11. சதி என்று சரணடைந்தேன் - சகி
"அண்ணா!எழுந்திரிடா!"
"டேய்!ஏன்டா இம்சை பண்ற?"
"தீக்ஷா கல்யாணத்துக்கு வரலையா?"
"நீ போயிட்டு வா!எனக்கு தூக்கம் தான் முக்கியம்!"
"போயிட்டு வந்து தூங்கு!"
"ஆர்யா!என்னை கொலைகாரனாக்காதே!"
-ராகுல் அருகிலிருந்த தலையணையை கட்டிப்பிடித்து உறங்கினான்.
"எப்போ பார்த்தாலும் தூக்கம்...சோம்பேறி!எழுந்திரி!"
"முடியாது போ!"
"ஆர்யா!"-மதுவின் குரல் கேட்டது.
"மா!அண்ணா எழுந்துக்க மாட்றான்!"
"அவனுக்கு தோணுறதை செய்யட்டும்!நாம எல்லாம் அதுப்பற்றி கேட்க கூடாது!நீ
வா!"-அவளின் வார்த்தைகள்அவனை பெருமளவும் காயப்படுத்தின.
ராகுல் எழுந்து அமர்ந்தான்.
"என் டவல் எடுத்துட்டு வா!குளிச்சிட்டு வரேன்!"-ராகுல் எழுந்து சென்றான்.
"எப்படிம்மா?"
"போய் ரெடியாகு ஆர்யா!"
"பொண்ணை அழைச்சிட்டு வாங்க!"-புரோகிதர் கூற,தீக்ஷாவின் தோழிகள் அவளை அழத்து வர சென்றனர்.ராகுலுக்கு ஏனோ அந்நிகழ்வு பிடிக்கவில்லை.அவள் இன்னொருவனுக்கு
சொந்தமாவதை அவன் மனம் ஏற்கவில்லை.
அவன் யாருடனோ தொலைப்பேசியில் உரையாடி கொண்டிருந்தான்.
தீக்ஷா மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
ராகுலின் கண்கள் அவளை சரணடைந்தது.
அவள் முகத்தில் மகிழ்ச்சியோ!கனவுகளோ!இல்லை...
அந்தக்கண்கள் அதில் இருந்த கலக்கம்...
"மச்சான் நான் அப்பறம் பேசுறேன்டா!"-இணைப்பைத் துண்டித்தான்.
ராகுலின் கண்களும் கலங்க ஆரம்பித்தன.
"மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்க!"-என்ற வார்த்தையில் ராகுல் தன்னிலை உணர்ந்தான்.
ஸ்ரீதர் மிகுந்த ஆனந்தத்தோடு வந்தான்.
"ஸர்வ மங்கள மாங்கல்யே..."-எனத்தொடங்கியது அந்த மந்திரம்
"கெட்டிமேளம்!கெட்டிமேளம்!"என்று புரோகிதர் கூறினார்.ராகுலிடமிருந்து பெருமூச்சுகள் கண்ணீரோடு!
மாங்கல்யத்தை அவள் கழுத்தருகே கொண்டு சென்றான் ஸ்ரீதர்.
தீக்ஷா கண்ணீரோடு அந்த நாராயணனையே வணங்கினாள்.
கழுத்தருகே வந்த மாங்கல்யம் அப்படியே நின்றது.
ஸ்ரீதர் அதனை மீண்டும் தாம்பூலத்தில் வைத்து எழுந்தான்.
அவருக்கும் அச்செயலால் மிரட்சி!!
தீக்ஷாவும் எழுந்தாள்.
"ஸ்ரீதர் என்னடா பண்ற?"
"கூல் மா!கூல்!இது எனக்கு கிடைத்த சந்தர்ப்பம்!"
"ஞாபகமிருக்கா ஸ்வீட் ஹார்ட்!சில வருஷங்களுக்கு முன்னாடி,அன்னிக்கு எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்தினது ஞாபகமிருக்கா?"-தீக்ஷாவை பார்த்து
கேட்டான்.
"இவனை மாதிரி ஒரு கேவலமானவன் யார் இருப்பா?அரஸ்ட் பண்ணுங்க இன்ஸ்பெட்டர்!"-பழைய சரித்திரம் நினைவு வந்தது.
"அன்னிக்கு அத்தனை பேர் முன்னாடி நான் தலை குனிந்தேன்.இப்போ உன் சான்ஸ்!நீ இந்த நிமிஷம் என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்!இல்லைன்னா,உன் குடும்பமே இப்போ தலைகுனியும்!"-அனைவரது பார்வையும் அவன் மீதே விழுந்தன.
"ஸ்ரீதர் என்ன பண்ற நீ?"-கவுதம் பதறினான்.
"நீ யார்டா இதை கேட்க!"
"நான் அவளோட நண்பன்!"
"நண்பன்னா உன் தகுதி எங்கேயோ அங்கேயே இரு!"
"நீ பண்றது நியாயம் இல்லை ஸ்ரீதர்!"கூறிய மகான் நம் ராகுல் தான்.
"இத்தனை பேர் முன்னாடி ஒரு பொண்ணு மேலே தனிப்பட்ட பகையை வெளிப்படுத்துறது சரியில்லை!"
"ஆ...உனக்கு தானே இவளை நிச்சயம் பண்ணாங்க!அன்னிக்கு உன்னை பிடிக்கலைன்னு சொன்னவ கல்யாணத்துக்கு போய் வந்திருக்க!"-அவன் ஏளனமாக பேசினான்.
"வார்த்தையை அளந்து பேசு!"
"நீ என்னடா இவளுக்கு சிபாரிசு வர!கூட பழகினவன் தானே வாழ்ந்தவன் இல்லையே!"-நொறுக்கிவிட்டான் தனது பேச்சினால்!!