்க்கலாம்!’ என்று அங்கிருந்து கிளம்பினார்

கார்த்திக்கை இருவரும் கொஞ்சம் அழவைக்க ஆசைப் பட்டார்கள், எல்லாம் அவ்வளவு ஈசியாக கிடைத்தால் அதன் மதிப்பு குறைந்துவிடும்

எல்லோரும் கீழே இறங்கி வந்தனர், அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர், டிபன் சாப்பிடலாமே என்றார் நீலகண்டன், இல்லை நாங்கள் இப்போதான் சாப்பிட்டு  வந்தோம், எல்லாம் நம்ம ருத்ரா தம்பி தான் ஏற்பாடு செய்திருந்தார், தம்பி டிபன் நல்லாயிருந்தது என்றார் கிருஷ்ணன். அப்போது அங்கு சிவகுமார் குடும்பத்தார் வந்தார்கள் அவர்களை, எழுந்துச் சென்று வரவேற்றார்கள், வந்தவர்களை குசலம் விசாரித்து அவர்களுக்கு டிபன் காபி சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினர்,

அவர்கள் எல்லோரும் உள்ளே சென்றனர், சித்ராவுக்கு கண் ஜாடை செய்தான், அவளை போய்க் கவனிக்கச் சொல்லி, கமலத்தை அறிமுகப் படுத்தி, அவளையும் போய் அவளுடைய சம்பந்தி வீட்டை கவனிக்கச் சொன்னார் நீலகண்டன், அவர், ருத்ரா, சித்ராவுக்கு, கண் ஜாடை காட்டியதையும் பார்த்தார்.

அவர் லேசாக சிரித்துக் கொண்டே தன் பேரனைப் பார்த்தார் அவன் முகமும், கம்பீரமும் எல்லோரையும் வசீகரிக்கிறது அதான் இந்த அழகான பெண்ணும் அவனிடம் காதலில் விழுந்திருக்கிறாள், இவனும் தான் அவளிடம் மயங்கி இருக்கிறான் பார்க்கலாம், இந்தக் கல்யாணத்துக்கு அப்புறம் அவனிடம் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்,

சித்ரா, மட மட என்று எல்லார்க்கும் பரிமாறினாள், அப்போது, சிவகுமார், ‘உங்க முகம் ரொம்ப பமிலியரா இருக்கு, உங்களை என் பாங்கில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்,’ என்று சொன்னான், ‘இருக்கலாம்,’ என்று அவள் சொன்னாள்,’ நீங்க எங்க ஒர்க், பண்ணறீங்க,’ என்று அவன் கேட்டான்

அதற்கு அவள் பதில் சொல்ல ஆரம்பிக்கு முன் ருத்ரா வந்து அவனோடு பேச ஆரம்பித்தான், அதனால் அவள் பதில் சொல்லவில்லை, ஆனால் இந்த பேச்சை ருத்ராவும் அப்போது கேட்டுக் கொண்டுதான் வந்தான், குமாருக்கு அவன் கம்பெனி பேர் தெரியும்.

ருத்ராவிடம் பேசிக் கொண்டிருந்தவன், ‘இவங்க யார் ருத்ரா, இவங்களை என் பாங்கில் பார்த்திருக்கிறேன்,’ என்றான், குமார்

'பார்த்திருபீங்க, அவங்க எனக்குத் தெரிந்தவங்க, ஹெல்ப்க்கு வந்திருக்காங்க' என்றான் ருத்ரா

'விடாமல், ஏன் ருத்ரா, ரொம்ப தெரிந்தவங்களோ, ரொம்ப அழகாவும், பண்பானவங்கலாகவும் இருக்காங்க, இஸ், சம்திங், கோயிங் ஆன்’ என்று விஷமச் சிரிப்புடன் கேட்டான் குமார்

ருத்ரா சிரித்துக்கொண்டே, 'இல்ல குமார் ஏதாவது இருந்தா உங்ககிட்ட சொல்லாம வேறு யார் கிட்ட சொல்லப் போறேன், சொல்லுங்க'

என்று கூறி பேச்சை மாத்திவிட்டான்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.