(Reading time: 8 - 16 minutes)

01. என்னுள் நிறைந்தவனே - 01 - ஸ்ரீ

Ennul nirainthavane

து ஒரு பொன்மாலை பொழுது

வான மகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்…”

அந்தி மாலை நேர இயற்கையை ரசித்தவாறே தன் பேருந்து பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி மகிஷா எ மகி சென்னை யை நோக்கி..

மகிஷா 21 வயது பட்டாம்பூச்சி.,.இளங்கலை கணிணி அறிவியல் பட்டதாரி..பிறந்து வளர்ந்தது அனைத்தும் தூத்துக்குடி.படிப்பில் கெட்டி ஆனாலும் அவளுக்கு நடனம் என்றால் உயிர்..அவள் நடனத்தின் சிறப்பே உடல் அசைவுகள் மட்டுமல்லாது அதற்கேற்ப கவிபாடும் அந்த கண்கள் தான்..சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள்,தாயின் கட்டுப்பாட்டிலும்,அன்பிலும் முழுமை பெற்ற மங்கையாய் நிற்கிறாள்..அதற்கு இந்த சென்னை பயணமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு ..

பிறந்தலில் இருந்து தன் ஊரைத் தாண்டிச் செல்லாதவள்,இன்று தன் அன்னைக்காக 600 கி.மீ தொலைவில் சென்று வாழ முடிவெடுத்துவிட்டாள்..கல்லூரிப் படிப்பை முடித்த மறுமாதமே கேம்பஸ் இன்டர்வியுவில் தேர்ச்சி பெற்று பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிய போகிறாள்..

மகி மிகவும் அன்பானவள்..அவளின் நட்பு வட்டாரமே அதை தெரியப்படுத்தும்,அவளைச் சுற்றி எப்போழுதுமே நண்பர்கள் பட்டாளம் சூழ்ந்திருக்கும்..இன்றுகூட தோழிகள் அனைவரும் பேருந்து நிலையம் வரை வந்து கண்ணீர் மல்க அவளை வழியனுப்பி வைத்தனர்..அதிலும் அவள் தோழி கல்யாணிக்கு இவள் சென்னை செல்வதில் விருப்பமேயில்லை,ஏண்டி  கண்டிப்பா போய் தான் ஆகனுமா,பத்திரமா இருந்துப்பியா…இதயே 1000 தடவைகேட்டு விட்டாள்..தோழியின் அன்பில் நெஞ்சுருகியவள்அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளை சமாதான படுத்தினாள்…அனைத்தையும் கடந்து இதோ இன்னும் சில நிமிடங்களில் அவள் பாதம் சிங்கார சென்னையை தொடவிருக்கிறது..இங்கு அவளது வாழ்க்கையில் ஏற்படபோகும் மாற்றங்கள் என்னென்ன???எதிர் கொள்ள போகும் சவால்கள் என்னென்ன???பொறுத்திருந்து பார்போம்...

தே நேரம்,சென்னையின் அந்த பிரபல ஐடி கம்பெனி தன் வழக்கமான  பரபரப்பிற்கு சற்றும் குறைவின்றி சுழன்று கொண்டிருந்தது..அதன் மூன்றாவது தளத்தில்,”சத்யா இன்னும் த்ரி டேஸ்ல புது பேட்ஜ் எம்ளாயீஸ் வந்துருவாங்கநு நெனைக்கிறேன்..சோ அஸ்ஸ அப்ளிகேஷன் மேனேஜர் அதுக்கு ஏத்த மாறி அப்ளிகேஷன்ஸ் அலாட் பண்ணிடுங்க”என்று கூறிக் கொண்டிருந்தார் டீயு கெட் ஆன மீரா..

