(Reading time: 8 - 16 minutes)

வ்வாறாக நாட்கள் நகர அடுத்து வந்த தினங்களில் இருவரும் சந்திக்கும் வாய்ப்புகள் அமையவில்லை…அதே நேரம் திவ்யாவிற்கும் மகிக்கும் இடையே ஒரு அழகிய நட்பு உயிர் பெற்றிருந்தது..உணவு வேளை,இடைவேளை நேரங்களில் தன் நட்பு வட்டாரத்தோடு இணைத்து கொண்டாள் திவ்யா..மகியை விட மூன்று மாதம் முன்னதாக தான் அவர்கள் வேலையில் சேர்ந்திருந்தனர்..எனவே கிட்டத்தட்ட ஒத்த வயதினராததால் அவர்களோடு பழகுவதற்கு மகிக்கு வித்யாசமாக தெரியவில்லை..சிமி,ஷாலினி,சாந்தினி,சரண்யா,திவ்யா அண்ட் மகி..இவர்களின் நட்பினால் ஓரளவிற்கு மகி சென்னை வாசியாக மாறி விட்டிருந்தாள்.,.

இவ்வாறாக நாட்கள் கடந்து மாதங்களாகி மூன்று மாதங்கள் முடிந்து விட்டிருந்தது..இதோ தீபாவளிக்காக ஊருக்குச் செல்ல போகிறாள் மகி..முதல் சம்பளத்தில் அம்மாவுக்காக புடவை,மோதிரம்,இன்னும் நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டு கை கொள்ளா பைகளுடன் அலுவலகத்தை வந்தடைந்தாள்..பேக்கேஜ் அறையில் அனைத்தையும் வைத்துவிட்டு தன் அலுவலக அறையை அடைந்தாள்…

மகியை தவிர அனைவருமே சென்னை வாசி ஆதலால்,ஆயிரம் முறை அட்வைஸ் செய்து அனுப்பினர்..மகிக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி என்றாலும் அவர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை..கல்லூரி தோழிகளே பரவாயில்லை எனும் அளவிற்கு இருந்தது இவர்களின் அறிவுரை..

“பத்திரமா போய்ட்டு வா”- சிமி

“ம்ம்ம்”

“ரீச் ஆன உடனே மெசெஜ் பண்ணு”- ஷாலினி..

“ம்ம்ம்”

“ஒழுங்கா போய்ருவல??”- திவ்யா

இப்போது முறைத்தாள் மகி,

முறைக்காத டீ…நல்லா அமூல் பேபி மாறி இருந்துட்டு உன்னலா யாரு ஊர் விட்டு ஊர் வர சொன்னது..இருக்குறவங்கள டார்ச்சர் பண்ணிகிட்டு..சரி சரி வீட்டுக்குள்ள கால வைச்ச அடுத்த செகண்ட் மெசெஜ் பண்ணு புரியுதா.?-திவ்யா

பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடியே ம்ம்ம் என்று தலையசைத்தாள் நம் மகி,

இதுதான் இவள்..பெரிய முடிவுகளை அசாதாரணமாக எடுத்துவிட்டு சிறு சிறு விஷயங்களுக்காக உணர்ச்சிவசப்படுவாள்..

(என்னடா ஹீரோவ ஆளையே காணுமேநு கேக்குறது புரியுது,அவரு எப்பவுமே இப்படி சைலண்ட் தாங்க…வாங்க அவரை கொஞ்சம் உள்ள இழுத்துவிடுவோம்..)

திய உணவை முடித்துக் கொண்டு கிளம்பியவள்,டீம்மில் அனைவரிடமும் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு இருந்தாள்..ராம் ஏதோ மீட்டிங் காலில் இருந்ததால் தன் கணிணியிலிருந்து சாட் மூலம் வாழ்த்து அனுப்பினாள்..

“Happy diwali J”-மகி

“Thank you..wish u d same J” - ராம்..

“என்ன இப்போவே விஷ் பண்ணிடீங்க?”-ராம்

“ இல்ல ஊருக்கு கிளம்றேன் அதான்..”-மகி

“ஓ!!!எந்த ப்லேஸ்?”- ராம்

“தூத்துக்குடி”-மகி

“ஓ ஓகே ஓகே,.டேக் கேர்,.ஹாப்பி ஜேர்னி”

தங்க்ஸ்..பை..- மகி

ஏனோ மகிக்குள் சொல்ல முடியாத சந்தோஷம்..ஏதேதோ சிந்தனையில் கோயம்பேடு வந்தடைந்தாள்…பல வகைப்பட்ட மனிதர்களும்,குரல்களும்,பரபரப்பும் கோயம்பேடிற்கே உரித்தான ஓன்று..

மறுநாள் தீபாவளி ஆதலால் ஈக்கள் போல மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்க முன்பதிவு செய்ததால் சிரமமின்றி பேருந்தில் அமர்ந்தாள் மகி..ஏனோ அவளுக்கு கோயம்பேடை பார்க்கும் பொழுதெல்லாம் மனதில் இனம்புரியா சஞ்சலம் எழும்..தான் தனித்து விடப்பட்டதை போன்று உணர்வாள்..

அனைத்து கவலைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தாயை சந்திக்க போகும் நொடிக்காக காத்திருந்தாள்..

ங்கு ராமின் சிந்தனையோ மகியையே சுத்தி வந்தது..அவனுக்கு பின் இருக்கை தான் திவ்யா அவள் சரண்யாவிடம்  பேசிக் கொண்டது தற்செயலாக அவன் காதில் விழுந்தது,.

மகி கிளம்பிடாளாம் இப்போதான் மெசெஜ் பண்ணா சரண்..என்னவோ இந்த பொண்ணு தனியா போறாளேநு கவலையா இருக்கு…

ஏனோ அவளின் நலம் விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது..மொபைல் நம்பர் இல்லையே என்று எண்ணும்போதே தன் எண்ணப் போக்கினை கண்டு அதிர்ந்தான்..இது சரியில்லை என்று தனக்கு தானே கூறிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தான்..

றுநாள் காலை,

ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க தன் வீட்டை வந்தடைந்தாள் மகி..வழி தவறிச் சென்ற பறவை தன் கூட்டை அடைந்தது போன்ற உணர்வு..நான்கு நாட்கள் சென்றதே தெரியவில்லை..அம்மாவின் கவனிப்பும்,மனம் கொள்ளா மகிழ்ச்சியுமே அதற்கு காரணம்..

அதுக்குள்ள நாலு நாள் முடிஞ்சுருச்சு மா..இதையே விடிந்ததிலிருந்து 1000 முறை தன் அன்னையிடம் கூறிவிட்டாள்..ஒருவாராக தனக்குத் தானே சசமாதானம் கூறிக் கொண்டு சென்னையை வந்தடைந்தாள்..

விடுதிக்கு வந்தவள்,அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்களுடன் வாங்கி வந்த இனிப்புகளையும் எடுத்து கொண்டு கிளம்பினாள்..

அடுத்த மூன்று மாத காலங்களில் ஏற்பட போகும் மாற்றங்கள் என்னென்ன?ராம் மகி யின் வாழ்வில் வரவிருக்கும் திருப்பங்கள் என்னென்ன??பொறுத்திருந்து பார்ப்போம்…

“ஹாய் ப்ரெண்ட்ஸ்,இது சில்ஸியில் என்னுடைய மூன்றாவது பதிவு..உங்க எல்லாருக்கும் பிடிக்கும்நு நம்புறேன்..தொடர்ந்து உங்க ஆதரவையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..”

தொடரும்

Episode # 02

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.