(Reading time: 32 - 64 minutes)

ங்கு வந்ததிலிருந்தே தன் மகளை கவனித்து கொண்டு தான் இருக்கிறாள் சுஜாதா... மதியின் வீட்டில் நெருக்கமாக பழகுவதும்... பிருத்வியோடு வெளியே செல்வதும்... முதலில் இதையெல்லாம் பார்த்த போது சந்தோஷமாக தான் இருந்தது சுஜாதாவிற்கு...

ஆனால் இப்போது சந்தோஷப் பட முடியவில்லை... அதுவும் லஷ்மி தேவாவை மணக்க யுக்தாவிடம் கேட்ட போது... அந்த நேரத்தில் யுக்தா இவளையோ மாதவனையோ பார்க்கவில்லை... ஏன் தன் தோழியிடம் கூட கேட்க நினைக்கவில்லை... பட்டென்று முடியாது என்று சொல்லிவிட்டாள்... ஒருவேளை பிருத்வியை திருமணம் செய்துக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறதோ என்று சுஜாதாவிற்கு தோன்றியது...

இவளின் விருப்பப்படி யுக்தா பிருத்வியை மணக்க நினைத்தாள் அதற்கு இவள் சந்தோஷம் பட வேண்டும்... ஆனால் அவளால் இப்போது சந்தோஷப் பட முடியவில்லை... அவளுக்கு இப்போது சில உறுத்தல்கள் இருக்கிறது...

நியூயார்க்கிலிருந்து கிளம்பும் போது மதியிடம் இவள் யுக்தா பிருத்வி திருமணத்தை பற்றி பேசினாள்... ஆனால் இங்கு வந்து இத்தனை நாள் ஆகியும் மதியோ செந்திலோ... அதைப்பற்றி இதுவரை பேசவில்லை... இவளும் தர்ஷினி திருமணம் முடிந்ததும் பேசலாம் என்றிருந்தாள்... இந்த நேரத்தில் தான் லஷ்மி நடந்து கொண்ட விதம் சுஜாதாவிற்கு வருத்தமாக இருந்தது...

இங்கு வந்ததும் மதியிடம் ஃபோன் பண்ணி இவள் வருத்தத்தை பகிர்ந்தபோது... " நீ ஏன் கவலைப்பட்ற சுஜா... யுக்தா என்னோட வீட்டுக்கு தானே மருமகளா வரப் போறா... மத்தவங்க பேசறத நினைச்சு கவலைப்படாதே... என்று ஆறுதலாக மதி பேசுவாள் என்று நினைத்தாள் சுஜாதா...

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை... இவளும் ஒருவேளை அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம் என்று இருந்துவிட்டாள்... இதில் நேற்று இரவு கோவிலுக்கு சென்ற போது வழியில் பைக்கில் பிருத்வியை ஒரு பெண்ணோடு வேறு பார்த்தாள்... அவள் தோழியாக கூட இருக்கலாம்... ஆனால் அந்த பெண் பிருத்வியிடம் காட்டிய நெருக்கம் அப்படி இவளுக்கு நினைக்க தோன்றவில்லை...

இதையெல்லாம் யோசிக்கும் போது தான்... தன் மகளுக்கு பிருத்வியை மணக்கும் எண்ணம் இருந்தாள் என்ன செய்வது என்று தோன்றியது... தன் விருப்பத்தை தன் மகள் மனதிலும் விதைத்து விட்டோமோ என்று முதன்முதலாக அந்த தாய்க்கு பயம் வந்தது...

ஆனால் சுஜாதாவிற்கு தெரியவில்லை... அவள் விதைத்த விதை காதலாக கனிந்து உருகி தோல்வியென்னும் வலியையும் வாங்கி கொண்டு வந்து இப்போது இவள் மடியில் படித்து இருக்கிறதென்று...

மறுநாளே வளர்மதியை தேடிச் சென்றாள் சுஜாதா... இந்த திருமணத்தைப் பற்றி உடனே முடிவை சொல்.. என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள்... இதற்கு மேலும் மறைக்க முடியாது என்று எல்லாவற்றையும் கூறிவிட்டாள் மதி... "உன்னோட மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் சொல்லாம மறைச்சுட்டேன் சுஜா... என்ன மன்னிச்சிடு..." என்று தன் தோழி கூறும் போது சுஜாதாவால் தன் தோழியிடம் கோபப்பட முடியவில்லை...

ஆனால் இவர்கள் செய்த தவறு யுக்தாவின் மனதில் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்களா...?? ஆனால் அவர்களுக்கு அது தெரிய வரும்போது காலம் கடந்திருக்குமே... அப்போது என்ன செய்ய போகிறார்கள்...??

பிருத்வி சப்னாவை யுக்தாவுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டான்... சிறியவர்களுக்கு அந்த எண்ணம் இல்லை... அதனால் நாமும் அதை மறந்துவிடுவோம்... என்ற மதி கொடுத்த கூடுதல் தகவல் சுஜாதாவை இன்னும் கலங்கச் செய்தது... அதனால் தான் தன் மகள் கவலையாக இருந்தாளோ... என்று அவள் மனம் நினைத்தது... அதை வெளிப்படையாகவும் கேட்கவில்லை... ஒருவேளை இவள் நினைத்தது போல் இல்லையென்றால்... தன் மகளிடம் கேட்டு அவள் தவறாக எடுத்துக் கொள்ள போகிறாள்... என்று விட்டுவிட்டாள்...

அப்படி யுக்தாவிற்கு பிருத்வியை மணக்கும் ஆசை இருந்திருந்தால் இப்போது தான் சப்னாவைப் பற்றி அவளுக்கு தெரிந்துவிட்டதே... அதை அவளே புரிந்துக் கொண்டு தன் எண்ணத்தை விட்டுவிடுவாள் என்று சுஜாதா அமைதியாகிவிட்டாள்...

கவியும் கூட இந்த விஷயம் தெரியாமலேயே சம்யு யோசித்து புரிந்து கொள்ளட்டும் என்று விலகியிருக்கிறாள்... இவர்கள் நினைப்பது போல் யுக்தாவின் புத்திக்கு நடக்கும் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது... ஆனால் அவள் மனம் சுக்குநூறாக உடைந்துவிட்டதே... இதை யார் அறிவார்...??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.