சத்யா,”திவ்யா நெக்ஸ்ட் வீக் நியூ ஜாய்னீஸ் வராங்க சோ ட்ரெய்னிங்க்கு கான்பெரன்ஸ் ரூம் புக் பண்ணிடுங்க என்றவாறே தன் கேபினுக்குச் சென்றார்…

இவற்றை கேட்டுக் கொண்டிருந்த பரணி தன் நண்பனிடம்,டேய் மச்சான் இந்த தடவையாவது பொண்ணுங்களா வரனும்டா என்று சலித்துக் கொண்டான் அவனது நண்பனான ராமிடம்..சிறிய புன்னகையை பதிலாய் அளித்தவன்,தன் கணிணியில் கண்களைச் சுழற்றினான்..நீயே ஒரு சாமியார் உன்ட வந்து சொன்னேன் பாரு,என்று தன்னையே நொந்து கொண்டு வேலையைத் தொடர்ந்தான் பரணி…

ராம் 25 வயது இளைஞன்..கடந்து செல்பவரை நிச்சியம் மறுமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகன்..அமைதியின் இலக்கணம் ..அவசியமில்லாமல் வார்த்தைகளை விடத் தயங்கும் பொறுமைசாலி..தாய் தந்தைக்கு அடங்கிய பிள்ளை,தமக்கைக்கு அன்பான தம்பி..(ஷப்பா.,..இப்போவே கண்ணகட்டுதேநு நீங்க கதறுறது எனக்கு கேக்குது..ஆனா என்னங்க பண்றது குழந்தையாவே இருக்காரு நம்ம ஹீரோ..இவரு எப்போ மகி யை பாத்து எப்போ லவ் பண்ணி எப்போ கதை முடியறதுநு நினைக்குறீங்களா..டோன்ட் வொரி இந்த ஸ்ரீ இருக்க பயமேன்..)

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா,

உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா

கருவறை உறக்கம் வரம்மம்மா

மீண்டும் என்னை ஒருமுறை சுமப்பாயம்மா…”

தன் விடுதி அறையின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாடலில் தன்னை மறந்திருந்தாள் மகி…இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது அவள் இந்த விடுதிக்கு வந்தும்,அவள் அன்னை ஊருக்குச் சென்றும்..தாயின் முன் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டவளாள் இப்போது அவ்வாறு இருக்க முடியவில்லை…தாயின் அரவணைப்புக்காக ஏங்கினாள்…சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள்,கம்பெனி பஸ்ஸிற்கு டைம் ஆவதை உணர்ந்து கிளம்பத் தயாரானாள்..

இரண்டு நாட்கள் இன்டக்ஷன் ப்ரோக்ராம் முடிந்து இன்று தனக்கென்று ஒதுக்கியிருப்பதாக கூறிய ப்ராஜெக்டை தேடி மூன்றாவது தளம் நோக்கிச் சென்றாள்..

“ஹலோ மேம்,ஐம் மகி,..நியூ ஜாய்னி..”

“ஹாய் மகி,வெல்கம்,….அஅண்ட் கால் மீ மீரா..நோ மேம் அண்ட் ஆல்…”திவ்யா அவர் நியூ ஜாய்னி…

ஓகே மீரா ஐ வில் டேக் கேர்..- திவ்யா

ஹாய் மகி ஐ ம் திவ்யா..

ஹாய் திவ்யா…பேசிக் கொண்டே வந்தவளை காற்றென கடந்து சென்றான் அவன்…அந்த கண நேர நிகழ்விலும் மனதில் பதிந்துதான் போனது அவனது உருவம்…

டேய் மச்சான் பரவால்ல டா நம்ம டீம் லயும் ஒரு ஃபிகர் அ போட்டாங்கடா,இனியாவது கொஞ்சம் போர் அடிக்காம இருக்கும்.. – பரணி

ரொம்ப பில்டப் குடுக்காத டா,ஏதோ டீச்சர் மாறி இருக்கா.. – ராம்..

அடப்பாவி எப்போடா பாத்த..நல்லவன் மாறியே வந்தியேடா,உன்னலா நல்லவன்நு நம்புறாங்க பாரு..கலிகாலம் டா..

ஹா ஹா அதெல்லாம் அப்படி தான்டா..பின்ன நீ பாத்த மாதிரி பட்டிகாட்டான் பஞ்சு மிட்டாய பாத்த மாதிரி பாக்க கூடாது நண்பா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.