(Reading time: 9 - 18 minutes)

02. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

hey sandakkaara

ணமகள் ஷண்மதியின் என்ரிக் என ஸ்பெஷல்லாக கண்ணன் தேர்ந்தெடுத்த பாடல்களில் ஒன்றான,

           “என்னை சாய்த்தாளே.. உயிர் தேய்த்தாளே..
            
இனி வாழ்வேனோ.. இனிதாக..
            
தடுமாறாமல் தரை மோதாமல் 
            
இனி மீள்வேனோ முழுதாக.. “

ரொமான்டிகாக பேக் கிரவுண்டில் ஓடிக் கொண்டிருக்க, அந்த அழகான பாடலில் மகதியின் கீச்சுக்குரல் அடி வாங்கியதில் ஆச்சரியமில்லை.

அந்த ஒல்லிக்குச்சி உடம்புக்காரியை அசால்டாக தள்ளிக்கொண்டு பின்புறம் சென்றுவிட்டான் ஹரி கிருஷ்ணன். ஷார்டா.. ஸ்வீடா... ஹரி. மகதிக்கு மட்டும் மேலும் ஸ்பெஷலாக ஹரி, த அகோரி.

இவ்ளோ ஒல்லியா இருக்குறவளையா குண்டு போண்டானு கூப்பிட்டான் இந்த பையன்னு கன்னத்துல கை வச்சு யோசிப்பவர்களுக்கான பின் குறிப்பு. மகதி குண்டா தான் இருந்தாள். பட், இப்போ இல்ல, ஒன்ஸ் அப்பான் த டைம். அப்போ கலாய்க்க தொடங்கியவன் தான் இன்னும் நிறுத்தவே இல்லை. நம்ம ஹரிக்கு நாக்கும் ஒன்னு, சொல்லும் ஒன்னு. ஹீ.. ஹீ..

முருகன்ல ஸ்டார்ட் பண்ணி, முக்கோடி தேவர்களையும் மனசுக்குள்ளே ஹெல்ப்-க்கு கூப்பிட்ட மகதியின் வாய் மட்டும், ஒரு சின்ன ஷார்ட் கமெர்ஷியல் ப்ரேக் கூட இல்லாமல் ஹரியை வசை பாட, அவனுடனே நடந்தாள் அவள். பின்ன.. அவ காது அவன் கன்ட்ரோல்ல இருக்கே.

பின்புறமாக அமைய பெற்ற சமையலறையை நெருங்க நெருங்க பால் பாயச வாசனை மூக்கை துளைத்தது.

‘ஐய்யோ, லேட்டான ஆறி போய்டுமே.. புரிஞ்சுக்க மாட்றானே புருஷோத்தமா..’ மைண்ட் வாய்ஸில் ஃபீல் செய்தவள்,

“ டேய் விடு.  அங்க அனு எனக்காக வேயிட் பண்ணுவா. என் தங்கச்சி பாவம் டா. எனக்கு நிறைய வேலை வேற இருக்கு ” கெத்தை விடாமல் கெஞ்ச தொடங்கினாள்.

“ அஹான்..எனக்கு தெரிஞ்சு நீ கூட இருந்தா தான் அவ பாவம். மத்தப்படி என் அனு குட்டி ஜாலியா இருப்பாள். அப்புறம் என்ன சொன்ன...வேலையா?? அது என்னது மேடம்? அங்க அண்டா நிறைய இருக்குற ஐடங்களை எல்லாம் அடுத்த பந்திக்கு இல்லாம காலி ஆக்குறது தானே. அந்த அற்புதமான வேலைய நீ செய்ய வேண்டாம். உன்ன நான் விடறதா இல்லை. என் அண்ணன் கல்யாணத்துல நானும் கடமையாத்தனும்ல “

“ அய்ய... நல்லா ஆத்துறீங்க போங்க.. “ என்றவள், ‘ மைண்ட் வாய்சையும் கரக்டா கேட்ச் பிடிக்குது பாரு மங்கி ’ மனதில் அவனை மெச்சினாள்(?).

