(Reading time: 6 - 11 minutes)

07. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

முதாவின் வீட்டில் இருந்து வந்த வினிதா, அவள் தங்கி இருக்கும் வீட்டையே இமைக்காமல் பார்த்தாள். சில நொடிகளின் மௌனதிற்கு பின்னே நடுஹாலில் வந்து நின்றவள்,

“உனக்கென்ன வேண்டும்? ஏன் எங்களை இப்படி படுத்தி எடுக்குற? உனக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசு.. நான் இங்கத்தான் இருப்பேன்.” என்றப்படி ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். பேய்க்கே சவால் விட்டு அதன் வருகைக்காகக் காத்திருந்தாள் வினிதா.

என்னத்தான் அவள் தைரியமாய் பேசி இருந்தாலும் அவளின் இதயம் பந்தக் குதிரையை போல வேகமாக ஓடத்தான் செய்தது.

Nizhalaai unnai thodarum

வினிதாவின் கண்கள் பேயின் வருகைக்காக எதிர்நோக்கி காத்திருந்தன. அங்கும் இங்கும் அலைப்பாய்ந்த அவளின் விழிகளுக்கு சமையலறையில் யாரோ ஒருவரின் நடமாட்டம் இருப்பது போல உணர முடிந்தது.

எழுந்து சென்று பார்க்கலாமா? வேண்டாமா? என அவளுக்குள் பட்டிமன்றம் நடந்த நேரம், அங்கிருந்து ஏதோ கீழே விழும் சத்தம் கேட்கவும் வினிதாவின் கட்டுப்பாட்டை மீறி அவளின் கால்கள் படுக்கை அறையை நோக்கி ஓடின. பயத்தில் ஓடியவளை பின்னால் இருந்து துரத்தியது அந்த பேயின் சிரிப்பொலி.

சற்றுமுன் தான் அந்த பேயை அழைத்தது அவளுக்கு மறந்தே போனது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டிய மூளையும் நிதானமில்லாமல் பதட்டத்தில் இருக்க, அவள் என்ன செய்வதென்று அறியாமல் சிரமப்பட்டாள். முகத்தில் வழிந்த வியர்வை துளிகளை கைகளால் துடைத்துவிட்டு, தண்ணீர் அருந்தினாள் வினிதா…

பாட்டிலில் இருந்த தண்ணீர் மொத்தத்தையும் குடித்து முடித்தும் அவளுக்கு நாவரண்டு போனது,, வெளியில் சென்று நீரை எடுக்க அவளுக்கு தைரியம் வராமல் போக, அவள் கட்டிலில் அமர்ந்து சுவரோரம் சாய்ந்தப்படி கால்களை கட்டி கொண்டாள்.

மூச்சு விடும் சத்தம் கூட வெளியில் கேட்க முடியாதபடி ஒடுங்கி அமர்ந்திருந்தவளிம் பார்வையை அந்த அறை கதவின் மீதே நிலைத்திருந்தது..

கதவின் அடியில் துவாரத்தில் வழி யாரோ ஒருவரின் நிழல் இங்கும் அங்கும் நடப்பதை அவளால் உணர முடிந்தது.. அது யாராக இருக்க கூடும் என்பதுவும் அவளுக்கு தெரியும். ஆனால் வெளியில்செல்லத்தான் அவளுக்கு தைரியம் இல்லை.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு அமுதாவின் நினைவு வந்தது.. ஆனால், அவளுக்கு அங்கு செல்ல விருப்பமில்லை.. காரணம் அவளுக்கு தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களுக்கான விடை தெரிந்தாக வேண்டும். ஆகையால் மீண்டும் ஹாலுக்கு செல்ல முடிவெடுத்தாள்.

அவளின் அறை கதவை திறந்து எட்டி பார்த்தாள். அவளுக்கு எதுவும் தெரியவில்லை. அங்கு இப்போது யாரும் இருப்பதாக தெரியவில்லை.. ஆனால் சற்றுமுன் அங்கு யாரோ இருந்தது அவளுக்கு தெரியும்!

அதன் வரவை நோக்கி அவள் வெளியே வந்துதான் ஆக வேண்டும். அறையை விட்டு வெளியே வந்தவள், பூனைப்பாதம் போல எட்டு வைத்து நிதானமாக நடந்தாள். சில நிமிடங்கள் அங்கும் இங்கும் நடந்தவள் சோர்ந்து போனாள்.

அசதி, சோர்வு, எல்லாம் ஒன்று சேர வினிதாவுக்கு தூக்கம் கண்ணை கட்டியது.. “நான் தூங்க போறேன்.. ரொம்ப தூக்கமா இருக்கு.. உன்னை அப்பறம் வந்து பார்க்குறேன்..” ஏதோ தன் தோழிக்கு சொல்லிவிட்டு போவது போல சென்றவளின் பின்னால் ஓர் உருவம் தொடர்வதை அவள் உணரவில்லை.

அவள் உறங்க சென்ற சில நிமிடங்கள், அதே அறையில் குறுக்கும் நடந்தது அந்த பேய்.. இதை அறியாது அயர்வினால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் வினிதா..

