(Reading time: 11 - 22 minutes)

னக்கு முன்னாள் இருக்கும் மைக்கை எடுத்து தன் பேச்சைத் தொடங்கினார் கதிரவன். “முதலில் நம்முடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் ஐயா முத்து குமரனை வருக வருக என உங்கள் சார்பாகவும் இந்த நாளிதழ் சார்பாகவும் வரவேற்கிறேன்” என்று அவருக்குச் சால்வை அணிவித்து மலர் கொத்துக் கொடுத்தார்.

பின்னர் முத்து குமரனை பற்றியும் அவரது சாதனை பற்றியும் சுருக்கமாகவும் அதே சமயத்தில் பெருமிதம் தரும் வகையிலும் கூறி முடித்தார் கதிரவன்.

அதன் பின்னர் நேரடியாக தன் ஊழியர்கள் அழைத்தக் காரணத்தை கூறத் தொடங்கினார் கதிரவன். “இதுவரை 99 புத்தகங்களை எழுதியுள்ள குமரன் ஐயா அவர்கள் தனது 100-வது புத்தகத்தை எழுத முடிவு செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்தப் புத்தகத்தை வார வாரம், பகுதிகளாக நமது நாளிதழ்தான் சிறப்புத் தனி மலராக வெளியிடப் போகிறது, கதையின் முடிவில் அதைப் புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்”.

மேலும் பேட்சை தொடர்ந்தார் கதிரவன் “இது ஐயாவின் 100-வது கதை மட்டுமல்ல, அவர் இதோடு எழுத்துத் துரையில் இருந்து ஓய்வு பெறவும் முடிவு செய்துள்ளார்” என்று கூறிவிட்டு முத்துக் குமரன் பக்கமாகத் திரும்பி “இது எங்களுக்கு எல்லாம் வருத்தமான செய்திதான் ஐயா” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கு என்ன கூறுவது என்று தெரியாமல், குமரன் மௌனமாக இருந்தார்.

மீண்டும் பேச தொடங்கிய கதிரவன் “நாம் வழக்கமாகக் கதைகளில் நடுவில் கதையில் சுழலை விளக்கும் வகையில் வரை பட ஓவியங்கள் அமைப்பது வழக்கம்.  இது சிறப்பிதழ் என்பதனால் கதையில் நடுவில் கதையில் சுழலை விவரிக்கும் விதத்தில், வரை படத்திற்கு பதிலாக, வன்ன புகைப்படங்களை வெளியிடலாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்.  இப்போது இக்கதை பற்றி ஐயா அவர்களே நம்மிடம் பகிர்ந்து கொள்வார்” என்று தன் பேச்சை முடித்துக் கொண்டு மைக்கை முத்து குமரனிடம் கொடுத்தார் கதிரவன்.

இப்போது புரிந்தது விஷ்ணுவிற்கு, இந்த மீட்டிங்கிற்கு எதற்குத் தன்னை அழைத்தார்கள் என்று.

மைக்கை வாங்கிய குமரன் “அனைவருக்கும் வணக்கம். இந்த நாளிதழின் எம்டியும் எனது நல்ல நண்பருமான கதிரவனுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். உண்மையைக் கூற வேண்டுமானால் எனது கதைகளின் எண்ணிக்கையை என்றுமே நான் கணக்கிட்டதில்லை. இது எனது 100-வது கதை என்பதே என் அபிமானிகள் கூறித்தான் எனக்குத் தெரியும். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு முறை என்னைச் சந்தித்த போது கதிரவன் அவர்கள் இந்த 100-வது கதை பதிப்பகத்தைப் பற்றி என்னிடம் பேசினார். ஆனால் அப்போது எனக்கு அடுத்த கதை எழுதும் எண்ணம் இல்லாததால், அடுத்த கதை எழுதும் எண்ணம் இல்லை என்று அவரிடம் அப்போது கூறினேன்.” என்று கூறிவிட்டு நிறுத்தி தண்ணீர் பருகினார் முத்து குமரன்.

பின் மீண்டும் தொடர்ந்தவர் “மன்னிக்கவும், முதுமை காரணமாக முன்பு போல் தொடர்ச்சியாகப் பேச முடிவதில்லை. உண்மையைக் கூறவேண்டுமானால் இந்தக் கதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இரண்டு நாட்கள் முன்னர்த்தான் தோன்றியது. சரி எண்ணத்தில் தோன்றிய கதையை எழுதலாம் என்று முடிவு எடுத்தவுடனே, எனக்குக் கதிரவன் அவர்களின் எண்ணம்தான் தோன்றியது. அவரை நேற்றுதான் தொடர்பு கொண்டேன். இன்று இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டார்.” பேச்சைச் சற்று நிறுத்தியவர் கதிரவன் பக்கம் திரும்பி “இந்தப் புத்தகம் சிறப்பாக வரவேண்டும் என்பதில் என்னை விடக் கதிரவன் ஐயா அவர்கள் உறுதியாக இருக்கிறார்” என்று கதிரவனுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார் குமரன்.

“கதையை பற்றிக் கூறவேண்டுமானால், இது ஒரு காதல் கதைதான். தன் காதலுக்காக போராடும் ஒரு இளைங்கனின் கதை. எந்த அளவிற்குப் போராட்டம் என்றாள், தன் காதலுக்காக அந்த எமனிடமே போராடுகிறான் அவன்”. தன் கதையில் கருவைக் கூறினார் குமரன்.

அதைக் கேட்ட விஷ்ணுவிற்குப் பெரிய அதிர்ச்சி. அதே சமயம், ஆச்சரியமும் தெற்றிக் கொண்டது.

அதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் “ஐயா, என்ன சொல்றீங்க, எமனிடம் போராட்டமா?” தன் ஐயத்தைக் கேட்டார். கூட்டத்தில் இருந்த அனைவரின் குழப்பமும் அதுதான், விஷ்ணுவைத் தவிர.

குமரன் மெல்லிதாக சிரித்துக் கொண்டே “ஆம் எமனுடன் போராட்டம்தான். நமது நாயகிக்குக் காதல் என்றாலே வெறுப்பு. அதுத் தெரிந்திருந்தும் அவளிடம் தன் காதலைச் சொல்லி, அவளை எப்படியாவது தன்னை காதலிக்கச் செய்ய வேண்டும் என்று வருபவன் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விடுகிறான். இறந்து எமலோகம் சென்றவன் அங்குத் தைரியமாக எமனுடன் போராடி, ஒரு நிபந்தனையுடன் பூமிக்கு மீண்டும் வருகிறான். வந்தவன் வென்றானா? என்பதுதான் மீதிக் கதை” தன் எண்ணத்தில் இருந்த கதை சுருக்கமாகச் சொல்லி முடித்தார் குமரன்.

அப்படியே அதிர்ச்சியில் உரைந்து போய் உட்கார்ந்திருந்தான் விஷ்ணு.

தொடரும் . . .

Episode # 10

Episode # 12

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.