(Reading time: 11 - 22 minutes)

 

டுத்த நாள் காலையில் அலாரம் வைத்து நாலரை மணிக்கு எழுந்து விட்டான், குளித்து ரெடியாகி, கீழே வந்து ,சமயலறையில் காபி டிகாக்ஷன் போட்டான், தனக்கு கொஞ்சம் காபி கலந்து சாப்பிட்டான், தான் கிளம்பினான் ரயில்வே ஸ்டேஷனுக்கு கனகா குடும்பத்தாரை அழைத்து கொண்டு அவர்களுடைய இன்னொரு வீட்டில் கொண்டு விட வேண்டும்,அவர்களுக்கு காபி டிபன் அங்கே பக்கத்தில் ஒருவரிடம் சொல்லி, கொண்டு வந்து கொடுக்கச் சொல்லிவிட்டான் தங்கள் வீட்டுக்கும் அதே மாதிரி கேட்டரிங் காலை டிபன், மதயான சாப்பாடு எல்லாம் ஆர்டர் கொடுத்து விட்டான்

தாத்தா இவனை நம்பித்தான், மூன்று கல்யாணங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.

அவன் பெரிய காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான், ருத்ராவின் அம்மா கீழே இறங்கி வந்தாள் ஐந்தரை மணிக்கு, அவள் சமயலறையில் காபி டிகாக்ஷன் போட்டு வைத்திருந்தது, ஆச்சர்யத்துடன் பார்த்தாள், ருத்ராதான் எழுந்து வெளியே போவதற்கு முன் போட்டு வைத்து விட்டுப் போவான், இந்த மாதிரி ஒரு பையன் பொறக்க தான் என்ன தவம் செய்தேனோ, என்று நினைத்துக் கொண்டாள்

ருத்ரா போய் சேர்ந்த போது ட்ரைன் வந்து சேர்ந்தது, கனகாவைப் பார்த்திருப்பதால் தெரியும், அவர்களுக்கு போன் செய்தான் எந்தக் கோச்சில் இருக்கீங்க என்று கேட்டான், தனக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜீவனையும், பரத்தையும், வரச் சொல்லியிருந்தான், அவர்களும் வந்திருந்தார்கள், இவன் கோச் எண்ணைக்  கேட்டுக் கொண்டு எல்லோரும் அங்கு போனார்கள், அவர்களை பார்த்தனர், ருத்ரா தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான், தன் கூட வந்தவர்களையும் அறிமுகப் படுத்தினான், எல்லோரும் அவர்கள் பாகை வாங்கப் போனார்கள், இல்லை இதோ ‘இவர்கள் இருக்கிறார்கள்,’ என்று அவர்களிடம் பாகுகளை கொடுத்தார் கிருஷ்ணன்

‘இவர்கள் தான், உங்கள் வீட்டுக்கு சமையல் செய்ய வந்திருப்பவர்கள்,’ என்றார் கிருஷ்ணன்,

‘நல்லது நான் அவர்களை என்னோடு கூட்டிக் கொண்டு போறேன், உங்களை வீட்டில் விட்டு விட்டு, நான் போய் விடுவேன், இவர்களில் ஒருவர் இருப்பார் உங்களுடன் என்றார், உங்களுக்கு காபி டிபன் எல்லாம் ஆர்டர் செய்திருக்கிறேன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடும், நீங்கள் குளித்து ரெடியானவுடன் டிபன் காபி சாப்பிட்டு ரெடி என்று சொன்னவுடன் இவர் உங்களை, எங்கள் வீட்டுக்கு கூட்டி வருவார்கள் சரியா,’ என்று கூறி, சமையல் ஆள்களை, ஜீவனிடம், ‘என் வீட்டில் அம்மாவிடம் சொல்லி இவர்களை விட்டு விட்டு, அங்கேயே இரு நான் வர வரை,’ என்றான், அங்கிருந்து  கிளம்பி அவன் திரும்பி ரயில்வே ஸ்டேஷன் வந்தான், கார்த்திக்கை கூட்டிக் கொண்டு போவதற்கு,அவனுக்கு கால் செய்தான், ‘எங்கே இருக்கே கார்த்திக்,’ என்றான், ‘இப்பதான் வெளியே வரேன், இந்த ஆட்டோ காரங்களுடன் போராடனும்,’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, ருத்ரா அவனருகில் கார் கொண்டு நிறுத்தினான்,

''எனக்குத் தெரியும், நீ வராமல் இருக்க மாட்டாய் என்று,' சொல்லி, தாவி ஏறினான் காரில்

'வரமாட்டேன் என்றாய் வந்து விட்டாய்,’ என்று கேட்டான்

'ஆமாம் வேறு வேலை இருந்தது, அதனால் உன்னைக் கூட்டிக் கொள்ள முடியாது என்று நினைத்தேன், ஆனால் அந்த வேலை முடிந்து விட்டது, என் ஆளுங்களை, பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்து விட்டேன், அது சரி நீயும் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய் அப்பத்தான் எல்லா வேலைகளையும் ஈசியாக செய்யமுடியும் டயர்ட் ஆகாது,' என்று கார்த்திக்கிடம் சொன்னான்

'ஆமாம் எப்படி, தினேஷ் அண்ணன் கல்யாணத்துக்கு சரி என்று விட்டார், இந்தப் பெண்ணை ஒரு குத்தமும் சொல்லாமல் சரி என்று விட்டாரா,’ என்று கேட்டான்

'ஹ்ம்ம், அவருக்கு பெண் பிடித்து விட்டது, சரி என்று சொல்லிவிட்டார், நம்ம வனிதாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்னுடைய சிநேகிதன் தான் நல்லப் பையன், வனிதாவை பிடித்து விட்டது, அதுவும் முடிந்து விட்டது, என்றான் ருத்ரா

'அது சரி, இதெல்லாம் தெரிகிறது என்னைப் பற்றி நீ தாத்தாவிடம் சொல்லவில்லை,' என்று கேட்டான்

'நீ தான் உங்க அப்பாவிடம் சொல்லவேண்டும், அதற்கப்புறம் அவரை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு, புரிந்ததா,'

'சரி' என்று கூறினான்

'ஆனால், வனிதா ரொம்ப சின்னப் பெண்ணாச்சே,’ என்றான் கர்ர்த்திக்

'ஆமாம், ஆனால் இந்த மாதிரி வரன் கிடைக்கிறது கஷ்டம், பையனுக்கும் பெண்ணுக்கும் பிடித்திருந்தது, பையன் கல்யாணத்துக்கு அப்புறம், படிக்கட்டும் என்று சொன்னார், அப்புறம் என்ன, அதான் முடிவு செய்துவிட்டார் தாத்தா,’ என்று சொல்லி முடித்தான் ருத்ரா

வீடு வந்து விட்டது, டைம் பார்த்தான் மணி ஏழரை ஆகி விட்டது

ஓ, சித்ரா வந்திருப்பாள் என்ற நினைப்பே இனிப்பாய் இருந்தது, அவளை இவ்வளவு பேர் எதிரில் எப்படி சைட் அடிப்பது, நம்ம தங்கைகள் வீடு நிறைய  இருக்கிறார்கள், தாத்தா பாட்டி வேறு அதனால் அடக்கி வாசிக்கணும் ஆனால் அவள் விட மாட்டேன் என்கிறாளே, என்று எண்ணியவாறு உள்ளே சென்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.