(Reading time: 11 - 22 minutes)

08. என் மனதை தொட்டு போனவளே - VJ G

வள் ஏறியவுடன் காரை கிளப்பினான், டை7ம் பார்த்தான் ஒன்பதே முக்கால், 'உங்க வீட்டில் சொல்லிவிட்டாயா சித்ரா, எப்போ வருவேன் என்று சொன்னாய்?' என்று கேட்டான்

'சொல்லிவிட்டேன், வர பத்துக்கு மேல் ஆகும் என்று சொல்லிவிட்டேன் என்று சொன்னாள்,'

'எங்கே போறேன் என்று சொன்னாய்?’ என்று கேட்டான்

en manathai thottu ponavale

'எனக்கு வேலை வாங்கி கொடுத்தவர் வீட்டில் கல்யாணம், அவங்க அம்மா தனியா வேலை செய்யறாங்க கூட உதவி செய்ய போறேன் என்று சொன்னேன்,' என்றாள்

ஒரு பெரிய மொபைல் கடை திறந்திருப்பதை பார்த்தான், உடனே காரை நிறுத்தி, ‘கொஞ்சம் எனக்கு இங்கு வேலை இருக்கு, உள்ளே வா,’ என்று அவளை அந்த நேரத்தில் தனியாக விடக் கூடாது என்று கூட்டான்

அவளும், அவனுடன் உள்ளே போனாள்,

அவனுக்கு என்ன வேண்டுமென்று தெரியும், அவன் ஒரு போன் பேரைச் சொன்னான், அவர்கள் கொடுத்ததை வாங்கி, அங்கேயே ஒரு சிம் வாங்கி போட்டான்,'போலாம் வா ' என்று அவளை கூட்டிக் கொண்டு காரில் அவளை ஏற்றி விட்டு பின் தான் ஏறி காரைக் கிளப்பினான், காரை ஒட்டிக் கொண்டே அவள் கையில் அந்தப் போனை கொடுத்தான்,

அவள் 'எனக்கா வாங்கினீர்கள், எதற்கு இது, வேண்டாம்' என்றாள்

'நீ வாங்கலைன்னா, நான் தூக்கிப் போட்டுடறேன்' என்றான்

'அவள் பயந்தாள், இவ்வளவு கோபம் வருமா உங்களுக்கு?' என்று கேட்டாள்

'எப்போ வரணுமோ வரும்' என்று கூலாக பதில் சொன்னான்

'அவளும் கொஞ்சம் யோசித்து சரி நான் க்ங்றேன், ஆனால் இனிமேல் இந்த மாதிரி வாங்கித் தருவதெல்லாம் கூடாது, அம்மாகிட்ட என்ன சொல்வேன் தெரியலே,'என்றாள்

'அது, ஒண்ணுமில்லை சிம்பிள் உங்க ஆபிசில் கொடுத்தாங்கன்னு சொல்லு,பொய்யில்ல, உன் ஆபிசில பேசி இந்தப் பணத்தை நான் வாங்கிக்கிறேன் '

அப்போ இது நீங்க எனக்கு கொடுக்கும் கிப்ட் இல்லையா?' என்று அவள் கேட்கவும்

'இல்லை' என்று அவன் சிரித்துக் கொண்டே தலை ஆட்டினான்

‘இந்த, லெப்ட்ல திரும்பனும் ப்ளீஸ் இங்கேயே விட்டு விடுங்கள், அங்கே கொஞ்சம் குடித்தனக்காரர்கள் தப்பாக நினைப்பார்கள், அதனால்இங்கேயே என்னை விட்டு விடுங்கள்’ என்றாள்

‘ஆனால் இத்தனை நேரத்துக்கு மேலே உன்னை தனியா அனுப்பச் சொல்லறியா, சரி நீ முன்னாடி போ நான் மெதுவா பின்னாடி வரேன், நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு வந்துடு,’ என்றான்

‘இல்லை நான் ஏழு மணிக்கெல்லாம் அங்கு இருப்பேன்,’ என்றாள்

அவன் இரண்டு நிமிஷம் கழித்து அவள் பின்னாடியே நடந்தான், அவள் வீட்டினுள் நுழைந்தவுடன் கொஞ்சதூரம் நடந்து அவள் வீட்டினுள் போய்விட்டாள் என்று உறுதிப் படித்துக் கொண்டு, காரை வேகமாக எடுத்துச் சென்றான்

அவனால் தன்னையே நம்பமுடியவில்லை ரொம்பநாள், தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த பெண், தன்னுடன் தன் பக்கத்தில் தன் காரில் ஆஹா, என்ன ஆனந்தம், என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்டினான்

வீட்டில் நுழைந்தவுடன் அம்மா ஹாலில் தனக்காக காத்திருப்பதைப் பார்த்தான், ‘என்னம்மா இது, நான் என்ன சின்னப் பையனா ப்ளீஸ் போய் படும்மா,’ என்றான்

‘இல்லப்பா நீ வீட்டுக்கு இன்னும் வரவில்லை என்றால், என்னால் எப்படிப்பா தூங்க முடியும், பால் வைத்திருக்கிறேன் குடித்துவிட்டு போ,’ என்றாள்

‘சரிம்மா,’ என்றான் ருத்ரா

பாலைக் குடித்து விட்டு தன் ரூமுக்குச் சென்று, ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து முதலில் சித்ராவைக் கூட்டான்,

‘என்ன தூங்கலியா,’ என்றாள்

'அதுக்கு முன்னாடி, உங்க அம்மா ஒன்னும் சொல்லலியா லேட் ஆனதுக்கு,’ என்று கேட்டான்

'இல்லை விஷயம் சொன்னேன் சரி அவங்களுக்கு ஹெல்பா இருந்தியேன்னு சந்தோஷப் பட்டாங்க நான் சொல்லிட்டேன் இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படித்தான் என்று' என்றாள்

'சரி நாளைக்கு பார்க்கலாம் குட் நைட்' என்றான்

'குட் நைட்' என்றாள் ஆனால் குரலில் ஏமாற்றம் தெரிந்தது

போனை ஆப் செய்தான் உடனே கார்த்திக் கூப்பிட்டான், என்னடா இந்த நேரத்துக்கு என்றான் ருத்ரா

‘ஏன் சாருக்கு நேரமில்லையோ என்னைக் கூப்பிட?’ என்று அவன் கேட்க ‘நிச்சயமாக இல்லை, வீட்டில் இரண்டு கல்யாணத்தை வைத்துக் கொண்டு எனக்கு எங்கே நேரமிருக்கு,’

‘அது சரி அதான் நீ என் காதலைப் பத்தி எங்க அப்பாகிட்ட பேசவில்லையோ, அந்த சின்ன பெண், வனிதாக்கு கல்யாணமாம், ஏண்டா நான் பேசறேன் நான் பேசறேன்னு இப்படி என் கழுத்தை அறுத்துட்ட? சரி நான் காலைல வரேன் என்னை ஸ்டாஷன்ல வந்து கூட்டிக்க,’ என்றான்

‘இல்லைடா ஒரு ஆட்டோ பிடிச்சி வந்துக்க எனக்கு வேற வேலை இருக்கு,’ என்றான்

‘அப்படியா சரி,’ என்று போனை கட் பண்ணான்

இவன் படுத்துக் கொண்டான் ஒரே டயர்ட் ஆக இருக்கு என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.