(Reading time: 11 - 22 minutes)

11. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

வன் பாக்கெட்டில் இருந்த கை பேசி ஒலித்தது. எடுத்து யார் என்று பார்த்தான் “எமன்” என்று கை பேசியின் திரையில் வந்தது.

எமன் என்றால் ஒரே முறை உயிரை எடுக்கும் எம தர்மர் இல்லை. தன் ஆபிஸ்ல் இருந்து கொண்டு தன் உயிரைத் தினம், தினம் எடுத்துக் கொண்டிருக்கும் சந்துருவின் நம்பரைத்தான்  அப்படி அவன் தன் கை பேசியில் பதிவு செய்து வைத்திருந்தான்.

“இவன் எதற்காக இப்போது கால் செய்கிறான். என்னைக் காணாமல் பாசத்தில் அழைப்பவன் இவன் இல்லை. வேறு என்ன விஷயமா இருக்கும்” என்று புலம்பிக் கொண்டே போனை எடுத்து “ஹலோ” என்றான்.

unakkaga mannil vanthen

“என்னடா விஷ்ணு, உயிரோட தான் இருக்கியா? இல்ல செத்து, எம லோகம் போயிட்டீயா” நக்கலாகக் கேட்டான் சந்துரு. விஷ்ணுவிடம் சந்துருப் பேசும் தோரணையே அதுதான்.

விஷ்ணுவிற்குச் சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. அதை அடக்கியவாறே பதில் அளித்தான். “எப்படி சந்துரு, எல்லாத்தையும் நேரில் இருந்து பார்த்த மாதிரி சொல்ற. எம லோகம் போயிட்டுத்தான் வந்தேன்” இவனும் அதே நக்கலுடன் பதில் கூறினான்.

இப்படி ஒரு பதிலை சந்துரு, விஷ்ணுவிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. “என்ன, சார் பேச்சுல நக்கல் நர்த்தனம் ஆடுது. ஒரு நாள் பாக்கல என்றதும் துளிர்விட்டு போச்சா? அடக்கி வாசி தம்பி” சற்று தன் கூறலை உயர்த்திக் கூறினான் சந்துரு.

அப்போதுதான் விஷ்ணுவிற்கு உறைத்தது, இதுதான் முதல் முறை சந்துருவை எதிர்த்து தான்ப் பேசியது என்று. உடனே “ஆபத்து என்றால் தன் ஓட்டினுள் பதுங்கும் நத்தைப் போல” பழைய விஷ்ணுவாக மாறிப் போனான்.

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சந்துரு ஸாரி. என்ன விஷயம் சொல்லு” என்று பவ்யமாக பதில் கூறினான் விஷ்ணு.

தன் எல்லையைத் தக்க வைத்துக் கொண்ட சிங்கம் போல ஓர் உணர்வு சந்துருவிடம். அதே திமிரோடு “ஹ்ம்ம்ம் அது. நேத்து ஏன் ஆபிஸ் வரல? எம்டி கேட்க சொன்னாரு. அது மட்டும் இல்ல இன்னைக்கு காலை 10 மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு கண்டிப்பா வரனும் என்று எம்டி சொல்ல சொன்னாரு. கரெக்ட் டைம்கு வந்துடு, எப்போதும் போல லேட்டா வந்து எம்டி கிட்ட வாங்கி கட்டிக்காதே” கூறி முடித்தான்.

“அது சந்துரு, நான் ஆபிஸ் வரலை” விஷ்ணு தயக்கத்தோடு பதில் அளித்தான்.

இன்னும் இருக்க போவது 90 நாட்களுக்கும் குறைவாகத்தான், அதற்கு எதற்கு ஆபிஸ் போக வேண்டும்? போய்தான் என்ன ஆகப் போகிறது. போகாமல் இருந்தால் குறைந்த பட்சம் இவன் இம்சையாவது இல்லாமல் சற்று நிம்மதியாய் இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் விஷ்ணு அப்படிக் கூறினான்.

“ஓ, அபிஸ் வரவதை விட அப்படி என்ன முக்கியமான வேளை இருக்கு?” கேட்டு விட்டு பதிலுக்கு கூட காத்திறாமல் மீண்டும் பேட்சை தொடர்ந்தான் ”சரி விடு உன்னோட ராமாயணம் எல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை. வந்தால் வா, இல்லனா உன் இஷ்டம். நான் வைக்கிறேன்” என்று எந்தப் பதிலுக்கு காத்திருக்காமல் கால்ஐ கட் செய்தான் சந்துரு.

கால் துண்டிக்க பட்ட கை பேசியையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. ஆபிஸ் போகலாமா? வேண்டாமா? தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

அதற்குள் அவன் மனம் மீண்டும் பேசத் தொடங்கியது. “ஆபிஸ் போகலனா, சார் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க. அப்பா அம்மா விட்டுட்டு போன ஆயிரம் கோடி பேங்க் லாக்கர்ல இருக்கோ? அதை எடுத்து செலவு செய்ரதுகு. ஒன்றாம் தேதி வாடகைக் கொடுக்கலனா, அடுத்த நாளே நீ தெருவில்தான் நிக்கனும். 90 நாளோ, இல்ல 90 மணி நேரமோ நீ வேளைக்குப் போனால் தான் உன் வண்டி ஓடும். 10 ரூபாய் கடனாக கொடுக்கக் குட உனக்கு ஆள் இல்லை அதை மறந்துவிடாதே, ஒழுங்கா வேளைக்குப் போ”. அவன் மனம் அவனுக்கு உத்தரவிட்டது.

செத்துப் பிழைத்தாளும் இந்தக் கொடுமைகள் ஓய மாட்டேங்குதே என்று தன் விதியை நொந்து கொண்டு தன் வாட்சை பார்த்தான், மணி 9 என்று காட்டியது. இப்போது கிளம்பினால் 10 மணிக்குள் ஆபிஸ் போய்விடலாம், சந்துரு சொன்னது போல் எம்டி கிட்டப் பாட்டு வாங்குவதாவது மிச்சம் ஆகும் என்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

ஸ்சில் ஏறியதில் இருந்து அனு ஏதாவது கூறுவாள் என்று அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா. அவளோ எதுவும் கூறாமல் அமைதியாகச் சன்னல் வழியாகச் சாலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அங்க நடந்ததைப் பற்றி மேடம் தானா ஏதாவது சொல்வீங்களா? இல்ல வெற்றிலை பாக்கு வச்சிக் கேட்கனுமா?” பொறுமை இழந்து திவ்யா கேட்டாள்.

“ச்ச, அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல திவி” என்று முதல் நாள் மாலை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் திவ்யாவிடம் கூறினாள் அனு.

“என்னடீ சொல்ற, 20 வருஷமா? சான்ஸே இல்ல. நம்ம ரெண்டு பேருக்குமே அவ்வளவு வருஷ நட்பு இல்லையே. அவன் ஏதோ ரீல் விடுறான்” திவ்யா எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியாமல் பதில் கூறினாள்.

“இல்ல திவி, அவரைப் பார்த்தால் அப்படி தெரியல” விஷ்ணுவிற்கு ஆதரவாகப் பேசினாள் அனு.

“என்னது அவரா? என்ன டீ மரியாதை எல்லாம் பலமா இருக்கு” திவ்யாவின் கேள்வி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.