திடீரென அவளின் கன்னம் சுளீரென எரிந்தது. வலியில் கஷ்டப்பட்டு கண் திறந்து பார்த்தவளின் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. கன்னத்தை தேய்த்து கொண்டு மீண்டும் அவள் உறங்க முயற்சிக்க

“பளார்!!!”..மீண்டும் கன்னம் எரிய அப்போதுதான் தன்னை யாரோ அறைந்தது அவளுக்கு புரிந்தது, கண்களில் இருந்த தூக்கம் மொத்தமாய் கலைந்து இப்போது பயம் சூழ்ந்து கொண்டது..

படுக்கையை விட்டு எழாமல் விழிகளை சுழற்றினாள்.. அவள் அறையில் இருள் சூழ்ந்தது.

அந்த இருளுக்குல் தனது பார்வையை கூர்மையாக்கி பார்க்க, அவளின் கால்களுக்கு அருகில் முகமொன்று தெரிந்தது.. இரு சிவப்பு விழிகள், உதடுகளில் சின்ன புன்னகை, மொத்தமாய் எரிந்த நிலையில் இருந்த அந்த முகத்தைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் வினிதா.. அவளின் கைகள் அணிச்சையாய் எதன்மீதோ பட, அங்கு பக்கத்தில் தலை இல்லாமல் முண்டம் ஒன்று அமர்ந்திருந்தது.

வினிதாவிற்கு பயத்தில் முதுகு தண்டு சில்லிட்டது. பயத்தில் நடுக்கத்துடன் அவள் சுவரை ஒட்டி அமர்ந்து கொண்டாள்.. அவள் அருகே இருந்த தலையையும், முண்டத்தையும் மாறி மாறி பார்த்தாள் அவள்…

அதை பார்க்க பார்க்க வினிதாவிர்கு அந்த அறையை விட்டு ஓடிவிடலாம் என்ற எண்ணாம் தோன்றிட, அது இயலாத வண்ணம் அவளின் கால்கள் இரண்டும் மறுத்து போனது..

“என்ன இங்கயும் அங்கயும் மாறி மாறி பார்க்குற? “திடீரென ஒரு குரல்கேட்டது.. குரல் வந்த திசையை பார்த்தாள் வினிதா.. அவளின் கால்களுக்கு அருகில் இருந்துதான் சத்தம் வந்தது.. அவளின் பார்வையை கண்ணுற்ற பேய் “ஹா ஹா“ என்று அதிரும்படி சிரித்தது..

“என்னிடம் பேசனும்னு சொல்லி இப்போ இப்படி முழிக்கிற நீ?” கேள்வியை பெய் எழுப்ப, பதில் சொல்ல வேண்டியவள் இதழ் அசைக்க சத்தமே வரவில்லை!

இப்படி ஒரு அதிர்ச்சியைத்தான் அவள் எதிர்பார்க்கவில்லையே! இருந்தும் சமாளித்து கொண்டு

“யார் நீ? ஏன் எங்களை தொல்லை பண்ணுற? என்றாள்.. அந்த பேயின் கண்கள் அவளை கூர்மையாய் பார்த்தன.

“என்னைவிட்டு போகலாம்ன்னு நினைச்சியா? நான் உன்னை இங்க இருந்து போக விடமாட்டேன்!”

“நான் எங்க இருக்கனும்னு நீ முடிவு பண்ணாத! எனக்கு இங்க இருக்க பிடிக்கல!”

அவ்வளவு நேரம் அந்த முகத்தில் இருந்த கனிவு மறைந்து ஆக்ரோஷமானது குரலில் ஒரு கடுமை இருந்தது.

“முடியாது!!!!! நீ இந்த வீட்டை விட்டு போக முடியாது,,, நான்….நான்….உன்னை என்னுடன் அழைத்து போகிறேன்!”

பதற்றத்தில் திக்கி திக்கி பேசினாள் வினிதா.

“என்….என்ன?.......ஏன்……???முடியாது !!! உங்கூட நான் வர முடியாது !!!”

“ஹா ஹா ஹா அதை முடிவு பண்ண நீ யார்? உன் முடிவை கேட்டுக்கொள்ள நான் இங்கு வரல.உனக்கு செய்தி சொல்ல வந்தேன்.. சொல்லியாகிவிட்டது!”.

ஒவ்வொரு வார்த்தையாக சொல்லிகொண்டே அவளின் காலுக்கு அருகே இருந்த தலை கொஞ்சம் கொஞ்சமாய்ன் முன்னேறி அவளருகே வந்தது.. வினிதா பல்லியை போல் சுவரோடு ஒண்டிகொண்டாள்..

மேலும் நகர்ந்து செல்ல இடமில்லாமல் அந்த பேயின் தலையை பார்க்க, இப்போத்கு அது அந்த முண்டமான உடலின் மடியில் இருந்தது..அந்த முண்டத்தின் இரு கைகளும் அந்த பேயின் தலை மீது இருந்தது…

_தொடரும்நிழல்_

சாரி ப்ரிண்ட்ஸ் length அப்டேட் கொடுக்கநினைச்சேன்... பட் முடியலே.. நெக்ஸ்ட் அப்டேட் length-a கொடுக்கிறேன்.

Go to episode # 06

Go to episode # 08

{kunena_discuss:753}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.