(Reading time: 16 - 31 minutes)

ஹே... மூட்டைப் பூச்சி லேப் டாப்பை கொடு”, அதிகாரமாக பேசத் துவங்கிய தன்னை.. தன் கழுத்தில் மாலையாக்கி கோர்த்து ஊஞ்சலாடியது அவள் கரங்கள்...

“அப்போ நான் என்ன செய்றதாம்...”, என்று கொஞ்சும் குரலில் கேட்டு தன் மனதையும் ஊஞ்சலாட வைத்த அஞ்சனா...

அடுத்த நாள் கிளையன்ட் மீட்டிங் இருக்கே... இவளுடன் பேச கூட நேரம் இருக்காது தவித்த மனதிற்கு... அவள் கேட்டதும்... அந்த நொடி தோன்றியது யோசனையா... ஆசையா... தெரியவில்லை. 

“என் டெமோக்கு உன்னோட வாய்ஸ் கொடுக்கிறியா மூட்டைப் பூச்சி?”, மடி சேர்ந்தவளை  அணைத்து நெற்றி முட்டி ஆசையுடன் கேட்க...

எப்பொழுதும் போலவே... அவன் சொன்ன விஷயத்தை விட்டு விட்டு, அடை மொழியைப் பிடித்துக் கொண்டு  தன் முகத்தை பின்னுக்கு இழுத்து..

“மூட்டை பூச்சியா????? காலையில் தானே லேடி பக் சொன்னே.. இப்போ  பெட் பக் கா?” என்று செல்ல சண்டையிட்ட அஞ்சனா...

“காலையில் ரெட் அன்ட் ப்ளாக்  ஆக்டிவ் வியர்லே ஆக்டிவ்வா இருந்த லேடி பக் ன்னு சொன்னேன்....  இப்போ நைட் வியர்ல பெட் டைம்ல  ஆக்டிவ்வா... இருக்கியே... அதான் பெட் பக்!!!”

என்று இவன் பார்வை அவளை ஆவலுடன் தழுவுவதை... ஆசையுடனும்  நாணத்துடனும் பார்த்திருந்த  அஞ்சனா...

அவள் எதிர்பார்ப்பை கண்டு கொண்டவனாய், “பெட் பக் இப்போ வாய்ஸ் கொடுக்க மட்டும் தான் வேணும்! மற்றதெல்லாம் வீக்கென்ட் தான்!”, என்று இவன் ஒரு வார்த்தை விட்டது தான் தாமதம்..

“வாய்ஸ் கொடுக்கிறதுன்னா அஞ்சு ஒன்னும் ஆக்டிவ்வா இல்லை, தூங்கிட்டா!”, என்று  கோபித்து கொண்டு கண்களை மூடிக் கொண்ட அஞ்சனா..

அவளை சமாதானப் படுத்த முதலில் விளையாட்டில் இறங்க எண்ணி..

“தூங்குற மூட்டை பூச்சியை விட்டுடலாம்..  தூங்குற மாதிரி நடிக்கிற மூட்டை பூச்சியை என்ன செய்ய? யூஸர் டெஸ்ட்டிங் தான் அனுப்பணும்!” , என்று சொல்லிக் கொண்டே அவளிடையில் நண்டு நடையிட்டு விரல்களால் குறுகுறுப்பு  மூட்ட..

துள்ளி எழுந்தவள்... 

“ஹே.. என்ன பண்ணுற”, என்று சிரிப்புடன் சிணுங்கலாய் அவன் கையைத் தட்டி விட..

“நண்டு ஊரும் டெஸ்ட் கேஸ்க்கே இந்த துள்ளு துள்ளுதே மூட்டை பூச்சி ”, சிரிப்புடன்... மேலும் மேலும் அவன் விரல்கள் அவளைத் துள்ள விட்டு விளையாட...

“எவ்வளோ துள்ளினாலும்.. அஞ்சு வாய்ஸ்ஸ ரெகார்ட் செய்ய மாட்டான்னா மாட்டா! சொல்லிட்டேன்! வெளியே தான் சிரிக்கிறேன்.. உள்ளே  யுயுயு........ஆங்கிரி மீ - கொதிக்கிறேன்!!!”,

என்றாள் வீராப்பாக இவன் கிச்சு கிச்சு மூட்டியத்தில் சிரிப்பும் கோபமும் கலந்த முகமாய் அஞ்சனா...

விளையாட்டை நிறுத்தி விட்டு, “என் செல்லம்ல..”, முகத்தருகே நெருங்கி வந்து கொஞ்சியதும்.. 

“குட் ட்ரை! கொஞ்சிகிட்டே இரு! அஞ்சு மெல்ட்டான ஹெல்ப் பண்ணுவா”, என்று அவன் மூச்சுக் காற்று பட்டதுமே சிலிர்த்த மேனியின் உணர்வுகளை மறைக்க முயன்ற அஞ்சனா....

“விளையாடதடா ப்ளீஸ்”, - இவன் மேலும் இறங்கி வந்து கெஞ்ச...

“அய்.. கொஞ்சுறதை.. விட கெஞ்சுறது... ஐ லைக் இட்.. இன்னும் கொஞ்சம்.. கெஞ்சு..”, என்று பாவனையாக கண்களை உருட்டி உருட்டி.. தலையை ஆட்டி ஆட்டி சொன்ன அஞ்சனா..

‘ஏற்கனவே வாயை விட்டதுக்கு தான் கெஞ்சிகிட்டு இருக்கோம்.. இந்த கெஞ்சலை குடும்ப வாட்ஸ் குருப்ல போட்டா மை மானம்.. உங்க வரி எங்க வரி இல்லாம விண்கலமே ஏறிடுமே..’, என்று எண்ணிக் கொண்டு,

“உங்க வாட்ஸ் ஆப் க்ருப்ல இதையெல்லாம் செய்தேன்னு மட்டும் சொல்லாம இருந்தேனா.. கெஞ்சுறதுக்கு என்ன... கை, கால் கூட பிடிச்சு விட நான் ரெடி தான்”,

என்று மிகத் தாழ்மையுடன் சொல்லிக் கொண்டவனின் கைகளோ அவளுக்கு பிடித்து விடும் சாக்கில் மெல்ல வருட... நெளிந்தவள்... அத்துமீறிய அவன் கைகளைத் தட்டி விட்டு...

“டீல் ஓகே! பட், கேப் கிடைச்சா பேட் டச் பண்ணுறே!  ஜஸ்ட் வாயாலே கெஞ்சினா மட்டும் போதும்!”, என்று செல்ல அதட்டல் போட்ட அஞ்சனாவை...

“வாயால தானே! பேசாமலே கெஞ்சுவேன் பாரு”,  என்று தானும் பேசாமல்... அவளையும் பேச விடாமல்.........

நினைக்கும் பொழுதே... உடலும்.. உள்ளமும் அவளுக்காக ஏங்கி இவன் இதழ்கள் தானாக முறுவலிக்க...

இப்படி நினைவுகள் முந்தைய இரவில் மூழ்கி இருந்தாலும்... அதுவரை காற்றில் கலந்திருந்த அவள் குரல் இப்பொழுது முற்றிலும் காணாமல் போக...

சட்டென்று நினைவிலிருந்து மீண்டு நிகழ் காலத்திற்கு வந்து தேடியது அவன் மனம் அவள் குரலை - அவள் குரலுடன் இணைந்த அந்த காணொளி முடிந்திருப்பது அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.