(Reading time: 18 - 35 minutes)

நான் நினைத்தது இவனுக்கு எப்படித் தெரிந்தது என்று நினைத்துக் கொண்டாள்,

'என்ன பிடிச்சிருக்கா?' என்று கேட்டான்

'ம்ம் ' என்று வெட்கப் பட்டுக் கொண்டே சொன்னாள்,

'ஹாய்... நீ வெட்கப்பட்டா இன்னும் அழகா இருக்கே, நான் என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு இருக்கேன், இப்படி வெட்கப் பட்டுக் கொண்டிருந்தால், நான் பொறுப்பல்ல,' என்று அவளைக் கொஞ்சிக் கொண்டே சொன்னான்

அவளுக்கும், அவனை விட்டுச் செல்ல மனசு இல்லை, அப்படியே இரண்டு பேரும் சிறுது நேரம் உட்கார்ந்திருந்தனர்.

“பிறகு இப்படியே ரோட்ல காருக்குள்ளே இருக்க முடியாதும்மா, போலிஸ் வந்து காரை தட்டினால் அசிங்கமாகிவிடும், அதனாலே இப்போ கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிப்போம், நாளை வீட்டுக்கு வரும் போது கண்டின்யு,பண்ணுவோம்” என்று கண்ணடித்துக் கொண்டு சொன்னான், அவளுக்கு ஒரே வெட்கமாய் இருந்தது,

'இப்படி முகம் சிவந்தால், நேரே வீட்டுக்கு தூக்கிப் போய் விடுவேன், நம்மால முடியாது, தாங்கவே முடியாது சாமி....' என்று அங்கலாய்த்தான்,’ அவள் சிரித்தாள்

ருவரும் விடை பெற்று கிளம்பினர், அவனும் வீடு வந்து சேரும் வரை அவள் நினைப்பிலேயே இருந்தான், அவனால் அவளுடைய ஸ்பரிசத்தை மறக்க முடியவில்லை தன்னை மறந்த நிலையில் இருந்தான். அவள் நாளைக்கு வருவாள், அதுவரைக் காத்திருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான், அங்கே அவன் அம்மா அவனுக்காகக் காத்திருந்தாள், அவனுக்கு கஷ்டமாக இருந்தது,

'என்னம்மா எவ்வளவு முறை சொல்லியிருக்கேன், இப்படி எனக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று, ஏன் இப்படி தூங்காம உன் உடம்பை கெடுத்துகிறாய்,' என்று கிட்டே போய், அம்மாவைக் கட்டிக் கொண்டான்,

‘நான் எப்படி தூங்க முடியும், நீ வீடு வந்துச் சேர்ந்து உன்னைப் பார்த்ததும்தான், எனக்கு தூக்கம் வரும், அந்த ரூமில் தூங்காமல் இருப்பதற்கு, இங்கே உன்னைப் பார்த்தவுடன் நான் நன்றாக தூங்குவேன்' என்று சொன்னவுடன், அவளை இழுத்து கட்டிக் கொண்டான்.

'என்னடா நல்லா தூங்குவியா, என்னுடன் ஏதாவது பேசணும் போல் இருக்கா?' என்று கேட்டாள் அம்மா….

அவன் சிரித்துக் கொண்டே ' இல்லைம்மா நீ போய்ப் படு' என்று அவளின் கன்னத்தில் தட்டி அனுப்பிவைத்தான்

தானும், தன் ரூமுக்குப் போய், குளித்து உடை மாற்றிக் கொண்டு, படுத்தான், ரொம்ப நேரம் தூங்கவில்லை, பிறகு எப்படியோ தூங்கிவிட்டான்.

காலையில் நிறைய வேலை இருந்தது தன்னுடைய ஆள்களைக் கூப்பிட்டு 'எல்லா ஏற்பாடும் செய்து விட்டீர்களா?’என்று கேட்டான்

'எல்லாம் ரெடி, நீங்கள் சொன்னதுப் போல் எல்லாம் கான்ட்ராக்டில், கொடுத்து விட்டோம்,' என்றார்கள்.

இவனும் சந்தோஷமாக, ஆபிஸ் கிளம்பிவிட்டான்

தாத்தா கேட்டார் 'என்னப்பா ஆபிசா போகிறாய், இங்கு இவ்வளவு வேலையை வைத்துக் கொண்டு' என்றார்,

'இல்லை தாத்தா, எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது, கவலைப் படாதீர்கள், மத்யானம் சாப்பிட வந்து விடுவேன்' என்றான்

அவருக்குப் பெருமையாக இருந்தது, இந்த வயதில் என்ன பொறுப்பு என் பேரனுக்கு, என்று நினைத்துக் கொண்டார்

அவன், கிளம்பி ஆபிசுக்குப் போய் விட்டான்.

அவன் ஆபிசுக்கு, பின் பக்கமாக ஒரு என்ட்ரன்ஸ், அது வழியாக உள்ளேப் போனான், அவன் வந்தது யாருக்கும் தெரியாது, அவன் GM மை மட்டும் கூப்பிட்டான், அவன் வந்ததும், ' சித்ராவுக்குத் தெரிய வேண்டாம் தான் இங்கு இருப்பது' என்றான்,

'நான் லஞ்ச்க்கு அப்புறம் அவளைக் கூட்டிக் கொண்டு போய்விடுவேன், இன்னும் ஒரு வாரத்திற்கு அப்படித்தான்,' என்றுக் கூறி, தன் வியாபார விஷயமாக கொஞ்ச நேரம் அலசினான்

பிறகு, அவனைப் போகச் சொல்லித்விட்டு, தன் வேலையைப் பார்த்தான், சில கடிதத்தை கொடுத்து அதற்கு பதிலை, அவளை விட்டு டைப் பண்ண சொன்னான் GM மூலமாக...

டைம் பார்த்தான், மணி பன்னிரெண்டரை, தன் பாக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான், போனில் GMக்கு எல்லா ஆணைகளும் கொடுத்து விட்டு பின் வழியாக சென்றான், முன் வழியாக திரும்பி தன் ஆபிசில் நுழைந்தான் அங்கிருந்த எல்லோரும் அவனுக்கு எழுந்து மரியாதை செலுத்தினர், அவனுக்கு என்னடா இது அவள் புரிந்துக் கொண்டு விடப் போகிறாளே என்றிருந்தது

அவன் போய் அவள் டேபிளின் அருகில் சென்று நின்றான், அவள் அவன் கொடுத்திருந்த கடிதத்தில் மூழ்கியிருந்தாள், சட்டென்று நிமிரவில்லை, 'என்ன மேடம் ரொம்ப பிசியா?' என்று அவன் கேட்டவுடன் அவள் நிமிர்ந்துப் பார்த்தாள்

அவனைப் பார்த்தவுடன் கண்கள் பிரகாசித்தன,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.