(Reading time: 11 - 22 minutes)

'ன்கிட்டேயே மறைக்கிறீங்களே,’ என்றான் குமரன்

'என்னது உங்ககிட்டே மறைச்சேன்?' என்று கேட்டான்

'இதப் பாருடா, சாருக்கு ஒன்னும் புரியலையாமா!, என்ன அநியாயம் இது, கண்ணுக்கெதிரே ஒருவரை ஒருவர் மெய்மறந்திருந்துவிட்டு, என்ன உன்கிட்டே மறைச்சேன் என்று கேட்கிறீர்கள் ' என்று கேட்டான்

'இதப் பாருங்க குமரன், இது வரையிலும் நாங்க அந்த மாதிரி ஒரு பேச்சு பேசியதில்லை, அப்படி இருக்கும்போது எப்படி சொல்லமுடியும் சொல்லுங்க'

'நீங்க ரெண்டு பெரும் அந்த மாதிரி ஒருவருக்கொருவர் ஒன்றும் பேச வேண்டாம், உங்கள் இருவரின் கண்களும் சிறைபட்டு விட்டதே' என்றான் குமரன் 'உங்க ரெண்டு போரையும் அந்த நிலையில் நிறைய கண்கள் பார்த்துவிட்டன, அது தெரியுமா?' என்று கேட்டான்

அவன் மறுபடியும் வெட்கப்பட்டான், அவன் வெறுமனே தலையை ஆட்டினான்

மனதினுள் நினைத்துக் கொண்டான், ஏன் இந்த மாதிரி எல்லோர் எதிருலும் அவளைக் கண்டு மயங்கினோம், அவள் அருகில் எப்படிப் போனேன், அது கூட அவனுக்குத் தெரியாது, அவள் என்ன நினைத்திருப்பாள், அவனைப் பற்றி, என்று நினைத்துக் கொண்டிருந்தான் அப்போது தாத்தா அவனை அழைத்தார்

கல்யாண விஷயமாக, 'ஏனப்பா, ஹோட்டல் புக் பண்ணறேன் என்று சொன்னாயே? பண்ணிட்டாயா, என்று கேட்டார்

'எல்லாம் பண்ணியாச்சு, அவர்களிடம் எல்லாம் கான்ட்ராக்டில் கொடுத்தாச்சு, ஒன்னே ,ஒன்னு, உங்களிடம் கேட்கனும்னு நினைத்தேன்' என்றான்

'என்னப்பா, என்ன கேக்கணும், எல்லாம், உன் இஷ்டம்,' என்றார் தாத்தா

'இல்லை மூன்று நாளைக்கு பண்ணலாமா? இல்லை ரெண்டு நாள் போதுமா? என்று கேட்டான்

'ரெண்டு நாளைக்குப் போதும்பா, சாந்தி முஹுர்த்தம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம், அப்படியே வனிதாவுக்காக வாங்கியிருக்கும் பிளாட்டில், என்ன, என்ன வேண்டுமென்று பார்த்து, அதை ரெடி பண்ணிடு, அவங்க கல்யாணத்துக்குப் பிறகு அங்கே குடுத்தனம் பண்ணட்டும், மாப்பிள்ளையையும் கூட்டிட்டுப் போ,' என்றார் தாத்தா

'சரி, தாத்தா,' என்றான் ருத்ரா

பிளாட் சாவியை எடுத்துக் கொண்டான், சித்த்ராவைக் கூட்டிக் கொண்டான், அவளை 'காருக்கருகில் வெயிட் பண்ணு நான் இதோ வரேன், என்று, குமாரனைக் கூட்டிக் கொண்டு போனான்.

'குமரன், நம்ம தாத்தா, வனிதாக்கு ஒரு பிளாட் வாங்கியிருக்காரு இல்லையா, அதைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும்னு சொல்லுங்க நான் ஆர்டர் கொடுத்துடறேன், சித்ராவும் வீட்டுக்கு என்ன தேவை என்று சொல்லு அதெல்லாம் ஆர்டர் கொடுத்திடலாம், என்றான்

‘ஏன் ருத்ரா, நீங்களோ, தாத்தாவோ என்னால் ஒன்னும் வாங்க முடியாது, என்று நினைத்து விட்டீர்களா என்ன? நான் வேலை செய்வது பாங்கில்...’

அவன் முகத்தில் கோபம் இல்லை, ஆனால் வருத்தம் இருந்தது, ‘நானே லோன் போட்டு ஒரு பிளாட், வாங்குவதாக இருக்கிறேன், இது எனக்கு வரதட்சிணையாக தெரிகிறது, ஸாரி, நான் வரதட்சிணை வாங்கக் கூடாது என்ற ஒரு கொள்கையோடு இருப்பவன்,‘ என்று அழுத்தமாகச் சொன்னான்.

'சரி , உங்கள் பேரிலோ, நீங்கள் கேட்டாலோ, அது வரதட்சிணை, நாங்களே கொடுத்தால் அது சீர், ஆனால் உங்களைப் பார்த்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது,’

'இல்லை ருத்ரா, என்னுடைய பணத்தில் வீடு வாங்கி, அதில் என் மனைவியை ராஜாத்தியாய் வாழ வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி, அதனால், இந்த வீடு இப்போது எனக்கு வேண்டாம்,’ என்றான் குமரன்

'சரி நாம ஒரு டீலுக்கு வரலாமா?' என்று கேட்டான் ருத்ரா,

என்ன என்பதுப் போல் பார்த்தான் குமார்

‘ஒன்றுமில்லை,நீங்க வீடு வாங்க எவ்வளவு நாள் ஆகுமோ? அது வரையில், நீங்கள் கண்டிப்பாக  அந்த வீட்டில் இருக்கமுடியாது, அதை ஒத்துக் கொள்கிறீர்களா?, அது வரையில் இந்த வீட்டில் இருங்கள், அதற்கு என்ன வாடகையோ அதை வனிதா பேரில் ஒரு அக்கௌன்ட் ஒன்னு ஓபன் பண்ணி அதில் போடுங்கள், அவளுக்கு ஏதாவது தேவையென்றால் அவள் உபயோகப் படுத்திக் கொள்ளட்டும், நிரந்தரமா நீங்கள் அங்கேயே இருந்து இதே போல் வாடகையாக பணம் கொடுத்தாலும் சரி, அது உங்கள் இஷ்டம்,' என்றான்

Episode # 08

Episode # 10

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.