(Reading time: 9 - 18 minutes)

ஹா குரங்கு டென்ஷன் ஆகிட்டானே வேற வழி இல்ல மகி சர்ரெண்டர்.. பட் கெத்து.. கெத்த விட்டுட கூடாது…

“ ஹரி விடேன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........”

“ ஹேய் என்ன சொன்ன??? “

“ வலிக்குது ஹரி, பிளீஸ் விடுங்க...........”

“ இன்னொரு முறை சொல்லுங்க.. “அவன் ராகம் பாட..

“ ஐயோ சாரி ஹரி..பிளீஸ் விடுங்க..”

“ அது....!!!!!!” . அவளை விட்டு நகர்ந்தவன், “ ஆமா இன்னைக்கு ஒரு நாலு டோன் ஏறுன போல தெரியுதே என்ன? ரொம்ப நாளுக்கு அப்புறம் குளிச்சியோ????? ”

“ ஒய் சீ..... தூ “

“ என்ன வால்யூம் கூடுது.. மறந்துட்டேன் பாரு..அத்தான் சொல்லு பாப்போம்..! “

“ ஐய்ய....... உன்னலாம் அத்தான்னு கூப்பிட முடியாது போடா கருவாயா!!! “

“ அடிங்க.. உன்ன… “ என்றவன் மீண்டும் அவள் கையை பிடிக்க, சரியாக அந்த நேரம் பார்த்து செந்தில் நாதன் அந்த பக்கம் கிராஸ் ஆக, அதை ஜன்னல் வழியாக பார்த்தவள் “சித்தப்பா................ “ என்று கத்த,

“ என்னமா அங்க சத்தம்? “ என கேட்டுக் கொண்டே அவர்  அவர்களை நோக்கி வர,

 ஐயோ இவரா, அட்வைஸ் பண்ணியே மனுஷனை சாச்சுபுடுவாறே என்று பீதியானவன் “சும்மா பேசிட்டு இருந்தோம் மாமா ” என சௌண்டுவிட்டு விட்டு பக்கத்தில் இருந்த ஸ்டோர் ரூம்மில் தஞ்சம் அடைந்தான்.

பொதுவாக தங்கள் சண்டைகளில் பஞ்சயத்திற்கு பெரியவர்களை அழைக்க கூடாது என்பது மகதியின் கொள்கை. ஆனால் இன்றைய நிலைமையில், கொள்...கையா ?? கையா ?? என்றால் கை தான் முக்கியம் என்றுப்பட்டது.

மகதியை வந்து அடைந்தவர், “ மகிமா நீ தானே  என்ன கூப்பட்ட???? “

“ ஆமா சித்தப்பா “

“ அப்பறம் எப்படி எனக்கு கிச்சா வாய்ஸ் கேட்டுச்சு? “ என யோசிக்க,

“ அந்த லூசு பக்கத்துல எங்கையாவது நின்னு பினாத்திகிட்டு இருந்து இருப்பான் சித்து” என இன்ஸ்டண்ட்டாக ஏதோ ஒன்றை அடுச்சு விட,

அவரோ “மகி எத்தன தடவ சொல்ல அவன மரியாத இல்லாம பேசாதனு!! அவன் உன்ன விட வயசுல பெரியவன். ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு டா. ஃபங்சன் நடக்குற இடத்துல ஒருத்தர் இல்லைனா இன்னொருத்தருக்கு அது தப்பா படும் டா “ என கண்டிப்புடன் ஆரம்பித்தவர், பரிவுடன் முடித்தார்.

“ நான் மத்தவங்க முன்னாடி அப்பிடி கூப்பிட மாட்டேனு உங்களுக்கு தெரியும்ல சித்தப்பா..” முகத்தை பாவமாக வைத்து அவள் .

“ தெரியும் டா, பப்ளிக் பிளேஸ்ல பாத்து பேசுனுதான் நானும் சொல்றேன் “ மேலும்  இறங்கி இருந்தார் அவர்.

“ ஓகே, இனிமேல் மாத்திக்குறேன் சித்து!! ”

“ தட்ஸ் மை கேர்ள். இங்க என்ன பண்ற? அங்க அனு உன்ன தேடுறா, வா போலாம் “ என கூறியவரின் கண்ணில் பட்டு விட்டது அந்த ஸ்டோர் ரூம்.

“ இத யாரு திறந்து வச்சது. கல்யாண வீட்டுல எதும் மிஸ் ஆகும்னு சொன்ன கேக்குறாங்களா!.. “ என புலம்பிக்கொண்டே கதவை சாத்தினார்.

“ ஐயோ சித்தப்பா................... “

“ என்ன மா ஏன் கத்துர? “

“ அது........அது......... லாக் பண்ணிட்டு வாங்க சித்து “ என்று எடுத்து கொடுக்க, அவரும் செவ்வன அதை செய்தார்.

“ டேய் ஹரி!!! நீ இன்னைக்கு காலிடா.. “ என மைண்ட் வாய்ஸ் விட்டாள் மகதி. சரி வா போலாம் என மகியை இழுத்துக்கொண்டு கிளம்பினார் செந்தில் நாதன்.

தனது செல் போனை அனு செல்ஃபி எடுக்க தாரை வார்த்திருந்தான் ஹரி. அதனால் யாரவது வரும் வரை காத்திருக்க நேர்ந்தது. ஆஃப்டர் ஃப்யூ ஹவர்ஸ் ஹரியை ஒரு சமையல்காரர் ரிலீஸ் செய்ய, இவன் கொலைவெறியுடன் காஞ்ச கருவாடாக வந்த நேரம், மகி பாயாசத்தை சுவைத்துக் கொண்டிருக்க, தலைக்கு ஏறிய கோபத்துடன் அவளை நெருங்க அவள் மிரண்டு விழிக்க..   

ப்படியாக, மூன்றாம் உலக போர்க்கான முன்னேற்பாடுகள் தொடங்க.. ஷப்பா...........!!!

சட்டென இவன் ஃபேஸ் ரியாக்சன் அண்ட் டைரக்ஷன் என எல்லாம் மாற, அதனை ஃபாலோ செய்த இவள் விழிகள் நின்ற இடத்தில் இரு இளம் பெண்கள்.

‘ எவ அவ? ‘ என்று எண்ணிய படி அவர்களையே கவனித்து  நின்றவளுக்கு கொஞ்ச நேரத்திற்குப் பிறகு தான் எதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தாள். பொண்ணு கொஞ்சம் லேட் பிக்-கப்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.