(Reading time: 18 - 35 minutes)

ல்லாம் முடிந்தது, இருவரும் தன் நிலைக்கு வந்தனர், அவளுக்கு வெட்கம் ஒரு புறம், பயம் ஒரு புறம், அவன் அவளை அணைத்தான், என்னடா பயமாக இருக்கிறதா, இந்தக் கல்யாணம் முடியட்டும் நான் தாத்தாவிடம் பேசறேன், நம் கல்யாணத்தை முடித்துக் கொள்வோம், என்ன, பயபடாதே' என்றான் அவளை இழுத்து கட்டி அனைத்து, “உன்னை விடவே மனசு இல்லை, இங்கேயே இருந்து விடு, எப்பவும் இப்படியே இருந்துவிடுவோம்,” என்று கொஞ்சினான்

அவளும் 'எனக்கும் இப்படியே இருந்து விட ஆசைதான், என்ன செய்வது வீட்டில் பெரியவர்களும், சிறுவர்களும் இருக்கிறார்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்? அதனால் கொஞ்சம் அவர்கள் எதிரில் கட்டுப்பாட்டோடு இருங்கள், என் ருத்ராவை பற்றி யாரும் தப்பாகப் பேசுவதை என்னால் தாங்க முடியாது.' என்றாள்

'சரி, வா நாம் இருவரும் ஒன்றாகவே குளிப்போம்' என்றான் அவன்

அவளோ ' சரியான ஆள் நீங்க, இருங்க நான் போய், ரெடி ஆகி கீழே போகிறேன் அப்புறம் நீங்கள் வாங்க,’ என்றாள்

அவள் குளித்து ரெடியாகி வெளியே வந்தாள், ருத்ரா அவளை இழுத்து முத்தம் கொடுத்து ‘எவ்வளவு இனிமையாக இருந்தாய் நீ என்று தெரியுமா, தேங்க்ஸ் சித்ரா, என்னை நீ அனுசரித்து அனுமதி கொடுத்தற்கு,' என்று சொன்னான்

அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள், ' உங்களுக்கு இல்லாமல் என்ன, நான் உங்கள் சொத்து, உங்களுக்கு எப்போ தேவையோ அதைக் அந்த நேரத்தில் தான் கொடுக்கணும்'

அவன் இன்னொரு முத்தம் கொடுத்து அவளை விடுவித்தான், அங்கிருந்து அவள் கீழே இறங்கி, தாத்தாவின் ரூமுக்குப் போனாள், அவரிடம் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தாள், அப்போது ருத்ராவும் அங்கே வந்தான், அவனைப் பார்த்தவுடன் அவள் முகம் சிவந்தது, அவனுக்கும் தான், இருவரையும் ஒரு நொடி தாத்தா பார்க்கத் தவறவில்லை,

தாத்தாவும் ருத்ராவிடம் ரொம்ப சாதாரமாக கல்யாண வேலைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார், அவன் வெளியே போகும் போது அவளிடம் தலைய ஆட்டி விடை பெற்றுக் கொண்டு போனான், அதையும் அந்தக் கிழவர் பார்க்கத் தவறவில்லை, இவர்கள் யாருக்கும் தெரியாது என்று நடத்தும் காதல் நாடகத்தை பார்க்கத் தவறவில்லை,

ருத்ரா வெளியே போய்விட்டு திரும்பி வீட்டுக்குள் வந்தவுடன், கண், சித்ரா எங்கே என்று பார்த்துக் கொண்டு தான் வந்தது எதிரே வந்த கற்பகம் ‘என்னப்பா காபி கொண்டு வரவா,’ என்று கேட்க,

