(Reading time: 11 - 22 minutes)

வன் உள்ளே போன போது, இன்னும் சித்ராவைக் காணவில்லை ஒரு வேலை இன்னும் வரவில்லைப் போல் இருக்கு, என்று நினைத்துக் கொண்டு தாத்தா ரூமுக்கு போனான்

அங்கே, சித்ரா இருந்தாள், அவள் சகஜமாக 'குட் மார்னிங்', சொன்னாள், அவளைப் பார்க்காமலே 'குட் மார்னிங்' என்று சொன்னான்

அவள் மறுபடியும் ஏன் தாத்தா' குட் மார்னிங், எப்படி சொல்லனும்னு, நீங்க சொல்லித்தரவில்லையா, என்ன தாத்தா இது,' என்று விளையாட்டாகக் கேட்டாள்

அவனுக்கு கோபம், ஏறிக் கொண்டு இருந்தது, முகத்தை கடு கடு என்று வைத்துக் கொண்டான்

‘அதில்லைம்மா என் பேரன் என்னை மாதிரி, கொஞ்சம் அப்படித்தான், ஆனால் மனசு இனிமையானது, அவன் காலையில் நாலரை மணிக்கு எழுந்தான், ராத்திரியும் படுக்கும்  போது, பதினொன்னரை இருக்கும், காலையில் எழுந்து காபி டிகாக்ஷன் போட்டு வெளியே போய்விட்டு இப்பத்தான் வரான் பாவம், ஏதாவது சாப்பிட்டாயா,’ என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் வெளியே போய்விட்டாள், அவன் மனசு கஷ்டப் பட்டது, அவளைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது

அவன் தாத்தாவிடம் எல்லா விவரத்தையும் சொன்னான், நான் இன்னும் கார்த்திக்கிடம் ஒன்றும் சொல்லவில்லை, அவனையே உங்களிடம் பேசச் சொல்லியிருக்கிறேன், அதற்கப்புறம் சொல்லலாம், என்று அவன் கூரிக்கொன்டிருக்கும்போதே.... சித்ரா இரண்டு தட்டுகளில் டிபன் கொண்டு வந்தாள், எல்லாம் நிறைய போட்டு, எடுத்து வந்த தட்டை அவனிடம் கொடுத்தாள், அவன் நன்றி கலந்த ஒரு பார்வையை பார்த்தான், அவளிடம் எந்த சலனமும் இல்லை, முதல்ல சாப்பிடுங்க, பிறகு எல்லாம் பேசலாம், தாத்தா நீங்களும் சீக்கிரமே எழுந்து விட்டீர்கள் உங்களுக்கும் பசிக்கும் அதனால் சாப்பிடுங்கள்,’ என்று சொன்னாள்

‘நான் சீக்கிரம் எழுந்து விட்டேனென்று எப்படித் தெரியும்,’ என்று கேட்டார் தாத்தா

‘ஆமாம், இதுக்கு ஒரு டெலஸ்கோப் வேணுமாக்கும், நீங்கதானே சொன்னீங்க இவர் எத்தனை மணிக்கு வந்தார், எத்தனை மணிக்கு எழுந்தார்னு, அப்போ நீங்களும் தூங்கலை தானே அதான் சொன்னேன்,’என்றாள்

உடனே ருத்ரா ' ஆஹா, அறிவு ஜீவி, கண்ணு பட்டுடப் போகுது' என்றான்

தாத்தா சிரித்துக் கொண்டே,' கண்டிப்பாக அவள் அறிவு ஜீவிதான், உனக்கும் ,எனக்கும் பசிக்கும் என்று கீழே போய் டிபன் எடுத்து வந்திருக்கிறாள் பார், ரொம்ப நன்றிம்மா, நீ நீண்ட நெடு நாள், எல்லாவித சந்தோஷத்துடனும் வாழனும்.' என்று ஆசிர்வதித்தார், தாத்தா அதை சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவன் கண்களால் அவளுக்கு நன்றி தெரிவித்தான் அவளும் அதைக் கண் ஜாடையால் ஏற்றுக்கொண்டாள்

அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், காபி கொண்டுவந்து கொடுத்தாள், இருவரும் சாப்பிட்டனர், ‘சமையலுக்கு ஆளுங்க வந்தாச்சு சித்ரா நீ எதுக்கு கஷ்டப் படறே, ‘என்று கேட்டான்

‘இது என்னங்க கஷ்டம், நீங்க எவ்வளவு களைச்சு தெரியறீங்க, இன்னும் ஒரு வாரம் நான் இங்கேயே இருந்து உங்க எல்லாருடைய தேவையும் கவனிசுக்கறேங்க, ஆனா என்ன இப்பத்தான் ஒரு வேலை கிடைச்சிருக்கு, எப்படி லீவ் கேக்கறதுன்னு  தெரியலே,’

‘அதெப்படி சித்ரா நீ ஒரு நாளைக்கு வேலைக்கு போய், அடுத்தநாளே லீவ் கேட்டா எப்படி கொடுப்பாங்க, அது வேண்டாம் நீ ஆபிசுக்கு போ, நீ கல்யாணத்துக்கு வா அது ஞாயிற்றுக் கிழமைதான், ‘என்றான் ருத்ரா

'நீ சொல்லும்மா, யாரு முதலாளின்னு நான் பேசறேன், அவன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் சரி,' என்று சொல்ல.... அவனுக்கு புரை ஏறியது...... அவன்  இரும்ப, அவன் தலையைத் தட்டி விட்டாள், அவனுக்கு தாத்தா எதிரில் இவள் செய்வது எல்லாம் ,அவர் தப்பா நினைப்பாரோ என்று பயந்தான்,  

தாத்தாவோ, 'உனக்கு ஏண்டா புரை ஏறுது?நான் அந்த முதலாளியைத்தான் சொன்னேன்,'என்று கூறவும்,

'சரி, தாத்தா நீங்கள் ரொம்ப உணர்ச்சிவசப் படாதீங்க, அந்த முதலாளி ரொம்ப மோசமானவன் அதனால் வம்பு தும்பு எதுவும் வேணாம்' என்று சொன்னான் ருத்ரா

அதைக் கேட்ட சித்ரா' அப்படிப் பட்ட இடத்துக்கு என்னை ஏன் வேலைக்குச் சேர்த்தீங்க, அந்த முதலாளி அவ்வளவு மோசமானா?, அப்போ எனக்கு அந்த வேலை வேண்டாம், நான் வேறே பார்த்துக்கிறேன்,' என்றாள்

‘அப்போ, நீ போகமாட்டேன்னா நான் அவனிடம் என்ன சொல்வது? என்று கேட்டான், 'வேலை கொடுத்தவனுக்கு நீ இப்படித்தான் உன் நன்றியைத்   தெரிவிப்பாயா’ என்றான்

'அந்த ஆள் மோசமானவன்னு நீங்கதானே சொன்னீங்க, அப்படியிருக்கும் போது, அவரிடம் வேலை பார்க்க எனக்கு பயமாக இருக்கு' என்றாள்

'நான் மோசமானவனு சொன்னதுக்கு காரணம், அவன் வேலை விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட், அவனுக்கு தன்னுடைய வேலையில் எந்த ஒரு கஷ்டமும் நஷ்டமும் வரக் கூடாது, அதனால் அவன் மோசமானவன்னு சொன்னேன், '

‘ஆமாம் ஆள் ரொம்பத் தங்கக் கம்பி' என்று தாத்தா ஒத்து ஊதினார் குறும்பாக அவனைப் பார்த்துக் கொண்டு

ஆனாலும் இந்த தாத்தாவுக்கு ரொம்ப லொள்ளு, என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர் பேசுவதை ரசித்தான்

Episode # 07

Episode # 09

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.