'நீங்க, உங்க அம்மா மடில படுத்து கொஞ்சி, அப்புறம் அப்படியே தூங்குணீங்களே, அப்போதிலிருந்தே ஏங்கிக் கொண்டிருந்தேன் என் மடியில் நீங்க படுத்து, அதே மாதிரி உங்களைத் தூங்கவைக்க வேண்டுமென்று, அது இன்றைக்கு நீங்கள் என் மடியில் படுத்தவுடன், திக்கு முக்காடிட்டேன், என்னையே மறந்து விட்டேன், நீங்கள் எது கேட்டாலும் இடம் கொடுக்கவேண்டுமென்று என் மனதில் தீர்மானித்தேன்' என்று முடித்தாள்
'நான் அம்மா மடியில் படுத்தது பொறாமையா இருந்ததா?’
'சீ, சீ, பொறாமையெல்லாம் இல்லை, என் மடியில் நீங்க படுக்க வேண்டுமென்ற ஏக்கம் அவ்வளவுதான்'
'நாளைக்கு உனக்கு ஒரு பிள்ளை பிறந்தால், இதே ஆசை இருக்குமா,'
'ஏன் இருக்காது, முதல் பிள்ளையை, யாராவது விட்டுவிடுவார்களா,' என்று அவள் கேட்டவுடன், அவளை இழுத்து அனைத்துக் கொண்டு முத்தம் கொடுத்ததில் இருவரும் தங்களை இழந்தார்கள்,
தங்கள் நிலைக்கு வந்தவுடன், அவர்கள் ரெடியாகி கீழே வந்தார்கள், இருவரும் களைப்பாக இருந்தார்கள், நான் கிளம்புகிறேன் என்று அவள் கிளம்பினாள், வித்யா, 'சித்ரா அண்ணி நில்லுங்க' என்றாள், ருத்ராவும்,சித்ராவும் பார்த்துக் கொண்டார்கள்.
'இத பாருங்க அண்ணி, எப்படியிருக்கு சொல்லுங்க?,' என்று அவள் தன் ப்லவுசில் செய்திருக்கும் வேலையை காண்பித்தாள், ருத்ரா வித்யாவின் அருகில் சென்று அவளைக் கட்டிக் கொண்டான், அவள் காண்பித்த ப்ளவுசை அவனும் பார்த்தான், ‘ரொம்ப நன்றாக இருக்குது விது செல்லம்’ என்றான், சித்ராவும் 'ஹேய், பியுடிபுல்,' என்றாள்
'அண்ணி, உங்களுக்கும் இந்த மாதிரி ஏதாவது வொர்க் பண்ணி தரட்டுமா, உங்க ப்ளவுசைக் கொடுங்க,' என்று கேட்டாள்
'இல்லை, வேண்டாம் என்று ஆரம்பித்தவுடன், ருத்ரவைப் பார்த்தாள், அவன் கண் ஜாடையில் கொடு என்றான், அவள் உடனே ‘சரி விது நாளைக்கு கொண்டு வரேன், நல்ல டிசைன் போடு, வேண்ணா உங்க அண்ணனைக் கேட்டுக்கோ,’ என்று கண்ணடித்து விட்டு, ‘நான் போய் விட்டு வரேன்,' என்று கன்னத்தில் லேசாக தட்டிவிட்டு சென்றாள், ருத்ராவும் அவளை தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் காரில் ஏறியவுடன், காரைக் கிளப்பி, ரோடுக்கு வந்தவுடன், அவள் கையை எடுத்து தன் கையுடன் வைத்து, ‘என்ன நடக்குது, விது உன்னை அண்ணி என்றழைக்கிறாள், நீயும் விது என்று செல்லம் கொஞ்சினாய் ' என்று கேட்டான்
'பொறாமை?' என்று கேட்டாள்
'ஹேய், பொறாமை எல்லாம் இல்லை, என்ன ரெண்டு பேரும் அப்படியே கொஞ்சுகிரீர்களே?'
'அவள் என்னை அண்ணி என்று கொஞ்சுகிறாள், என் காதலரின் அன்பு தங்கை வித்யாவை, என் காதலருக்குப் பிடித்தால் போல் விது என்று நான் கூப்பிடறேன், நாளடைவில், இந்த அன்பு அதிகமாகும், ரொம்ப பொறாமை படாதீர்கள்,' என்று கூறினாள்
'நீ அந்த மாதிரி ப்ளவுஸ் போட்டு நான் பார்க்கணும், அதில் நீ ஜொலிக்கும் அழகைப் பார்க்கணும், தேங்க்ஸ் நான் சொன்னவுடன் நீ ஒத்துக்கொண்டதற்கு,' என்றான் அவன்
'என்ன நீங்க, இனி உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் நான் செய்வேன்,' என்றாள்
அவன், அவள் கையை எடுத்து ஒரு முத்தம் கொடுத்தான், அப்போது அவன் போன் மணி அடித்தது, எடுத்து யாரென்று பார்த்தான், ஏதோ புது நம்பர், காரை ஓரமாக நிறுத்தினான், செல்லை எடுத்து பேசினான், அடுத்த முனையில், ' ருத்ரா சார் தானே இது, நான் செந்தில், உங்களுக்கு நான் யாருன்னு தெரியாது, எனக்கும் உங்களை தெரியாது, மேட்டர் உங்க சிஸ்டர் வித்யாவைப் பற்றியது, பயப்படாதீங்க, நாம நேரிலே பார்த்துப் பேசலாமா, இப்ப நான் இந்த ஷாப்பிங் மாலுல இருக்கேன், உங்களால இப்ப வர முடியுமா?
‘நீங்க இன்னும் விஷயம் என்ன என்று சொல்லவில்லை, இருந்தாலும் இப்ப மணி ஆறு, கொஞ்சம் லைன்ல இருங்க, சித்து, எனக்கு ஒரு ஆளை இப்பவே மீட் பண்ணனும் உனக்கு டைம் ஆகலேன்னா நீயும் வரியா? இல்ல உன்னை கொண்டு விட்டு வரணும்னா நான் விட்டு வருகிறேன்,’ என்று கேட்டான்,
'ரொம்ப கான்பிடென்ஷியல், இல்லேன்னா நான் வரேன், உங்களோட கூட இருந்தா, இன்னும் சந்தோசம்' என்றாள்
'நீ என்னுடையவள், உனக்கும் எனக்கும் நடுவில் ஒரு ஒளிவு மறைவும் இல்லை,' என்று கூறி
போனை எடுத்து, 'நான் மாலுக்கு அருகில்தான் இருக்கேன், ஒரு பத்து நிமிடத்தில் அங்கு இருப்பேன்.' என்றான்
விஷயத்தை சுருக்கமாகச் சித்ராவிடம் சொன்னான், அதற்குள் மால்லை அடைந்து விட்டார்கள், காரை அங்குள்ள சர்வீஸ் ஆளிடம் பார்க் பண்ணச் சொல்லிவிட்டு, உள்ளே சென்றார்கள் போகும் வழியில் செந்திலிடம் பேசி எங்கு இருக்கிறான் என்று கேட்டு விட்டு, அவன் ஒரு ரெஸ்டாரண்டில் இருப்பதாகச் சொன்னான் அங்கு சென்றார்கள்,
தொடரும்
{kunena_discuss:958}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.