(Reading time: 11 - 22 minutes)

ப்படியெல்லாம் பையன் படுக்க மாட்டான், அதுவும் தன் மடியில், இப்படிக் படுத்துக் கொண்டு ரொம்ப வருஷம் ஆகிவிட்டது, ஒரு பத்து நிமிஷம் அவன் தூங்கட்டும் என்று சித்ரா அந்தப் பக்கமே வரவில்லை

அவன் தூங்கிவிட்டான், அவன் அம்மா அவன் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ஒரு அரை மணி அவள் ஏதேதோ எடுத்து கிளீன் பண்ணிக்கொண்டிருந்தாள், சரி இப்போ போகலாம் தான் வீட்டுக்குப் போகணும்னு சொல்லலாம் என்று போனாள், அப்போது கற்பகம் அவளைப் பார்த்து சிரித்து 'வாம்மா உட்கார்' என்றாள் மெதுவாக, இவளும் ரொம்ப மெதுவாக அவள் அருகில் சென்று ' நான் வீட்டுக்கு கிளம்புகிறேன், நீங்கள் எல்லோரிடம் சொல்லி விடுங்கள்' என்றாள் சித்ரா

'இல்லைம்மா கொஞ்சம் வெயிட் பண்ணு, இவன் எழுந்தவுடன் கொண்டு விடச் சொல்கிறேன், அப்புறம் என்னைத் திட்டுவான்'

'இல்லம்மா அவர் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்' என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஒண்ணுமில்லை சித்ரா வெயிட் பண்ணு நான் கூட்டிக் கொண்டு போகிறேன், எனக்கு ஒரு கப் காபி மட்டும் கிடைக்குமா? “என்று கேட்டான், அவள் அவனைக் கனிவான பார்வையோடு 'ப்ளீஸ் நீங்க தூங்குங்க, நான் ஒரு ஆட்டோ பிடித்துப் போகிறேன்,'என்றாள்

'நான் உன்னிடம் காபி கேட்டேன் கிடைக்குமா, கிடைக்காதா?' என்று ஒரு முறைப்புடன் கேட்டான்

'இதோ' என்று கிடு கிடுவென்று ஓடினாள், அவளே நல்ல காபியாக கலந்து கொண்டு வந்தாள், அதற்குள் அவன் முகைத்தைக் கழுவி, தலையை வாரிக் கொண்டு வந்தான். அவன் அம்மா, அவனை தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள், அவனிடம் மெதுவாக, “நான் சொன்னது ஞாபகம் இருக்குதா, நம்ம வித்யாவுக்கு ஒரு நல்ல பையனாப் பாரு,” என்று அவள் சொன்னவுடன், ‘சரிம்மா என்ன இப்ப அவசரம் நம்ம விதுக்கு,’ என்று கேட்டான், 'என்னப்பா, வனிதாவுக்கு வயசாகிட்டா, நம்ம விதுக்கு ஆகவில்லையா?’ என்று கேட்டாள் அம்மா

அவள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே சித்ரா அங்கு காபியுடன் வந்தாள், வரும்போது மூன்று கப்புகளுடன் வந்தாள் ஒன்றை கற்பகத்துக்கு கொடுத்தாள், இன்னொன்றை அவனுக்குக் கொடுத்தாள், இன்னொரு கப்பை தான் எடுத்துக் கொண்டாள், அப்போது ' ஏனம்மா, நான் எனக்கு போய் கலந்துக் கொள்வேனே, நீ பாவம் எதற்கு ....' என்று கேட்கும் போதே,” எப்படியிருந்தாலும் இவருக்கு கலக்கப் போறேன் அப்போ நமக்குக் கலக்கறது கஷ்டமா? என்னம்மா இப்படி பேசுகிறீர்கள்?' என்று கொஞ்சம் வருத்தம் கலந்தக் குரலில் கேட்டாள்,

அவள் தலையைத் தடவி, 'உன் மனசுப் போல் எல்லாம் அமையும்படி நான் கடவுளை வேண்டிக்கிறேன்,' என்று கூறினாள், கற்பகம் இரு பொருள் பட.

ருத்ரா காபி குடித்துக் கொண்டே, அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் பார்த்தும், பார்க்காதது போல் பார்த்தாள், காபி குடித்தவுடன், 'போய் தாத்தாவிடம் சொல்லிவிட்டு வா' என்றான்,

'அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ எதுக்கு அவரை டிஸ்டர்ப் பண்ணனும்' என்றாள் சித்ரா

'இல்லை, அவர் இப்போ தூங்க மாட்டார்,' என்று சொன்னான்

இவர்கள் சம்பாஷனையைப் பார்த்து என்னவோ இப்பவே இவர்கள் தம்பதிகள் போல் நடப்பதைப் பார்த்து பூரித்துப் போனாள் கற்பகம்,

வள் தாத்தா ரூமுக்குப் போனாள்,'வாம்மா, என்ன விஷயம்?” என்று கேட்டார்

தாத்தா, நான் வீட்டுக்கு கிளம்புகிறேன்' என்று சொன்னாள்,

'ஏம்மா, இங்கேயே இருந்துடேன், நீ இருந்தால் ஏதோ வீடே நிறைந்திருக்கிறது போல் இருக்கிறது,' என்று கூறினார்

'அம்மா அங்கே தனியாக இருப்பார்கள் அதான் போகவேண்டும்' என்றாள்

'அம்மாவையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம் இல்லையா, இங்கேயே இருந்திருக்கலாம்' என்று கூறினார்

அப்போது அங்கே ருத்ரா வந்தான், இவளை இன்னும் காணவில்லையே என்று பார்க்க வந்தான்

'என்ன கிளம்பலாமா?, தாத்தா, கொண்டு விட்டு வருகிறேன்,' என்றான்

'அவள் இங்கேயே இருக்கட்டுமே' என்று சொன்னார்

'இல்லை தாத்தா, அவளை கொண்டு விட்டு வரேன்,' என்று அவன் சொல்லவும்...

“சிவகாமி, அந்தத் தட்டை எடும்மா,” என்று தன் மனைவியிடம் சொன்னார்

சிவகாமியும் அந்தத் தட்டை வெளியில் எடுத்து வந்தாள் 'அவளிடம் கொடு,' என்றார்

'இதென்ன தாத்தா?’ என்று கேட்டாள் சித்ரா

'இது உனக்கு, இந்த வீட்டில் எல்லோருக்கும் வாங்கியிருக்கு, உனக்கும்தான், நீயும் இந்த வீட்டு பேத்தி இல்லையா? என்று கூறினார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.