(Reading time: 11 - 22 minutes)

'ன் நீங்கள்தானே, சமையலுக்கு அவசரமாக ஆள் வேண்டுமென்று கேட்டீர்கள், அதான் நான் வந்தேன்'

ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள், நான் சமையல் செய்யும் ஆளைத்தானே கேட்டேன், ஓ மை காட், ஏன் நீங்கள் ஏன் இந்த வேலையெல்லாம்........’

‘ஏங்க, அம்மா, தங்கை எல்லாம் செய்யலாம், நான் செய்யக் கூடாதா'

‘அது சரி உங்க வீட்டிலே செய்யறதும், இங்க வந்து செய்யறதும், ஒன்றா, ஐ அம் வெரி சாரி, நான் நினைக்கவேயில்லை நீங்க வந்து........'

‘ஏன் இதை என் வீடா நினைக்கக் கூடாதா, ‘ என்று அவள் கேட்டாள்

அவன் அவளையே கண் சிமிட்டாமல் பார்த்தான்,

அப்போது அம்மா அங்கே வந்தாள், ‘வா ருத்ரா, ஏதாவது சாப்பிடறயா, இன்னிக்கு இந்தப் பெண் சமையல் தான், சின்னப் பெண் என்ன வேகமா, எல்லாம் செய்யறாப்பா, எவ்வளவு அருமையான பெண், எங்கேயோ வேலை செய்கிறாளாம்’ என்று அம்மா சொல்லச் சொல்ல, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்,

எல்லோருக்கும் தட்டு போடனும் சித்ரா, நான் தட்டுக்களை

‘அம்மா, நான் எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துப் போடறேன், நீங்கள் எல்லாரும் உட்காருங்கள்,' இல்லை நீ எதுக்கு?' என்று அவன் அம்மா கேட்க 'அம்மா ப்ளீஸ், கொஞ்சம் சொன்னால் கேளுங்கள்,' என்று அவன் உள்ளே சென்று தட்டுக்களை எடுத்தான்,

நந்தினி அங்கே வந்தாள், 'அண்ணா, அவங்க......' என்று ஆரம்பித்தவளை,

'சரி, நந்தினி, வா எனக்கு ஹெல்ப் பண்ணு, அவங்க கிட்டேயிருந்து வாங்கிக் கொண்டு டேபிளில், வை' என்றான்

அவன் தட்டை எல்லாம் அலம்ப எடுத்துச் சென்றான்,

'என்னை வித்யாசமா நினைக்கிறீங்க இல்லை, நான் இந்த வேலையெல்லாம் செய்யக் கூடாது என்று நீங்கள் செய்கிறீர்கள், எனக்கு வருத்தமா இருக்கு' என்றாள்

'இல்லை சித்ரா இது உன் வேலை இல்லை, நீ போய், அவர்களுடன் உட்கார் நான் இனிமே எல்லாம் பார்த்துக்கறேன்,'என்றான்

'அப்போ இது உங்கள் வேலையா, நீங்க ஏன் செய்கிறீர்கள்?'

‘இது எங்கள் வீடு அதனால் நான் செய்யலாம்,'

'நான் நினச்சது, சரி, நான் இந்த குடும்பத்தை என் குடும்பமா நினைக்கக் கூடாது, என்று எனக்கு உணர்த்துகிறீர்கள், சரி சார், நான் ஒரு சமையல்காரியாகத்தான் வந்தேன், அந்த வேலையை நான் செய்கிறேன் ப்ளீஸ், ஒதுங்குங்க,’ என்றாள் வருத்ததுடன்

அவனுக்கு அவள் பேசியதைக் கேட்க கஷ்டமாக இருந்தது, ‘இப்படியெல்லாம் பேசாதே சித்ரா, நீ இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யறது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா, எங்கம்மா செய்யறது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றுதான் நான் ஆள் வேண்டும் என்று கேட்டேன் ஆனால் இப்போ நீ வந்து இந்த வேலையெல்லாம் செய்து என் வேதனையை இன்னும் அதிகரிக்கிறாய்.'

‘ உங்களுக்கும், இந்தக் குடும்பத்துக்கும், செய்வது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அந்த சந்தோஷத்தை கெடுக்காதீங்க ப்ளீஸ்,’ என்றாள்

'சரி, நான் போய் இந்த தட்டையெல்லாம், போட்டு விட்டு வரேன்,' என்றான்

அவன் போய் டேபிளில் எல்லா தட்டையும் போட்டான், எல்லா சின்னவர்களும் தாத்தாவும் உட்கார்ந்தார்கள், அவனும், சித்ராவும் வந்து சாப்பாடு போட்டார்கள், தாத்தா கேட்டார்,'இது யார்?' என்று

'இவர்கள் எனக்குத் தெரிதவர், என் சிநேகிதன் கம்பெனியில் வேலை செய்கிறார்கள், நான் சமையலுக்கு உடனே ஒரு ஆள் தேவை என்று சொன்னேன், யாரும் கிடைக்கவில்லை என்று இவங்களே வந்து செய்யறாங்க, நான் வேண்டாமென்று சொன்னால் கேட்கலை,' என்றான் ருத்ரா, அவளை ஒரு முறை முறைத்து,

'ஏம்மா, நீ , எந்தக் கம்பெனியில்  வேலை பார்க்கிறாய்?' என்று கேட்டார்

அதற்குள், அவன் பதில் சொல்ல ஆரம்பிக்க.., தாத்தா ‘நான் அவளிடம் பேசணும், நீ ஏன் முந்திண்டு பதில் சொல்றே,’

அவள் பதில் சொன்னாள், ‘உங்களை நான் தாத்தா, என்று கூப்பிடலாமா,’ என்று கேட்டு அவள் வேலை செய்யும் கம்பனியின் பேரைச் சொன்னாள்   

,’அந்தக் கம்பெனியா,’ என்று பேரனைப் பார்த்தார், அவன் உள்ளே போய்விட்டான், அவர் குறும்பாய் சிரித்துக் கொண்டு, ‘ஓஹோ, கதை இப்படி போகுதா,’ என்று நினைத்து,

‘அந்தக் கம்பனி, முதலாளி யாருன்னு தெரியுமா?,’ என்று கேட்டார் தாத்தா

அவள் தெரியாது,' என்று உதட்டைப் பிதுக்கினாள்

‘இன்னிக்கு இந்த சாம்பார் ரொம்ப நன்னாயிருக்கு, ‘என்று சொன்னார் தாத்தா

'ரொம்ப தேங்க்ஸ் தாத்தா' என்றாள்

‘இவ்வளவு பேருக்கு நீ எப்படிம்மா செய்தே?’ என்று கேட்டார்

‘இல்லை தாத்தா, அம்மா ஹெல்ப் பண்ணாங்க,’ என்றாள் அவள்

'ஓ, அம்மா ஹெல்ப் பண்ணாங்களா?' என்று திரும்பி ஒரு குறும்பு சிரிப்பு பேரனைப் பார்த்து சிரித்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.