(Reading time: 16 - 31 minutes)

ன்னாச்சு எனக்கு?... ஏன் என் மனசு அவன் அப்போ கேட்ட கேள்வியை இப்போ நினைக்குது?”  என கேள்வியுடன் இருந்தவன், சட்டென அவள் பிடியிலிருந்து எழுந்து கொள்ள, அவளும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்…

“இப்பவும் யாராவது பார்த்துடுவாங்கன்னு பயமா?... யாரு என்ன சொன்னா என்ன சகி?... நீங்க என் சகி… அதை நியாபகம் வச்சிக்கோங்க… சரியா?..” என்று கேட்டவளை ஒரு நிமிடம் நின்று நிதானமாக பார்த்தவன்,

அவளிடம், “ஆமாடா… கிருஷ்ணா… நீ இப்போ என்ன படிக்குற?...”

“அப்பாடா… என்னடா இவ்வளவு நேரம் இதைப் பத்தி கேட்கலையேன்னு இப்போதான் நினைச்சேன்… அதுக்குள்ள கேட்டுட்டீங்க…” என்றவள்,

“எங்க கெஸ் பண்ணுங்க பார்ப்போம்…” என்றாள்…

“ஹ்ம்ம்… நீயே சொல்லிடேண்டா… ப்ளீஸ்…” என அவன் கெஞ்ச,

“என்ன சகி… நீங்க சொல்லுங்க… உங்களுக்கு தெரியாதா என்ன?...” என அவள் கொஞ்சி கேட்க, அவனுக்கு அவள் செயல் வித்தியாசமாய் தெரிந்தது…

“இல்லடா நான் தப்பா சொல்லிடக்கூடாதுல்ல… அதான்…” என அவன் மெதுவாக சொல்ல,

“அதெல்லாம் என் சகி தப்பா சொல்லமாட்டாங்க… எனக்கு தெரியும்…” என்றவளிடத்தில்,

“நீயே சொல்லுடா… அது தான் நல்லா இருக்கும்…” என்றான் அவன் அமைதியாக…

“இப்போ என்ன பிரச்சினை உங்களுக்கு?...” என்று வேகமாக எழுந்தவள், அவனைப் பார்த்து,

“ஒருத்தி கேட்டுட்டே இருக்கேன்ல… நீங்க பாட்டுக்கு என்னை சொல்ல சொன்னா என்ன அர்த்தம்?... எனக்கு இப்போ நீங்க தான் சொல்லணும்… சொல்ல முடியுமா?... முடியாதா?... அத மட்டும் சொல்லுங்க?...” என ஒரு இடுப்பில் கைவைத்து புருவம் உயர்த்தியபடி அவள் கேட்க, அவனுக்கு பழைய நினைவுகள் வந்தது…

“நீ மாறவே இல்லடா…” என சொல்லியபடி சிரித்தவன், அவள் அவனை முறைப்பதைப் பார்த்துவிட்டு,

“இத்தனை நாள் இதெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்லடா…” என வருத்தமாக கூறியவன், அவள் பார்வை இன்னமும் தன்னிடத்தில் இருப்பதை கவனித்துவிட்டு,

“எனக்கு தெரிஞ்சு என் கிருஷ்ணா கண்டிப்பா டாக்டர் படிப்பு தான் படிச்சிட்டிருப்பா… என்ன சரியா?...” என அவள் போலவே ஒரு புருவம் மட்டும் உயர்த்தி அவன் கேட்க,

“ஹே…” என்று கூச்சலிட்டவள், “என் சகி எப்பவும் சரியாதான் சொல்லுவார்… ஏன்னா அவர் என் சகியாச்சே…” என்று பெருமைப்பட்டு கொள்ள அவன் சிரித்தான்…

“எந்த காலேஜ்டா… இது செகண்ட் இயர் தான? ஸ்டடீஸ் எல்லாம் நல்லா போகுதாடா… சப்ஜெக்ட்ஸ் எல்லாம் புரியுதுல்லடா?...” என அவள் மேல் உள்ள அக்கறையை அவன் பேச்சில் வெளிப்படுத்த, அவள் அவனையே பார்த்தாள்…

“என்னடா என்னாச்சு?...” என அவன் கேட்க

“இத்தனை நாள் இதெல்லாம் நீங்க எப்போ கேட்பீங்கன்னு காத்திட்டிருந்தேன்… இன்னைக்கு தான் அது நடந்திருக்கு… ஆனாலும் சகி என் மேல அன்னைக்கு இருந்த அக்கறை இன்னைக்கு வரைக்கும் உங்களுக்கு கொஞ்சம் கூட குறையலை… அதிகமா தான் ஆகியிருக்கு… இல்ல?...” என கேள்வியோடு அவள் முடிக்க…

அவன் உதட்டில் சிரிப்பு மலர்ந்தது….

“இந்த சிரிப்பை பார்த்து எத்தனை நாள் ஆச்சு?... ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் சகி… உங்களை… ரொம்பவே…” என இருகைகோர்த்து மனமுருகி தன் கன்னத்தில் வைத்து சொல்ல,

“ஹேய்… என்னடா இது… அதான் வந்துட்டேன்ல… எதுக்கு இப்போ இப்படி எல்லாம் உணர்ச்சிவசப்படுற?... விடு….” என சொல்லியவன், அவள் கைகளை கீழே இறக்கும் போது, அவள் கழுத்தில் கிடந்த ஐடி கார்டை பார்த்துவிட்டு,

“கார்ட் கூட கழட்ட மனசு இல்லையா உனக்கு?...” என சிரித்துக்கொண்டே கேட்டான்…

“அச்சோ… ஆமால்ல… இத வேற நான் மறந்துட்டேன்….” என சொல்லிக்கொண்டே அதை கழட்டியபோது, அவள் செயினுடன் அது சிக்கிக்கொள்ள,

“ஹே… பார்த்துடா….” என சொல்லியவன் அவள் கழுத்தில் கிடந்த செயினை பார்த்து ஊமையாகி இருந்தான்….

“ஷ்….. ஒருவழியா… எடுத்துட்டேன்… இந்தாங்க எந்த காலேஜ்னு நீங்களே இதப் பாருங்க…” என சொல்லி அவன் கைகளில் அவள் கொடுக்க முற்படும்போதுதான் அவனை கவனித்தாள்…

அவன் பார்வை, அந்த செயினில் இருக்க, அவனோ சிலையாக இருந்தான்…

சட்டென தன் உள்ளங்கழுத்தினில் கிடந்த அந்த செயினைப் பிடித்துக்கொண்டவள், அதை மறைத்தபடி துப்பட்டாவை சரி செய்துவிட்டு,

“சகி… நீங்க சாப்பிட்டீங்களா?... எனக்கு இன்னைக்கு மதியம் கிளாஸ் எதுவும் பெரிசா இல்ல… அதான் சும்மா கடையில ஷாப்பிங்க் செய்துட்டு ஈவ்னிங்க் வீட்டுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன்… இப்போ டைம் 2 ஆச்சு… வாங்க சாப்பிடலாம்… பாட்டி எனக்கு லஞ்ச் கொடுத்துவிட்டாங்க… வாங்க சாப்பிடலாம்…” என பேச்சை மாற்றி அவனை அவள் சாப்பிட அழைக்க, அவன் எதுவும் பேசவில்லை…

“சகி… ப்ளீஸ்… சாப்பிடலாம்… வாங்க…” என அவள் கெஞ்சி பார்த்தும் அவனிடம் அசைவு இல்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.