இந்த இடத்துல, இவங்களை பற்றின இன்ரோ கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு. ( இவ்ளோ நேரம் இது உங்களுக்கு தெரியவே இல்லையானு எல்லாம் கேட்க படாது ;-) ) லெட்ஸ் ஸீ தெயர் ப்ரீஃப் ஹிஸ்டரி.

தனலட்சுமி வீரபாண்டியனின் தம்பதியரின் முதல் மகள் மகேஸ்வரி, இரண்டாவது மகன் சங்கரன், முன்றாவது மகன் செந்தில் நாதன். இவர்களில் மகேஸ்வரிக்கு திருமணம் முடித்த சில வருடங்களுக்கு பிறகு சங்கரன் திருமணம், அதன் பிறகு செந்தில்.

மகேஸ்வரி - ராஜேந்திரன் தம்பதியரின் மகன்கள் கோகுல கண்ணன் மற்றும் ஹரி கிருஷ்ணன். கண்ணன் 27 வயது இளைஞன், MBA பட்டதாரி. படிப்பை முடித்துவிட்டு அவர்களின் சொந்த ஊரான கோவையிலே அப்பாவின் டெக்ஸ்டைல் பிசினஸ்ஸில் அவருக்கு உறுதுணையாக இருக்கிறான் கண்ணன். நாளை அவன் திருமணம், ஷண்மதியோடு. அவள் வயது 22, BE கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருகிறாள். தங்க தம்பி ஹரியின் வயது 21. பைனல் இயர் BE டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறான். ஒரு குடும்பத்துல ஒருத்தன் மட்டும் நல்ல படிச்சு மத்த பசங்க உயிரை எல்லாம் எடுப்பனே, நம்ம  கதைல இந்த கேரக்டர் சாட்ஷாத் ஹரி தான். பயங்கர படிப்ஸ்.

சங்கரன், செந்தில் நாதன் அவர்களின் பரம்பரை தொழிலான நகை கடை மற்றும் கார்மெண்ட்ஸ் பிசினஸ்ஸில் திருச்சியிலேயே கொடிகட்டி விளங்கும் தொழிலதிபர்கள்.

சங்கரன் - பார்வதியின் மகள் மகதி. இரண்டு போரிங் ஆண் பிள்ளைகளை மேய்த்த மகேஷ் அத்தைக்கு மகதி செல்லமாகி போனதில் ஆச்சரியமில்லை. பதினோராம் வகுப்பு படிக்கும் மகதி, படிப்பில் கெட்டி..அப்படினு அவ காசு குடுத்து சொல்ல சொன்னாலும் சொல்ல மாட்டோம். ஆனாலும் தத்தியும் இல்ல. தட்டு தடுமாறி, எம்பி குதிச்சு எப்டியாவது பிள்ள கரை சேர்ந்துடும்.

செந்தில் நாதன் - விஜயலட்சுமி தம்பதியரின் மகள் அனன்யா, த கடைக்குட்டி அண்ட் தி  செல்லம் ஒப் ஹரி. மேடம் படிப்பு 9th. ......ஸ்டாண்டர்ட்.

அவ்ளோ தானுங்க அவங்க வரலாறு. இப்போ வாங்க, பேக் டூ  ஸீன்.

“ எத்தன தடவ சொல்லறது எல்லார் முன்னாடியும் கருவாயனு கூப்பிடாதேனு!!! இன்னைக்கு உன் காத கையோட கலட்டி குடுத்தா தான் நீ சரிபட்டு வருவ......” என அவளை அடுப்படி பின்பக்க சுவரில் சாய்த்து அவளின் இரு கைகளையும் தன் ஒரு கையால் பிடித்தபடி அவளின் காதை கலட்டும் வேலையை  கன்டினியூ செய்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.