(Reading time: 18 - 35 minutes)

11. என் மனதை தொட்டு போனவளே - VJ G

வள் கையை தன் கைக்குள் எடுத்துக் கொண்டான், “சித்து, சித்து” என்று அனத்திக் கொண்டு அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டான், அந்த சுகத்தை அப்படியே அனுபவித்துக் கொண்டிருந்தான்,' இப்படியே வீட்டுக்குப் போய் விடலாம் வரியா?' என்று கேட்டான்

'நான் எப்படி வர முடியும், எங்க அம்மா, வீட்டில் எனக்காக காத்திருப்பாங்க,’

‘ சித்ரா, தாத்தா சொன்னாரே, உன்னை அங்கேயே இரு என்று, நான் அவள் போகட்டும் என்றேன், என் மேல் கோபமில்லையே? நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்றால், என்னால் உன்னை அப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.'

en manathai thottu ponavale

' எனக்கு, என் மேலேயே எப்படிக் கோபம் வரும், உங்களை முதல் முறை பார்த்த போதே உங்களிடம் என் மனதை கொடுத்து விட்டேன், நீங்க யாரென்றே அப்போது எனக்கு தெரியாது, இப்போதோ, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தெரிந்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு நீங்கள் வேலை வாங்கிக் கொடுத்தருக்கிறீர்கள், எனக்கு ஏன் உங்கள் மேல் கோபம் வரும்? நீங்கள் சொன்னாலோ, செய்தாலோ அதில் அர்த்தம் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.' என்றாள்

'உன்னைப் பத்தி சொல்லு சித்து, ஏன் நீயும், உங்க அம்மா மட்டும்தான் இருக்கீங்களா, அப்பா என்ன ஆனார்?'

'அவள் கண்களிலிருந்து கண்ணீர், எங்க அப்பா கான்செர்ல, எட்டு வருஷம் முன்பு இறந்துவிட்டார், அவரைக் காப்பத்துவதற்கு இருந்த பணமெல்லாம் அம்மா செலவழித்து விட்டார்கள், அதிலே எல்லாம் இழந்துவிட்டோம், அம்மா, எப்படியோ என்னை படிக்க வைத்தாள், இப்போ அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை, நான் முன்னாடி ஒரு வேலைப் பார்த்தேன், அவங்க ஏதோ பிசினஸ் மீட்டிங் என்று சொல்லி ஹோட்டலுக்குப் கூட்டிப் போனாங்க, அங்கே அந்த மீட்டிங்க்ல வந்த ஆள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான், சரி, சில ஆளுங்க அப்படித்தான் இருப்பாங்கன்னு இருந்துட்டேன், அப்புறம் பார்த்தா என்னோட பாசுக்கிட்ட, என்னை வியாபாரமா பேசினான், எனக்கு வந்த கோபத்துலே அப்படியே எழுந்து வந்துட்டேன்,'

'என்னிக்கு? நான் உன்னை பார்த்தேனே, அன்னிக்கா?'

'ஆமாம், அப்போதான்,' அவன் பல்லைக் கடித்து அவன் உடம்பு இறுகுவதை உணர்ந்தாள்,

“இப்போ எனக்கு வேலை ரொம்ப முக்கியம், எனக்கு யாரிடமும் கடன் வாங்குவது பிடிக்காது, என் சிநேகிதிகள் பணம் கொடுக்கறேன் என்று சொன்னார்கள், நான் தான் எப்படியாவது, ஒரு வேலை கிடைத்து விடுமென்று நம்பிக்கையுடன் இருந்தேன், அதே போல் அன்று உங்களைப் பார்த்தேன், நீங்களும் உங்கள் பிரன்ட்டிடம் சொல்லி வாங்கிக் கொடுத்தீர்கள், இப்போ பிரச்சனை இல்லை.'என்றாள்

'எந்த காரனமானாலும், நீ இந்த வேலையை விட மாட்டேனென்று எனக்கு ப்ராமிஸ் பண்ணு?' என்று கேட்டான்,

அவள் ஆச்சர்யத்துடன், அவனைப் பார்த்தாள், 'இல்லை,நான் விடமாட்டேன், இப்பதானே உங்களுக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று சொன்னேன்,' என்றாள்

'நான் உங்க ஆபிசில் பேசி விடுகிறேன், ஒரு வாரம் கல்யாணம் வரையில் வீட்டுக்கு தாத்தா சொன்னபடி வந்துடு,'

'ஐயோ, அப்போ ஆபிஸ் வேலையெல்லாம் கத்துக் கொள்ள முடியாதே,அதுமட்டுமில்லை, சேர்ந்து ஒருநாள் தான் ஆகிறது, சம்பளம் கட் பண்ணிடுவாங்க, நான் வேணும்னா, ஈவினிங் வேலை முடிந்தவுடன் வரேனே?' என்று கெஞ்சலுடன் சொன்னாள்

'சரி ஒன்னு செய்வோம், நீ பாதி நாள்,ஆபிசுக்குப் போ, பிறகு லஞ்சுக்கு வீட்டுக்கு வந்து விடு, 'என்று கூறினான் அவன்

அவளும் சரி என்று சொன்னாள்

'சரி உன்னை, உங்கள் வீட்டில் விட்டு, விடுகிறேன்' என்றான்

காரை கிளப்பிக் கொண்டு போனான்

அவள் வீட்டருகே வந்தபோது '

உங்க வீட்டுக்கு நான் வரவா, உங்க அம்மாவைப் பார்க்கவா?” என்று கேட்டான்,

'எனக்கு உங்களை வாங்கன்னு சொல்லனும்னு, ஆனால், பயமாயிருக்கு, அம்மாவிடம் என்னவென்று சொல்லுவேன், அவங்களுக்குத் தெரியும் நான் உங்கள் வீட்டுக்கு வந்து ஹெல்ப் செய்யறேன்னு ஆனால், இந்த விஷயம் அவர்கள் நம்மை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியல்ல' என்றாள்

'நான் வரட்டுமா, வேண்டாமா?'

'கொஞ்சநாள் போகட்டும் நான் அம்மாவிடம் பேசறேன், பிறகு வரலாமே ப்ளீஸ்! என்னை தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ்!'

'என்னையே நான் எப்படி தப்பா, என்னால் என்னை புரிந்துக் கொள்ள முடியாதா,' என்று அவன் கேட்ட விதத்தில் அவன் கையைப் பிடித்து, ' தேங்க்ஸ்' சொன்னாள்.

'எனக்கு எதுக்குடா தேங்க்ஸ் என்று சொன்னான், அதைக் கேட்ட அவளுக்கு அப்படியே அவன் மேல் சாய்ந்துக் கொண்டு, அவன் மார்பில் கையை வைத்துக் கொண்டு தடவ வேண்டும் போல் இருந்தது.

அவன் அவளை இழுத்து அனைத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.