(Reading time: 11 - 22 minutes)

07. என் மனதை தொட்டு போனவளே - VJ G

'தாத்தா குமார் பேசினார், அவர் வராராம், நம்ம வனிதாவுக்கு அவர் வந்தவுடன் புடவை எடுக்கலாம், நல்லதா போச்சு மோதிரம் கூட அளவு பார்த்து வாங்கலாம்,’ என்றான்,'

'சரிப்பா, தங்கமான பையன்' என்றார் தாத்தா

மற்றவர்களுக்குப் புடவைகள் எடுத்தார்கள், எல்லாம் கிடு கிடுவென்று ருத்ரா செலக்ட் செய்தான் ஒவ்வொன்றும் அருமையான கலர், டிசைன், இருபது நிமிஷத்தில் குமார் வந்து விட்டான்,' இவ்வளவு புடவைகளா! அதுவும் இருபது நிமிஷத்திலா!" என்று ஆச்சர்யப் பட்டான், 'ஆமாம் எல்லாம் நம்ம ருத்ரா தான்' என்றார் தாத்தா, 'இப்படி எவ்வளவு டலெண்டை, ஒழித்து வைத்திருக்கீங்க மச்சான், நமக்கும் கொஞ்சம்,கிளாஸ் எடுங்க, இப்ப கல்யாணம் செய்துக்க போறேன், ரொம்ப உபயோகமாக இருக்கும், ' என்றான் குமார்

en manathai thottu ponavale

வனிதா வெட்கப் பட்டாள், கமலா தன் மருமகனைப் பார்த்துக் கொண்டிருந்தாள், பார்க்க நன்றாக இருக்கிறான், நல்ல கல கல வென்று பேசுகிறான், என்று மனதில் நினைத்திருந்தாள்,

‘இவர்கள்தான், எங்கள் சித்தி, உங்கள் மாமியார்,’ என்று அறிமுகப்படுத்தினான் ருத்ரா, சிவகுமார் கமலாவுக்கு கை கூப்பினான்

அவனும், ருத்ராவும் சேர்ந்து செலக்ட் செய்தார்கள்,’ தேங்க்ஸ் நிஜமாகவே ரொம்ப கன்ப்யுஷன், இப்பத்தான் லேடிஸ்ப்ராப்லம் தெரியுது, அவங்களுக்கு ஏன் இவ்வளவு நேரமாகுதுன்னு, சரி, அடுத்து என்ன?’ என்று கேட்டு வனிதாவிடம் திரும்பி, ‘நிஜமாகவே பிடிச்சிருக்கா, கல்யாணத்துக்கு அப்புறமா பழிவாங்கிடபோற இப்பவே சொல்லிடு, உனக்கு பிடிச்சிருக்கா, இல்லையான்னு,’ என்றான்

வனிதா வெட்கப் பட்டாள், ‘அதுக்கு இல்லைண்ணாக்கூட இதுக்கு பழி வாங்கியே ஆகனும், ‘என்று சொல்லி, நாக்கைக் கடித்துக் கொண்டாள்,  

அவன்தான் பெரிதாக சிரித்தான், தாத்தா ஒரு முறை முறைத்தார்,அப்பாவும் முறைத்தார், அவள் சாரி, சொன்னாள், அவன் பரவாயில்லை என்று சொன்னான், அவர்கள், அவளை முறைப்பதை பார்த்து விட்டான்.

ருத்ரா பேச்சை மாத்தினான்

'வாங்க நகைகளை வாங்கி விடுவோம்' என்று

எல்லோரும் நகைக் கடைக்குப் போனார்கள், ‘தாத்தா நீங்கள் சொல்லலையே குமாரிடம்,’ என்று கேட்டான் ருத்ரா

என்னதுப்பா,'என்றார் தாத்தா, ‘அடுத்தவாரம் கல்யாணம் வைத்துக் கொள்ளலாமென்று,’ என்றான்

‘ஓ! ஆமாம் மாப்பிள்ளை அடுத்தவாரம் கல்யாணத்தை இங்கு ஒரு நல்ல ஹோட்டலில் வைத்துக் கொள்ளலாமென்று நினைக்கிறோம், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’

‘தாத்தா, நான் உங்களிடம் பேசணும்னா முதல்ல நீங்க என்னை மாப்பிள்ளை என்று கூப்பிடக் கூடாது, ருத்ராவை எப்படிக் கூபிடுவீர்களோ அப்படித்தான் என்னையும் "டா "போட்டு கூப்பிடனும், அடுத்தது என்னை கேட்கக் கூடாது, நீங்கள் என்ன முடிவு செய்திருக்கிறீர்கள் என்று சொன்னால் போதும், என்னை இந்தக் குடும்பத்தில் ஒருத்தனாக ஏத்துக்கனும், மாப்பிள்ளை என்று சொல்லி ஒதுக்கி வைக்கக் கூடாது, சரி அடுத்த வாரம், இப்போ, நாங்க என்ன வாங்கணும் பெண்ணுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது, இருங்க ஒரு நிமிஷம், என்று தன் அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான், நாம வாங்க வேண்டியது என்ன? நான் நகைக்கடையில் அவளோடுதான் இருக்கேன், சரி வாங்கிடறேன்,’ என்றான்,

இவர்களிடம் திரும்பி, ‘அது என்ன நிச்சயத்துக்கு நாங்கள்தான் புடவை வாங்க வேண்டுமாம், நீங்கள் வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்டான், அதனால் நாம் எடுத்திருக்கும் புடவைக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன்,’ என்றான்

‘என்ன குமார், இதெல்லாம் யார் வாங்கினால் என்ன,நீங்கள், இந்த குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கச் சொன்னீங்க,’ என்றான் ருத்ரா

‘இந்தக் கதையெல்லாம் வேண்டாம், இது என் மனைவிக்கு நான் செய்யவேண்டிய ஒரு கடமை,முதல் அன்பு பரிசு, அதனால் நான் தான் செய்யனும், நான் அம்மாவிடம் சொல்லாமல் வந்துட்டேன், இல்லாவிட்டால் அவங்க சொல்லியிருப்பாங்க,’ என்று முடித்தான்

நகைக் கடையிலும், அவளுக்கு பிடித்த ஒரு செட்டும், தாலி சைனும், வாங்கினான், அவள் சைசுக்கு ஒரு வைர மோதிரம் வாங்கினான்,

அவர்களும் அவனுக்கு வாங்கினார்கள்,

ல்லோரும் கிளம்பி வீடு வந்தனர் வரும் போது எட்டு மணி ஆகிவிட்டது, அங்கிருந்து அப்படியே குமார் போய்விட்டான்,

வீடு வந்தவுடன், அவன் அம்மாவைப் பார்க்க சமயலறைக்கு போனான், அங்கே வியர்வை வழிய, அவளைப் பார்த்து…………,

அப்படியே,ஷாக்காகி நின்று விட்டான், அவள் தன் புருவத்தை உயர்த்தி 'என்ன சார் அப்படி பார்க்கிறீங்க,’ என்றாள்

அவன் தன்னிலைக்கு வந்தான், அவள், வியர்வை சொட்டிக்கொண்டு, முன்நெற்றியில் முடி விழுந்து, நர்த்தனம் ஆடிய அந்த அழகை ரசித்தான், அப்படியே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான்,

'நீங்க, என்ன செய்யறீங்க, இங்கே?’ என்று கேட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.