(Reading time: 11 - 22 minutes)

 

ல்லோரும் வெளியே வந்தார்கள், அவர்கள் வரும்போது கல்பனா குடும்பத்தார் வந்தார்கள், எல்லோருக்கும் எல்லாரையும் அறிமுகப் படுத்தினார், சித்ராவையும் கூட்டு எல்லாருக்கும், இவளும் என் பேத்திதான் என்றார் நீலகண்டன், அதைக் கேட்ட சித்ரா, கண்களில் கண்ணீர் நிறைந்தது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ருத்ராவின் முகம் கனிந்தது, தாத்தாவை ஒரு நன்றி கலந்த பார்வை பார்த்தான், அவள் ருத்ராவைப் பார்த்தாள், ருத்ரா அழக் கூடாது, என்று கண் ஜாடையால் சொன்னான், அவளும் கண்ணைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்,அதில் அவனும் லேசாக நகைத்தான், இதையெல்லாம் மூன்று ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது,

தாத்தா, மற்றவர்களுடன் பேசிக கொண்டிருந்தாலும், கண்ணெல்லாம், இவர்கள் இருவரின் மீதுதான், சிவேஷ், ருத்ராவின் அப்பா, அவருக்கும் ஒரு ஆர்வம் இந்தப் பெண்ணை, நம் பிள்ளை கூட்டி வந்திருக்கிறான், ஆனால், அப்பா அவளைக் கொண்டாடுகிறார் என்றால்,ஒரு வேளை ருத்ரா, அவன் மனதை அவரிடம் சொல்லியிருப்பானோ என்று, நினைத்தார்

குமார், கண்டு பிடித்து விட்டான், இரண்டு நாள் முன்பு ருத்ரா பாங்குக்கு வந்திருந்தபோது, பக்கத்து சீட், நந்துவைப் பார்க்க வந்த ஒரு பெண்ணோடு இவள் வந்திருந்தாள், அப்போது இவன் தன்னிடம் பேசிவிட்டு போகையில் இந்தப் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஆனால் அவன் திரும்பிப் பார்க்கவில்லை.  இப்போது புரிந்தது, ஆனால், இவளை எப்படி வீட்டுக்குள் கூட்டி வந்திருப்பான்,கேட்க வேண்டும் அவனிடமே என்று நினைத்துக் கொண்டான், சிரித்துக் கொண்டே.

மூன்று நிச்சயத்துக்கும் பெண்களை உட்கார வைத்தார்கள், அவரவர்களுக்கு வாங்கிய புடவைகளைக் கொடுத்தார்கள் நீலகண்டனும், சிவகாமியும், எல்லோரும் ரூமுக்குள் சென்று அதை கட்டிக் கொண்டு வந்தனர், அவர்கள் வெளியே வந்தவுடன் சிவகாமியும், கமலாவும், கற்பகமும், அவர்களுக்கு வாங்கிய நகையை போட்டுவிட்டார்கள், எல்லோரும் கேலியும், கிண்டலாகவும், பேசி, சிரித்துக் கொண்டிருந்தனர், பிறகு நீலகண்டன் நிச்சயப் பத்திரிகை வாசித்தார், எல்லோரும் அமைதியாக கேட்டனர், இதெல்லாம் ஆரம்பித்தப் போதே ருத்ரா மெதுவாக சித்ராவின் பக்கம் வந்து நின்று கொண்டான், அவள் மேல் பட்டும் படாமலும் இடித்துக் கொண்டு நின்றான், அவளுக்கு அது ஒரு இன்ப வேதனையாக இருந்தது, அவனுக்கோ அப்படியே அவளைத் தூக்கி கொண்டு தன் ரூமுக்கு ஓடவேண்டும் போல் இருந்தது.

