(Reading time: 16 - 31 minutes)

ரி… சகி… நான் சொல்லிடுறேன்… உங்க நியாபகம் எப்பவும் என் நெஞ்சுக்குள்ளயே இருக்கணும்னு தான் நான் இதை என் கழுத்துல போட்டுக்கிட்டேன்….” என அவள் பயந்து கொண்டே சொல்லிமுடிக்க,

“எப்போ இருந்து போட்டிருக்க?...” என்றான் அவன்….

“அது….” என இழுத்தவள், அவனின் பார்வையில் அடங்கி,

“டென்த் படிக்கும்போதே போட நினைச்சேன்… அப்போ செயின் இல்லை… ட்வெல்த் அப்போவும் அப்படியே ஆகிடுச்சு… அப்ப தான் பாட்டிகிட்ட என் அம்மா நினைவா எந்த நகையும் இல்லையான்னு கேட்டேன்… பாட்டி தான் நான் அம்மா வயித்தில இருக்கும்போதே அம்மாவும் அப்பாவும் எனக்காக ஒரு குட்டி செயினை எடுத்து வச்சதா சொல்லி எங்கிட்ட கொடுத்தாங்க… அதை நானும் காலேஜ் போன ஃபர்ஸ்ட் நாளே போட்டுகிட்டேன்…” என சொல்லிவிட்டு, அவனைப் பார்த்தாள்…

அவன் அடுத்து என்ற பாவனையில் பார்க்க, “சொல்லிடுறேன் முழுசா… கோபப்படாதீங்க…” என முகவாட்டம் கொண்டவள்,

“நீங்க எனக்கு கொடுத்த இந்த டாலரை பாட்டி கொடுத்த செயினில் கோர்த்து போட்டுக்கிட்டேன்… என்னதான் நீங்க என் பக்கத்துல இருக்குற மாதிரி நான் நினைச்சிகிட்டாலும், இந்த டாலரை என் கழுத்துல சுமந்த அந்த நொடி நீங்க என் கூடவே என் மூச்சில கலந்துட்ட மாதிரி ஒரு உணர்வு…  அதை எனக்கு வேற எப்படின்னு சொல்லத் தெரியலை சகி… எனக்கு அந்த உணர்வு பிடிச்சிருந்துச்சு… அதனால என்னால பாட்டி திட்டியும் கூட கழட்ட முடியலை… கழட்ட முடியலைன்னு சொல்லுறதை விட எனக்கு தோணலை சகி… இது என் கைவிட்டு போனா நீங்க என்னை விட்டு போயிடுவீங்கன்னு ஒரு பயம் இனம் புரியாம நெஞ்சுக்குள்ள புகுந்து ஆட்டுவிக்குது… பாட்டி சொன்ன மாதிரி நீங்களும் இதை கழட்ட சொல்லிடாதீங்க சகி… ப்ளீஸ்… நீங்க சொல்லமாட்டீங்கன்னு நம்பிக்கை இருக்கு… ஆனா உங்க அதிர்ச்சியான பார்வைக்குண்டான அர்த்தமும் புரியுது… இருந்தாலும்…..” என வார்த்தை வராது அவள் தவிக்க

“ஏன் கிருஷ்ணா?...” என அவள் விழி பார்த்து அவன் கேட்டதும்,

அவள் மளமளவென்று அழுதுவிட்டாள்…

வழக்கமாக அவள் அழ பொறுக்கமாட்டாதவன், இன்று கஷ்டப்பட்டு அமைதி காத்தான் அவள் மனதினை தெரிந்து கொள்ள….

“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு சகி… இந்த ஆறு வருஷத்துல ஒரு நிமிஷம் கூட உங்களை நான் மறந்தது கிடையாது… நீங்க என்னை எப்படி பார்த்தீங்கன்னு எனக்கு தெரியும்… எப்படி பழகினீங்கன்னு கூட எனக்கு தெரியும்… ஏன் இத்தனை வருஷம் கழிச்சு நான் பார்த்தப்போ கூட உங்க விரல் கூட இன்னும் ஏன் மேல படாம தான கண்ணியம் காத்தீங்க… இத்தனை நல்ல குணங்கள் போதாதா சகி எனக்கு, உங்களுக்கு என் மனசுல இடம் குடுக்க…”

“நான் அவசரப்பட்டோ, இல்ல உணர்ச்சிவசப்பட்டோ இப்படி சொல்லலை… நல்லா யோசிச்சு தான் பேசுறேன்… இந்த வயசில இதெல்லாம் எனக்கு தேவையான்னு நீங்க கேட்கலாம்… ஆனா இது ஒன்னு தான் நான் வாழ தேவைன்னு உங்களுக்கு எப்படி புரிய வைக்குறதுன்னு எனக்கு தெரியலை சகி…”

“இதைப் பத்தி இதுவரை நான் யார்கிட்டயும் மூச்சு கூட விட்டதில்லை சகி… உங்களைப் பத்தி யார்கிட்டயும் சொன்னது கூட கிடையாது… ஏன்னா உங்ககிட்ட தான் நான் முதலில் சொல்லணும்னு ஆசப்பட்டேன்… ஆனா அது உங்களை பார்த்த அன்னைக்கே சொல்லுவேன்னு நான் நினைக்கலை கொஞ்சம் கூட…”