‘இல்லைம்மா வேண்டாம்,’ என்று கூறி உள்ளே ஒவ்வொரு இடமாக அவளை தேடினான், அவள் இல்லை, எங்கே போனளோ, என்ற கோபத்தில் தன் ரூமுக்கு வந்தான் அங்கே ஒரு தேவதையைப் போல் தன் ஷர்டை வைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு வாசம் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் உள்ளில் ஒரே குதூகலிப்பு, மெதுவாக கதவை சாத்தி போட்டுவிட்டு, அவளருகில் வந்து அவளைக் கட்டிப் பிடித்து கேட்டான் “என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?” என்று, அவள் கண்களிலிருந்து கண்ணீர், ‘என்ன,’ என்று கேட்டான்,

‘உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்,’ என்றாள்

அவன் இன்னும் இறுக்கமாக அவளைக் கட்டிப் பிடித்தான், ‘நானும் உன்னைத் தேடிக்கொண்டு வீடு முழுவதும் அலைந்தேன், கடைசியில் நீ இங்கே இருக்கிறாய் நான் எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?’ என்றான் அவன்

ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் அந்த அணைப்பில் இதம் கண்டார்கள், அணைத்தவுடன் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்துகொண்டார்கள் கொஞ்சினார்கள், தங்களை மறந்தனர், தங்கள் அணைப்பில் சுகம் கண்டனர், எல்லாம் முடிந்த பின்னர், அவன் அவளை அனைத்துக் கொண்டு, ‘நான் முரட்டுத்தனமா ஒன்னும் செய்யவில்லையே, அப்படியிருந்தால் சொல்லு,’ என்று கூறினான், அவள் வெட்கிச் சிவந்தாள், ‘இல்லை நீங்கள் மென்மையாகத்தான்.....’என்ற அவளுக்கு வெட்கம், எழுந்துக் கொள்ள முயன்றாள், ஆனால் அவன் விடவில்லை, இறுக்கிப் பிடித்தான், ‘வா கிளம்பி பீச்சுக்குப் போகலாம்,’ என்றான், ‘அவள் வேண்டாம், இப்படியே இருப்போம்,’ என்று அவனை இன்னும் நெருங்கினாள், அவனும் அவளை தன்னுடன் அனைத்துக் கொண்டான், ‘என்னடா, இன்னிக்கு இங்கேயே இருந்துடேன் ராத்திரி முழுக்க இப்படியே இருக்கலாம்,’ என்றான், அவள் சிரித்துக் கொண்டே ‘அதெல்லாம் முடியாது, அங்கே உங்க மாமியாருக்கு யார் பதில் சொல்லுவார்கள்,’ என்று கேட்டாள்.

அவன் சிரித்துக் கொண்டே ‘என் மாமியாரையும், என் பொண்டாட்டியையும் கொண்டு என்னோடையே வச்சுக்கிறேன் பாரு' என்றான்

என்ன சொன்னீங்க ' என்னையும், எங்க அம்மாவையும் வச்சுக்கிறீங்களா?’ என்று செல்லக் கோபப் பார்வை பார்த்தாள்  

'மக்கு, மக்கு…. நான் என் பொண்டாட்டிய வச்சுக்கிறேன் கூட மாமியாரை என் வீட்டிலே என் பொண்டாட்டிக்கு மட்டுமில்லை, எனக்கும் அம்மாவாக வைத்துப் பார்த்துக்கறேன், என் கண்ணம்மா’ என்றான்

அவளையும் மீறி அவனை இழுத்து முகம் முழுக்க பரிசளித்தாள்,

'ஹப்பா, பண்ணப்போறேன்னு சொன்னதுக்கே இப்படியா, அப்ப பண்ணதுகப்புரம்,'

அவள் அவனைப் பேச விடாமல் அவன் வாயில் முத்தம் வைத்தாள்,

'வாட் எ லவ்லி கேர்ள் யு ஆர்' என்றான்,’ அவன் முழுக்கவே ஆச்சர்யத்தில் மூழ்கினான்,

'என்னை நீ கொஞ்சுவது எனக்கு ரொம்ப பிடிச்சுது, சித்ரா, என்னை தினமும் இப்படி கொஞ்சுவாயா?' என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.