என்றுமே அவள் அழகு ஆனால் அன்று மிகுந்த அழகுடன் இருந்தாள், ஏன்னா, அந்தப் பட்டுப் புடவை அவளுக்கு ரொம்ப நன்றாக இருந்தது, ஒரு சின்ன தங்கச் சங்கிலி போட்டிருந்தாள், வெகு அழகாக, அழகுக்கு அழகு சூட்டியது போலிருந்தது.

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்

எல்லா விசேஷமும் முடிந்தது, எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள், அப்போது, தாத்தா, தன் பக்கத்தில், சித்ராவை உட்காரச் சொன்னார், இல்லை தாத்தா நான் அப்புறம் சாப்பிடறேன் என்றாள் அவளுக்கு அவனுடன் சாப்பிட ஆசை, நேத்துதான் வேலை செய்ய ஆள் வேண்டியிருந்தது நீ செய்தாய் இன்று நிறைய இருக்கிறார்கள், வா இங்கே என்று கூப்பிட்டார், ருத்ரா நீயும் தான் எங்கே ஓடறே இங்கே வா என்னுடன் சாப்பிடு என்றார்

'இல்லை தாத்தா எல்லோரையும் கவனிக்கணும் நான் அப்புறம் சாப்பிடுகிறேன்' என்றான்

'எல்லாரையும் கவனிக்க உங்க அப்பா, சித்தப்பா இருக்காங்க, வாடா, என்னோடு சாப்பிடு' என்று கூப்பிட்டார், அங்குள்ள யாருமே அவர் வார்த்தையை தட்ட மாட்டார்கள், அவன் போய், உட்கார்ந்தான். அங்குள்ள அத்தனைப் பேருக்கும் ஆச்சர்யம் யாரையும் அப்படி அவர் கவனிச்சதே இல்லை, இவங்க ரெண்டு பேரையும், அப்படி கவனிக்கிறாரே என்று நினைத்தார்கள், ஆனால் நந்தினி கேட்டே விட்டாள், 'என்ன தாத்தா, அண்ணாவையும் அந்த அக்காவையும் அப்படி ஒரு கவனிப்பு?' என்று

சித்ராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது, அவரும் சிரித்துக் கொண்டே, ‘இருவரும் என்னைக் கவர்ந்து விட்டவர்கள்,’ என்று’ என்னப்பா சாப்பாடு கொண்டு வாங்க' என்றார்

வித்யா, ருத்ராவின் தங்கை அவள் அம்மாவைப் போல் பேசவே மாட்டாள், அளவோடு கேட்பவர்களுக்கு பதில் அவ்வளவுதான்,ரொம்ப கெட்டிக்காரி, அண்ணனின் ஜாடையில் இருப்பவள், நல்ல அழகு, ஆனால் சித்ரா, அவளை விட அழகு. வித்யா மனதுக்குள் சொல்லிக் கொண்டாள், அருமையான ஜோடி, இவர்களை, ஒன்று சேர்த்துவிடு, என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்

சித்ராவுக்கு, ருத்ரா அவ்வளவு கிட்டே நின்று அவள் உள்ளிருக்கும் உணர்சிகளை கிளப்பி விட்டான், அவனுக்கும் அதே உணர்வுதான், தான் என்ன பண்ணுகிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை.எல்லோரும் பார்ப்பார்களே என்ற உணர்வு இல்லை, அவளை அப்படியே அள்ளி அணைக்க வேண்டும்போல் இருந்தது.

எல்லோரும், பேசிக் கொண்டிருந்தார்கள் அருகருகே இருந்த இவர்கள் தங்களை சிலபேர் கவனிப்பதை உணரவில்லை. இருவரும் ஒருவரிடம் ஒருவர் மயங்கியிருந்தனர். 'ஹ்க்கும், என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டு திரும்பினர், இருவருக்கும் வெட்கத்தில் முகம் சிவந்தது, சித்ரா வெட்கப் பட்டு ஓடிவிட்டாள், ருத்ராவோ, குமரனிடம், 'ஆ, சொல்லுங்க, மாப்பிள்ளை', என்றான்  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.