(Reading time: 11 - 22 minutes)

நீ  நாளைக்கும் வருவியாமா?, இந்த சாப்பாட்டை நாளைக்கும் சாப்பிடனும் போல இருக்கு, எங்க பேரனும் உனக்கு ஹெல்ப் பண்ணுவான்,’ என்று அவர் சொல்ல, சித்ராவுக்கும், ருத்ராவுக்கும் முகம் சிவந்ததது,

ருத்ரா சிரித்துக் கொண்டே' நாளைக்கு இந்த சாப்பாடு ஊசி போய்விடும் தாத்தா,' என்றான் எல்லா பெண்களும் சிரித்தனர்

அவர் வாய் விட்டு உரக்கச் சிரித்தார், ஹாலிலிருந்த எல்லோரும் வந்து விட்டனர்

'இங்கே பார் சிவகாமி உன் பேரன் ஜோக்கை 'என்றார் நீலகண்டன்

சித்ராவுக்கு, ' தாத்தாவுக்கு பேரன் மேல் எவ்வளவு பிரியம்' என்று தோன்றியது

‘தாத்தா, நீங்கள் சிரித்தால் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள், உங்கள் பேரனைப் போல்,’ என்று அவள் சொல்லிவிட்டு உதட்டை கடித்துக் கொண்டாள்

இப்போது தாத்தா மறுபடியும் உரக்கச் சிரித்தார், எல்லோரும் சேர்ந்துக் கொண்டனர், கற்பகம் ஹாலுக்குப் போய் உட்கார்ந்தாள், ‘அந்தப் பெண் மிகவும் அழகு அவள் எப்படி இந்த வேலைக்கு வந்தாள்,’ என்று கணவனிடம் கேட்டாள்

அவர் 'எனக்கு எப்படி தெரியும் யார் அனுப்பினாங்களோ அவங்களை கேட்க வேண்டிய கேள்வி,'என்றார்

‘சிவாகாமி, நான் இந்தப் பெண்ணை நாளைக்கும் வரச் சொல்லி இருக்கேன், இந்தப் பெண் வெளிய எங்கியோ வேலை செய்யறாளாம், ஒரு வாரம் லீவ் எடுத்து ,நம்ம கற்பகத்துக்கு உதவியா இருக்கட்டும்,' என்று சொன்னார் ,

‘என்னங்க பாவம் வேலைக்கு போற குழந்தையை வந்து இங்கேயும் வேலை செய்யச் சொல்றீங்க,’ என்றார் சிவகாமி

'இல்லை சிவகாமி, நம்ம வீட்டு கல்யாணத்தில் அவள் பங்கும் இருந்தால் நன்னாயிருக்கும், நம்ம கற்பகம் தனியா அல்லாடறா அதனால் சொல்றேன்,' என்றார்

அங்கே வந்த ருந்த்ரா 'இல்லை தாத்தா அவங்களால், வரமுடியாது, கல்யாணத்துக்கு வருவாங்க,' என்று சொன்னான்

‘இல்லை நாளைக்கு நிச்சயத்துக்கு வரனும்,’ என்றார்

‘நாளைக்கு காலையிலேயே, கண்டிப்பாக வாம்மா நீ, இந்த மாதிரி சமையல் வேலையெல்லாம் செய்யாதே, ஆனால், அம்மாக்கு ஹெல்ப் பண்ணு சரியா,’ என்றார்

ருத்ரா முகத்தில் சந்தோசம் தெரிவதைப் பார்த்து ஆனந்தப் பட்டார்

அவள் அவனைப் பார்த்தாள், அவன் கண்ணால் ஜாடைக் காட்டினான் வா என்று, யாருக்கும் தெரியாது என்று நினைத்தார்கள், தாத்தா பார்த்துவிட்டார், மனசுக்குள் ஒரு பையனைப் போல் உணர்ந்தார், எப்போதும் பொறுப்புக்கள் என்று அதிலேயே உழன்றதில், அவர் மனம் இறுகியிருந்தது, தன் பேரன் அவ்வளவு பொறுப்பையும் அவன் ஏற்றுக் கொண்டதில் கொஞ்சம் அவர் தளர்ந்திருந்தார், இப்போது தன் பேரனின் காதல் மலர்திருக்கிறது என்று தெரிந்ததில் அவருக்கு என்ன ஒரு சின்னப் பையனைப் போல் ஒரு உணர்வு, அவர்களின் ரகசியத்தைக் அவர் கண்டு களித்தார்.

