(Reading time: 9 - 18 minutes)

ந்த பெண்களைக் கண்டவுடன் ஹரி மகதியை விட்டு டூ ஸ்டெப்ஸ் ஜகா வாங்கியிருந்தான். லைட்டாக மடித்திருந்த சட்டை கையை சரி செய்தான். தலையை கோதிவிட்டுக் கொண்டான். ‘என்னாச்சு?????‘ இந்த அந்நியன் டூ அம்பி சேஞ்ச் ஓவரை பேக்க பேக்க வென பார்த்தபடி நின்றாள் அவள்.

அதற்குள் அவர்களை நெருங்கி வந்திருந்த பெண்களில் ஒருவள்,

“ ஹாய் க்ரிஷ் !! என்ன கல்யாண வேலைல பிசியோ? எங்க பசங்க யாரையும் காணோம்? எல்லாரும் உங்கள தனியா வேல பாக்க விட்டுடாங்களா???  “

“ ஹல்லோ நிஷா. அப்படி எல்லாம் இல்ல. காலைல கோவிலுக்கு போய் ஒரு சின்ன பூஜை. அதான் இன்னைக்கு கிலாஸ்-க்கு வரல. மத்தபடி ரெண்டு நாள் லீவ் சொல்லிடேன். வீட்ல மொத்த குடும்பமும் இருக்கும். ஜாலியான செலிபிரேஷன். மிஸ் பண்ண முடியதில்ல.பசங்க ரொம்ப ஹெல்ப்ஃபுல். பாதிபேர் மாடில இருக்காங்க. மீதிபேர் வெளில கொஞ்சம் வேலையா போய் இருக்காங்க  “

“ ஓ..ஓகே ஓகே ஃபேமிலி ஃபங்சன்ன மிஸ் பண்ண முடியதில்ல. ரொம்பவும் கரக்ட். நீ மிஸ் பண்ற கிலாஸ்கான எல்லா நோட்ஸும் நான் தரேன். பொறுமையா காப்பி பண்ணிட்டு தந்தால் போதும் “ இது மற்றவள்.

“ ரொம்ப தேங்க்ஸ் வர்ஷா. நெக்ஸ்ட் வீக் வாங்கிகுறேன் “ ஒரு புன்னகையுடன் பதில் அளித்தான்.

‘ கொஞ்ச நேரம் முன்னாடி மாரி தனுஷ் போல ரப்ஸல் செய்தவன், இப்போ உத்தம புத்திரன் தனுஷ் போல பெர்பாமன்ஸ் கொடுக்குறானே. வந்தது, உன் கூட படிக்குற பொண்ணுங்கனா இப்டியா கூடை கூடையா நடிப்ப!!!! எப்டி எப்டி.. டூ ஸ்டெப்ஸ் பேக்-ஆ.. இருடி வரேன். என் பெர்பாமன்ஸை நீ பார்க்க வேணாம்? இக்கட சூடு பேபி..’

கொஞ்சம் நெளிந்தபடி நகர்ந்து ஹரியை ஒட்டி நின்றாள். வெட்கப்படுறாளாமா... ஷப்பாபா..!!!

அவன் ஜெர்க்காகி அவளை லுக் விட, ‘மவனே என் காதையா திருவுற!!’ என்று எண்ணிய படி அவன் இடக்கையை இழுத்துக்கொண்டாள். பின், ப்ளாக் அண்ட் வொயிட் பட ஹீரோயினைப் போல,

“ அத்தான்... இவங்க ரெண்டு பேரும் உங்க கூட படிக்குறவங்களா? “ என்றாள். ‘அடியேய், இது உனக்கு இவ்ளோ நேரம் தெரியல.. அதை நான் நம்பனும்!!’ உள்ளுக்குள் கர்ஜித்தவன் வெளியே, “ஹம்ம்ம்” என்றான்.

பிடித்திருப்பது போல் பாவலா காட்டி, அவன் கையை தன் நகத்தால் அவள் பஞ்சர்  செய்ய.. இயல்பாக எடுப்பது போல் அவனும் கைகை இழுத்துக்கொண்டிருந்தான்.

அவர்களை நோக்கி திரும்பியவள், “ ஹாய்!! நான் மகதி. இவரோட முறைறைறை பொண்ணு “

“ அது.. மாமா பொ....”

“அட சும்மா இருங்க அத்தான். நீங்க சொல்லுங்க, சாப்டிங்களா? “

அவர்கள் மறுப்பாக தலையசைத்து, “ இனிமே தான் “ என,

“ அட என்னங்க நீங்க. என் அத்த்த்தான் ப்ரெண்ட்ஸ், சாப்டாம இருந்தா எப்படி? வாங்க என் கூட.  அத்தான், அத்தை உங்கள தேட போறாங்க. எங்கயாவது போறதாய் இருந்தால் அத்தான், எனக்கு மேசேஜ் பண்ணுங்க அத்தான். நானே சொல்லிடுறேன் அத்தான். டா டா!! “ என்று இளித்தாள்.

‘எத்தன.......’ அவன் முறைக்க, ‘நீ தான வேணும் வேணும்னு கேட்ட, இந்த வச்சுக்க!!’ என்பது போல் கண்ணடித்தாள்.

அவர்களுடன் நடக்க தொடங்கியவள் மெல்ல திரும்பி அவனைப் பார்க்க, அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

தலையை நக்கலாக ஆட்டி அவள் வெறுப்பேற்ற வெறியானவன் பக்கத்தில் இருந்த ஸ்டூலை தூக்கி எறிவதைப் போல் ஜாடை காண்பித்தான். நாக்கை வெளியே நீட்டி காட்டிவிட்டு ஜூட் விட்டாள் மகதி.

அவள் சென்ற பின்பு அவளின் செய்கையை நினைத்து தலையில் அடித்துக் கொண்டவன், அவர்களின் சண்டைகளை எண்ணி பிரமிக்க தான் செய்தான்.   

ஏன் என்று தெரியாமல் எதற்கு என்று புரியாமல் இவர்கள் போடும் ஒவ்வொரு சண்டைக்கு பின்னால் இருக்கும் அந்த உறவு, இவர்களே  அறியாமல் இவர்களை செலுத்திக்கொண்டு தான் இருக்கிறது. அதனை புரிந்தும் புரியாமல் இருப்பது தான் யார் தவறு??? இவளா ??? இவனா???

Love is like a war

Easy to start

Difficult to finish

Impossible to forgot

சண்டைகள் தொடரும்

Episode 01

Episode 03

{kunena_discuss:954}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.