“எங்க நான் என் மனசை சொன்னா நீங்க மறுத்துடுவீங்களோன்னு பயம்… அதனால தான் அதை எப்படி சொல்லுறதுன்னு யோசிப்பேன்… அப்புறம் என் மனசு கண்டிப்பா உங்களைப் பார்ப்பேன்னு சொல்லுச்சு… அதனால உங்ககிட்ட சொல்லுறதை தள்ளிவச்சேன்… முழுக்க முழுக்க உங்க நினைவுல என்னை இழந்தேன் ஒவ்வொரு நாளும்…”

“அம்மாவா, அப்பாவா எனக்கு இருந்தீங்க… நண்பனாவும் இருந்தீங்க… எனக்கு முழு விவரம் கூட தெரியாத வயசில… ஆனா எனக்கு விவரம் தெரிஞ்ச பிறகு, உங்களை இன்னொரு ஸ்தானத்திலேயும் நான் வச்சுப் பார்த்துட்டேன்… பார்த்துட்டிருக்கேன்… அது ஏன் எதுக்குன்னு என்கிட்ட கேட்டா நிச்சயமா பதில் இல்லை…”

“நீங்க கேட்டீங்க… அதனால மறைக்காம சொல்லிட்டேன்… பட் நான் சொன்னதுக்காக என் மேல தயவு செய்து கோபம் மட்டும் படாதீங்க சகி… ப்ளீஸ்… கோபப்பட்டாலும் பரவாயில்லை… ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க… இப்படி மௌனமா…” என அவனின் அமைதியை சுட்டிக்காட்டி அவள் பேச,

அவன் அங்கிருந்து எழுந்தான்…

“சகி… ப்ளீஸ்… என் மனசுல நீங்க தான் இருக்குறீங்கன்னு புரியுது… ஆனா அதுக்காக நான் என் படிப்புல எந்த குறையும் வைக்கலை… உங்க நினைவும் அதுக்கு எந்த இடைஞ்சலும் தரலை… சொல்லப்போனா, நான் படிக்க துணையா இருக்குறதே உங்க நினைப்பு ஒன்னு தான்… ட்வெல்த்தில் என் ஸ்கூல் ஃபர்ஸ்ட் நான் தான்… என் வெற்றிக்கு காரணமாவும் நீங்க தான் இருந்தீங்க இருக்கீங்க… பதினேழு வயசுல எனக்கு என் மனசு புரிஞ்சது… ஒருவேளை இந்த வயசு போதாதுன்னு நீங்க நினைச்சா, நான் படிச்சி முடிச்சதும் என் மனசை சொல்லணும்னு காத்திட்டிருந்தேன்… ஆனா அதை இப்பவே சொல்லும்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கலை…”

“சின்ன வயசில நான் பட்ட கஷ்டத்தை விட அதிக மடங்கு கஷ்டம் நீங்க பட்டிருக்கீங்க… அதும் என் கஷ்டத்தை உங்க கஷ்டமா உணர்ந்தீங்க… அப்பவும் மனசார தான் என் சகின்னு சொன்னேன்… இப்பவும் அதே மனசார தான் சொல்லுறேன் என் சகின்னு… என் சகிக்கு நான் அம்மாவுக்கு அம்மாவாகவும் இருக்கணும்… மனைவிக்கு மனைவியாகவும் இருக்கணும்… தோழிக்கு தோழியாகவும் இருக்கணும்… மொத்தத்துல என் சகிக்கு எல்லாமாகவும் நான் கூடவே இருந்து பார்த்துக்கணும்னு கோடி ஆசை மனசுல இருக்கு… உங்களுக்கு என் மனசு புரியுதா சகி?... என்னை ஏத்துப்பீங்களா சகி உங்களோட காலம் முழுக்க வர்ற துணையா?...” என ஏக்கமும் பரிதவிப்பும், ஒட்டு மொத்த காதலுமாய் கேட்டவளிடத்தில்,

“உன் வெற்றிக்கு பின்னாடியும், உன் பேருக்கு பின்னாடியும் இனி கண்டிப்பா நான் இருப்பேண்டா… கிருஷ்ணசகியா… போதுமா?...” எனக் கேட்டது தான் தாமதம் போல் அவனை சுற்றம் மறந்து உலகம் மறந்து அழுகை கலந்த உவகையோடு அவனை நெருங்கினாள் அவள்……

“கிருஷ்ணா…. என்ன இது… யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?...” என அவன் விலக எத்தனிக்க,

“யார் பார்த்தா என்ன?... யார் கேட்டாலும் சொல்லுவேன்… நான் கிருஷ்ணசகின்னு…” என சொல்லி வெட்கப்பட்டு சிரித்தவளை இமைக்காது பார்த்து கண்களில் நிறைத்தான் மகத் அளவில்லாத சந்தோஷத்தோடு…

தொடரும்

Episode # 26

Episode # 28

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.