அவர் சாப்பிட்டு முடித்தவுடன், அவர் தட்டை பேரன் எடுக்க வந்தான், சித்ரா அவன் கையை ஒதுக்கி அவள் எடுத்தாள், அவள் கை பட்டவுடன் அவனுக்கு உடம்பெல்லாம் ஷாக் அடித்தது போல் ஆயிற்று, அவன் ஒரு கள்ளைக் குடித்தவன் போல் அவள் பின்னாடியே போனான், போகும்போது அவள் பின்னழகை ரசித்தான், அவள் நல்ல அழகு அவள் அவனை வீழ்த்தி விட்டாள்,

அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான், பிறகு அவன் அம்மா ‘என்னப்பா நீ போய் உட்கார் நான் போடறேன் எல்லார்க்கும்,’ என்றாள் , அப்போதுதான் அவன் உணர்வு பெற்று வந்தான்,

‘இல்லை அம்மா நான் போடறேன் நீ போய் உட்காரும்மா,’ என்று அனுப்பினான்

எப்போதுமே பையன் என்ன பேசினாலும், அதை மீறி ஒன்றும் பேசமாட்டாள், உடனே போய் விட்டாள்.

அவன் 'சித்ரா நீயும் போய் உட்கார் நான் போடுகிறேன்,’ என்றான்,

அவள் 'நீங்க உட்காருங்க நான் போடுகிறேன்' என்றாள்

‘சொன்னா கேட்பியா மாட்டியா?‘

‘ஐயோ,நான் மாட்டேன், ஒன்னு செய்வோம் நாம் இருவரும் அப்புறமா சாப்பிடலாம்?’ என்று முகத்தில் புருவத்தை உயர்த்தி கேட்டாள் அவனுக்கோ அவள் கேட்ட விதத்தில் அப்படியே அவளை அள்ளிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது

'ம்ம்ம், ஒன்றாக சாப்பிடலாம், அவர்கள் நம்மை தப்பா எடுத்துக் கொண்டால்,' என்று அவன் கேட்க

அவள் முகம் தொங்கி விட்டது, அவளைப் பார்க்க பாவமாக இருந்தது

அவன் உடனே 'சரி, நீயும், நானும் ஒன்றாக சாப்பிடலாம்,' என்று கூறி

கிடு கிடு என்று மற்றவர்களுக்குப் போட்டு, அவர்கள் இருவரும், எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார்கள், கற்பகம் அங்கே வந்து,’ நான் போட மாட்டேனா, ரெண்டு பேரும் நன்றாக சாப்பிடுங்கள்’ என்று கூறி அவள் போட்டாள்,

ருவரும் சாப்பிட்டதும் ‘அவளை விட்டு விட்டு வருகிறேன்,’ என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான், காரை கிளப்பிய போது, அவளிடம் ஐநூறு ருபாய் கொண்டு வந்து கொடுத்தாள், கற்பகம்

‘என்னம்மா இது,’ என்று கேட்டாள்

அதற்குள் அவன், வேகமாக கிட்டே வந்தான், அம்மா கையிலிருந்த ரூபாயை வாங்கிக் கொண்டு ‘தேங்க்ஸ் ம்மா, நாங்க போயிட்டு வரோம்,’ என்று கிளம்பினான்

அவன் அம்மா குழம்பினாள்,

காரில் பின்புறம் ஏறினாள் சித்ரா, ‘முன்னாடி வந்து ஏறு,’ என்றான் ருத்ரா

மேலேயிருந்து தாத்தா ரூமிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

Episode # 06

Episode # 08

தொடரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.