(Reading time: 7 - 13 minutes)

னிதனின் அழிவிற்கு வித்திடும் கருவி என்ன தெரியுமா?அவனது நாக்கு தான்!!

ஒருவேளை இறைவனானவன் மனிதனுக்கு பேசும்சக்தியினை தர மறுத்திருந்தால் பல பாவங்களிலிருந்து அவன் முக்தி அடைந்திருப்பான்!

பிறரின் மனம் நோகும்படி உதிர்த்த ஒரு வார்த்தை தம்முடைய வாழ்வின் மிகப்பெரிய பாவத்தை சிரசில் சுமக்க வைக்கும்!

தீக்ஷாவின் கண்கள் உடைந்திருந்தன.

மரணத்தைவிட கொடிய நிமிடமாய் இருந்தது அந்நிமிடம்!!

அந்நேரம் அவ்விடமே ஸ்தம்பித்து போயிருந்தது.

ராகுல் கோபத்தோடு அவளருகே சென்றான்.

தாம்பூலத்தில் வைக்கப்பட்டிருந்த மாங்கல்யத்தை எடுத்தான்.அவள் கழுத்தில் கட்டினான்.(இப்போ புரோகிதர் என்ன சொல்றது!நான் சொல்றேன்!மாங்கல்யம் தந்துனானே மவஜீவனம் ஏத்துனான்)

யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு!!அங்கிருந்த பலரின் முகத்தில் இப்போது தான் மகிழ்ச்சி குடிக்கொண்டது.ரவிக்குமார் உட்பட!!!

தீக்ஷா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

ஒருநொடி தன் கண்களால் அவளுக்கு பதில் கூறியவன்,ஸ்ரீதரின் பால் திரும்பி,

"ஒருநாள் வாழ்ந்தவன் இல்லை!ஆயுசுக்கும் வாழ போறவன்!"என்றான்.

(நெற்றியடி!இப்போது தான் நல்ல காரியம் செய்திருக்கிறான் இந்த ரகு நந்தன்)

மதுவின் இதழ் மெல்லியதாய் விரிந்தது.மனம் குதூகலித்து கண்ணீர் சிந்தியது.

"வா!"-ராகுல் தீக்ஷாவின் கரம் பற்றி நடந்தான்.அவனது அந்த இறுக்கமே வேறு எந்த துணையும் அவளுக்கு தேவையில்லை என்பதை உணர்த்தியது.சற்றும் எதிர்நோக்கா திருப்புமுனையே!

பெண்ணின் மனம் ஏற்ற சங்கல்பம் தான் நிறைவேறியதா?

அதிர்ச்சி நீங்கா பார்வை தீக்ஷாவை நீங்க மறுத்தது.இறைவனானவன் மாங்கல்ய பிராப்தியை ஒரு கன்னிகைக்கு யாருடன் உண்டு என்று ஆசீர்வதிக்கிறான் என்பதை அறிய ஒரு நிமிடம் போதுமானதாக உள்ளது.

கண்களில் முழு திருப்தி தெரிந்தது மதுவிற்கு!!

ஈன்றவளாய் இல்லை என்றாலும் இதயத்தில்   வைத்து வளர்த்தவள் அவள் அல்லவா?வீட்டின் முன் கார வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

ஏதோ சிந்தனை ராகுலின் முகத்தில் தெரிந்தது.மனம் ஏற்ற சங்கல்பம் தான் உடைந்து போனதா??

"டேய் கண்ணா!"-வந்தவனை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டார் ஆதித்யா.

"நிஜமா எதிர்பார்க்கலைடா !!ரொம்ப சந்தோஷமா இருக்கு!உள்ளே வாங்க!"

"நில்லுங்க!"-தடுத்து நிறுத்தியது மதுவின் குரல்.மனம் அதிர்ந்தது ராகுலிற்கு!!

"ஆரத்தி எடுத்ததும் வரட்டும்!அனு ஆரத்தி எடு!"-ஒரு புன்னகையோடு அவள் சென்று ஆரத்தி எடுத்தாள்.

"ம்...காசு போடுண்ணா!!!"

"எதுக்கு?"

"ஆரத்தி எடுத்தேன்ல!"-அவன் பணம்  எடுப்பதற்குள் தட்டில் ஒரு மோதிரம் வந்து விழுந்தது.அனு அதிர்ச்சியோடு நிமிர்ந்தாள்.போட்டவன் கௌதம்.

"எங்க தீக்ஷா நல்லா இருக்க ஆரத்தி எடுத்து இருக்கீங்க இதுக்கூட பண்ண மாட்டேனா?"

"அதெல்லாம் சரி இது தங்கமா?"

"இல்லை...டைமண்ட்!"

"பெரிய மனசுதான்!"-அவன் புன்னகைத்தான்.

தீக்ஷாவும்,ராகுலும் உள்ளே பிரவேசித்தனர்.

அடுத்தடுத்த சடங்குகள் முறையே நடந்தன.

ன்றிரவு....

மனம் பதைபதைத்தது அவளுக்கு!!

எண்ணிய வாழ்க்கை கிடைத்தது இருப்பினும் கணவனின் அன்பை பெற இயலுமா??

"தீக்ஷா!"

"ஆ...அத்தை!"

"கையை காட்டு!"-அவள் கரத்தை நீட்டினாள்.

"அன்னிக்கு நான் இந்த வளையலை கழற்ற வேண்டாம்னு தானே சொன்னேன்.இப்போ பார் அது மறுபடியும் உன்கிட்டயே வந்துடுச்சு!"-ஒரு வளையலை மட்டும் போட்டாள்.

"இன்னொரு வளையலை ராகுலே சீக்கிரம் போடுவான்!"-அவள் முகம் வாடியது.

"ராகுல் கொஞ்சம் குழந்தைத்தனமானவன்.நிறைய ஏமாற்றங்களை சந்தித்திருக்கான்.அதனால அவனோட அன்பு முழுமையா உன்னை சேர தாமதமாகலாம்.அதுக்காக நீ.அவனை மன்னிச்சிடு!"

"அத்தை...."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.