(Reading time: 11 - 22 minutes)

ண்டீ திவி, எதைப் பேசினாலும் குற்றம் கண்டு பிடிக்கிற? யாரையும் அவன், இவன் என்று பேசி எனக்குப் பழக்கம் இல்லை. நார்மலா பேசும் போதே எனக்கு அப்படிதான் வருது. மற்ற படி வேறு எதுவும் இல்லை” திவ்யாவின் கேள்விக்கு உண்மையாகப் பதில் அளித்தாள் அனு.

 அனுவின் குணம் திவ்யாவிற்கும் தெரியும், ஆனாலும் அவளை சீண்டிப் பார்ப்பது இவளுக்கு ஒரு வேடிக்கைதான்.

“நீ நல்லவ தான், அதுக்கு வேண்டுமானால் ஒரு அவார்டு நான் உனக்குத் தர சொல்றேன். இப்போ பிரச்சனை அது இல்ல. அவன் உன்னைத் தினமும் பார்க்கனும்னு கேட்டதுக்கு நீ ஏன் ஒத்துக்கிட்ட?” திவ்யாவின் கேள்வி.

“என்னை வேறு என்ன பண்ண சொல்ற. நேற்று நீ அந்த இடத்தில் இருந்திருக்கனும். அவர் அப்படிக் கேட்கும் போது, அவரைப் பார்க்கவே பாவமா இருந்தது தெரியுமா. அது மட்டும் இல்லாமல் அவர் நம்மை எந்தத் தொல்லையும் செய்யாத வரைக்கும் நாம் ஏன் கவலை பட வேண்டும். இப்ப கூட நீயே பார்த்தல்ல, அவர் எவ்வளவு தூரமா நின்று கொண்டிருந்தார் என்று. அது மட்டும் இல்லாமல் தினமும் நாம் சாலையில் நடக்கும் போது எத்தனையோ பேர் நம்மை பார்க்குறாங்க, அதற்கு எல்லாம் போய் அவங்க கூட நாம் சண்டையா போட முடியும்” தன் பக்க நியாயத்தைத் தெளிவாக தன் தோழியிடம் கூறினாள் அனு.

“ நீ சொல்ற லாஜிக் எல்லாம் சரிதான். ஆனால் அவனை ஒரு நாள் பார்த்து, பேசியதற்கே திபக்கை கல்யாணம் செய்றது சரியா? தப்பானு? கேட்ட. இதில் டெய்லி பார்த்தா என்ன ஆகுமோ என்று தான் எனக்குப் பயமா இருக்கு” தன் தோழியின் மேல் உள்ள அக்கரையை வெளிப்படுத்தினாள் திவ்யா.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நான் இப்போ தெளிவா இருக்கேன். என்னுடைய லைஃப் திபக் கூடத்தான். நீ சொன்னது போல், நான் அவரைப் புரிந்து கொண்டு, அவர் கூட வாழ என்னைத் தயார் செய்து கொள்ள போகிறேன்” என்று திவ்யாவிடம் உறுதியாகக் கூறினாள் அனு.

அவள் கூறிய வார்த்தையில் மட்டும்தான் உறுதி இருந்ததே தவிர அவள் உள்ளம் இன்னும் கலங்கிய நீரோடை போலத்தான் இருந்தது.

“நீ சொல்வது உண்மையா இருந்தால், எனக்கும் சந்தோஷம்தான். திபக் ஸ் கரைக்ட் மேட்ச் ஃபார் யு. அவர் கூட வாழ்ந்தால் உன் லைப் ஹாப்பியா இருக்கும். நீ ஹாப்பினா, அப்பா, அம்மா நான் எல்லோரும் ஹாப்பி” என்று தன் தோழியைச் சிறு குழந்தை போல் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னாள் திவ்யா.

“தேங்ஸ் திவி, யு ஆர் மை டார்லிங் ஃபிரெண்ட்” அதே குழந்தை தனத்தோடு திவ்யாவை தழுவிக் கொண்டாள் அனு.

அந்த பஸ்சில் அருகில் அமர்ந்திருந்தவர்களுக்கு இவர்கள் இருவரும் இப்படி அன்பை பரிமாறிக் கொள்வதைப்  பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. இவர்கள் இருவரையும் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் இவர்கள் நட்பைப் பற்றி.

கிளம்பிய அரை மணி நேரத்தில் ஆபிஸ் சென்று அடைந்தான் விஷ்ணு. தான் பணி புரியும் அரையினுள் நுழைந்தவனை “வரமாட்டேன் னு சென்ன, இப்போ வந்து நிற்கிற” என்பது போல் ஒரு நக்கல் பார்வை பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேசாமல் மீண்டும் தன் வேளையைத் தொடர்ந்தான் சந்துரு. அவன் பார்வையின் அர்த்தம் விஷ்ணுவிற்கும் புரிந்தது, ஆனாலும் அவனுக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் விஷ்ணு இல்லை. அமைதியாகச் சென்று தன் இடத்தில் அமர்ந்தான்.

10 மணிக்கு முன்னதாக ஆபிஸ் பாய் ஆறுமுகம் வந்து “சார், 10 மணிக்கு மீட்டிங். எம்டி சார் சொல்ல சொன்னார்” சொல்லிவிட்டு பதிலுக்காக காத்திறாமல் சென்றான்.

விஷ்ணு மீட்டிங் ஹாலுக்குச் சென்று ஒரு ஓரமாக அமர்ந்தான். அந்த நாளிதழின் எடிட்டர், ரிப்போட்டர் என ஒருவர் பின் ஒருவராக வர, மீட்டிங் ஹால் நிரம்ப ஆரம்பித்தது. ஆறுமுகம் பரபரப்பாக முன்வரிசை மேஜையில் சால்வை, மலர் கொத்து, குடிநீர் என ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டிருந்தான். மீட்டிங் ஹாலில் ஒரே பேச்சு சத்தம் சல சலப்பாக இருந்தது. நடப்பது எதுவும் புரியாமல் அமைதியாக அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.

ஒரு பத்து நிமிடம் செல்ல, ஹாலின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் எம்டி கதிரவன். அவரைப் பார்த்ததும் ஹாலில் சல சலப்பு அடங்கி அனைவரும் அமைதி ஆயினர்.

கதிரவனுடன் பேசிக் கொண்டே ஹாலின் உள்ளே நுழைந்தார் பிரபல எழுத்தாளர் முத்து குமரன்.

முத்து குமரனை பற்றிக் கூற வேண்டுமானால் சிறந்த எழுத்தாளர், நல்ல மேடை பேச்சாளரும் கூட. தனது எழுத்திற்காக 2 முறை தேசிய விருதும் வாங்கி இருக்கிறார். வயது 60-வதை தொட்டிருக்கும். அவரது கதைகளும், நாவல்களும் நல்ல பிரபலம். இதுவரை 99 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

கதிரவன், முத்து குமரனை அவருக்கு உரிய நாற்காலியில்  அமர வைத்து விட்டு, தனது ஊழியர்களை ஒரு வேகமான நோட்டம் விட்டான். அனைவரும் தன் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள் என்ற பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.