(Reading time: 16 - 31 minutes)

27. கிருஷ்ண சகி - மீரா ராம்

து என் புக் தான் சார்… கொடுங்க…” என எதிரே நிற்பவனின் முகத்தை பாராது சொல்லிக்கொண்டு தரையை வெறித்து பார்த்தவள், இன்னமும் புக் தன் கைக்கு வராதததை எண்ணி “என்னாயிற்று… புக் கேட்டால் தர வேண்டியது தானே?... எதுக்கு இத்தனை யோசனை?...” என எரிச்சலுடன் நிற்க,

மகத்திற்கோ புக் கொடுக்கும் எண்ணமே இல்லை கொஞ்சம் கூட… அவளையே தான் பார்த்திருந்தான் அவன் கொஞ்சம் கூட இமைக்காது…

“ஐய்யோ…” என நொந்து கொண்டவள், “இப்படியே விட்டால் சரி வராது… புக்கை நாமளே பிடுங்கிட்டு போயிட வேண்டியதுதான்…” என எண்ணியபடி,

krishna saki

“சார்… நம்பளைனா அதுல என் பேரு ராதிகான்னு இருக்கும் சார் பாருங்க…” என சொல்லிபார்த்தாள் இறுதியாக…

அவனிடம் எந்த அசைவுமே இல்லாது போக, “என் புக்கை கொடுங்க சார்…” என நிமிர்ந்து அவனது கைகளில் இருந்த புக்கை பிடுங்கி கொண்டு வேகமாக ஒடியவளின் ஓட்டம் சற்று தூரத்திலேயே நின்றது மெதுவாய்…

ஏங்கிய ஏக்கத்திற்கு விடை கிடைப்பது போல் இருக்க, மனதினுள் எதுவோ நிறைந்திருப்பதாய் தோன்ற, சட்டென திரும்பியவள் தூரத்தில் இருந்த அவனை பார்த்தாள்…

ஒரு நிமிடம் அவன் முகத்தினை ஊன்றி கவனித்தவளுக்கு, அதற்கு மேல் கால்கள் அங்கே நிற்கவில்லை…

அவனை விட்டு விலகி ஓடிய கால்கள் மீண்டும் அவனருகே வந்து தஞ்சம் கொண்டது….

அவன் அவள் விழிகளைப் பார்த்துக்கொண்டிருந்த வேளை,

“சகி…..” என்ற கூவலுடன் அவன் தோள் சாய்ந்திருந்தாள் அவள் அழுதபடி…

“என்னை மன்னிச்சிடுங்க சகி… உங்க கிட்ட சொல்லாம கூட வந்துட்டேன்… அப்பாக்கு திடீர்னு டிரான்ஸ்பர் ஆகிடுச்சு… ராத்திரியோட ராத்திரியா கிளம்பிட்டாங்க அரை குறை தூக்கத்துல நான் இருக்கும்போதே…. மன்னிச்சிடுங்க சகி… சாரி…” என அழுதவள் அவன் தோள்களை விட்டு விலகவில்லை கொஞ்சமும்…

“கிருஷ்ணா…” என அவன் மென்மையாக அழைக்க, அவள் மேலும் ஏங்கி அழுதாள்…

“ஷ்… போதும்டா… அழாத… ப்ளீஸ்… நான் எதுவும் நினைச்சுக்கலை… பட்… நாம இப்ப இருக்குறது கோவில் முன்னாடி… இங்க நீ இப்படி...” என அவன் சுற்றுப்புறத்தை சுட்டிக்காட்ட…

“யார் பார்த்தா என்ன?... என்ன சொல்லுவாங்க?... யார் வந்து கேட்டாலும் நான் சொல்லுவேன்… நீங்க என் சகின்னு… என்னோட சகி மட்டும்னு…” என அவன் விழி பார்த்து கூறியவள், அவன் அவளையேப் பார்ப்பதை பார்த்துவிட்டு,

“நான் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்ல சகி… சாரி… மன்னிச்சிடுங்க…” என மீண்டும் தன் தோள் சாய்ந்தவளை அணைத்துக்கொள்ள துடித்த கரங்களை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான் அவன்…

தன் தோள் அவள் சாய்ந்திருந்த போதிலும், தன் விரல் நுனி கூட அவள் மீது படுவதற்கு அவன் மனம் விரும்பவில்லை… இப்போது அவள் மீது என் ஸ்பரிசம் படுவது முறையல்ல… என தனக்குத்தானே ஒரு வேலி போட்டுக்கொண்டவன், தன்னை அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டான் மெல்ல….

“அப்ப இருந்து இப்போ வர நீங்க மாறவே இல்லல்ல….” என அவனது செயலை சுட்டிக்காட்டி அவள் சொல்ல,

“நீயும் மாறலை… அப்படியே தான் இருக்குற….” என்றான் அவனும்…

“அப்படியா?... எனக்கென்னமோ அப்படி தெரியலையே…. உங்க அளவுக்கு இல்லன்னாலும் உங்க தோளுக்காச்சும் வளர்ந்துருக்கேனே….” என புன்னகைத்துக்கொண்டே சொன்னவளை புன்னகையோடு பார்த்தவன்,

“ஆமாடா… நீ வளர்ந்துட்ட….” என்றான்…

“சகி… நீங்க இந்த ஊரில தான் இருக்கீங்களா?... உங்களை நான் பார்த்ததே இல்லையே….”

“இல்லடா… ஒரு கான்ஃபெரென்ஸ்க்காக இங்க வந்தேன்… இன்னைக்கு காலையில தான்…”

“ஓ…. சரி…” என்றவள், ஒரு கணம் அவனை ஊன்றி பார்த்துவிட்டு,

“ட்வெல்த் பரீட்சை எல்லாம் நல்லா எழுதுனீங்களா சகி?...” என வருத்தத்தோடு கேட்டவள், அவனது பதிலை எதிர்பார்த்து காத்திருந்த போது, அவன் ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன்… என்றபடி சென்றான்…

சில நிமிடங்களில் திரும்பி வந்தவனின் கைகளில், இரண்டு சாக்லேட் இருந்தது…

“என்ன சகி இது?...” என அவள் கேட்க,

“உனக்கு பிடிச்ச சாக்லேட் தாண்டா…” என்றபடி அவள் கைகளில் கொடுத்தவன்,

“ஒரு சாக்லேட்… நான் ட்வெல்த்-ல நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணினதுக்கு… இன்னொன்னு ஹ்ம்ம்… நீயே கெஸ் பண்ணு பார்க்கலாம்….” என அவன் எடுத்து கொடுக்க

சற்று நேரம் யோசித்த்தவள், பின், “என் சகி… இப்போ டாக்டர் ஆகிட்டாங்க… அப்படித்தானே?...” என அவள் கேட்டதும் அவன், புன்னகையுடன் ஆம் என தலை அசைத்தான்…

“வாவ்…. சகி… எனக்கு இதை கேட்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?...” என்றவள் சட்டென முகம் வாடிப்போக

“என்னடா… ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட?...”

“என்னால உங்ககூட அந்த சந்தோஷமான நேரத்துல எல்லாம் இருக்க முடியாம போயிட்டே சகி… அதை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு…” என சொன்னவள் அவன் அடுத்து கேட்ட கேள்வியில் அமைதியானாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.