(Reading time: 15 - 29 minutes)

ல்ல மனு நான் உனக்காக மட்டும் தான் பார்க்கேன்…. இன்பா பாட்டி அங்க இருக்கும்…..அது பார்வைக்குள்ள கூட நீ போறதுல எனக்கு இஷ்டம் இல்ல…… .உன்னைலாம் அது எதாவது சொல்லிட்டுன்னா அதெல்லாம் பார்த்துகிட்டு இருக்க எனக்கு முடியாது…..” அவன் தவிப்பு இவளுக்கு புரிகிறதுதான். இவளுக்காக பார்க்கிறானே…அது இனிக்கவும் செய்கிறது தான்…..

ஆனால் அதற்காகவெல்லாம் இதை அவளால் ஒத்துக் கொள்ள முடியாது.

“அதெல்லாம் சரி…..ஆனா அங்கதான் உங்க அக்காவும் இருக்காங்க…..மத்த எல்லோரையும் பார்த்து பயந்து நாம அண்ணிய எப்டி ஒதுக்கி வைக்க? அப்ப அவங்களுக்கு யார் இருப்பா?.....அதுல அன்னைக்கு பண கஷ்டம்னு வேற சொன்னாங்க…..பெரியத்தானும் இன்னும் வரலை…… ஆக அண்ணி சிச்சுவேஷன் எப்டி இருக்கோ….”

இன்பாவுக்காக இவளிடம் நிச்சயம் கன்சர்ன் இருக்கிறது….மித்ரன் சொன்ன வரை அப்படிப் பட்ட குடும்பத்தில் மாட்டிக் கொண்ட இன்னொரு பரிதாபத்துக்குரிய ஜீவன் இந்த இன்பா என்பது இவளது எண்ணம்…..

இன்பா பத்திய இவள் கேள்வியில் புன்னகை வந்துவிட்டது கேட்டிருந்தவன் முகத்தில்….

“இன்பாவை நாம வெளிய வச்சு மீட் பண்ணிக்கலாம் மனு…..நைட் ஸ்விஸ் கிளம்புறோமே…அப்ப அவள ஏர்போர்ட் வர சொல்லுவோம்….அவ கூட எங்கயாவது டின்னர் முடிச்சுட்டு..தென் கிளம்பலாம்….கட்டாயபடுத்தியாவது அவளுக்கு பணம் கொடுத்துடுறேன் ஓகேவா?” அந்த புன்னகையோடே கேட்டான் அவன்.

ஆனால் பாறை போன்ற முக பாவத்துடன் மறுத்தாள் மனைவி.

“இல்ல நான் ஸ்விஸ் வரலை.....எனக்கு புரிஞ்ச வரை ஏதோ கேஸ்காதான அங்க போறீங்க…முன்னால என் சேஃப்டிக்காக நானும் கூட வரனும்னு நினச்சீங்க…..இப்ப என்ன …? அதான் அந்த மாசிரனை அரெஸ்ட் செய்துடீங்களே…… நான் இங்கயே இருக்கேன்….அகி மேரேஜ் வேற பக்கத்துல இருக்கு…..அந்த அரேஞ்ச்மென்ட்ஸ்லயாவது நான் இருக்கனும்னு எனக்கு தோணுது…..அடுத்து அவன் வேற அப்ராட் போறான்….அதுவரைக்குமாவது நான் அவன் கூட இருக்கப் போறேன்….. அதுக்கு முன்ன ஒரு டைம்மாவது உங்க வீட்டுக்கு ரெண்டு பேருமா போய்ட்டு வந்துடனும்…… அதனால இன்னைக்கு போகனும்னு  நினைக்கிறேன் நான்… “

 மித்ரன் தன் திட்டத்தை அகதனிடம் சொல்லிவிட்டு இவளிடம் சொல்லாமல் போனதற்கு  என்னதான் காரணம் சரியாக தோன்றினாலும் ஏனோ என்னால் ஏற்கமுடியவில்லை என்ற உணர்வு இவளுக்கு இருக்கிறது அல்லவா அதில் இருந்து பிறந்ததுதான் இந்த முடிவு. எத்தனை தான் மித்ரன் மீது காதல் இருந்தாலும் இந்த உணர்வு அவனது ஒவ்வொரு முடிவுகளையும் மறுக்கத்தான் சொல்கிறது அவளை….

‘ஸ்விஸ் போகும் முடிவு அவனது முந்தைய திட்டத்தின் பகுதிதானே….இவட்ட கேட்டா அவன் முடிவு செய்தான்?.....எப்படியும் இப்ப கல்ப்ரிட்டை பிடிச்சாச்சு…..இப்ப எதுக்காம் இவ?....

இவளையே பார்வை மாறாமல் பார்த்திருந்தான் கணவன். அவள் உணர்வுகள் அவனுக்குப் புரியாமலில்லை…. அவளை கட்டாயப் படுத்தவும் இஷ்டமில்லை….காயம் பட்டிருக்கிறாள்….கவனமாகத்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்…..ஆக அவள் விருப்பத்திற்கு விட்டுக் கொடுத்தான்.

“சரி மனு நீ வர வேண்டாம்…..உன்னைப் பார்க்காம ஒவ்வொரு நாளும் எனக்கு ரொம்பவே கஷ்டமாத்தான் இருக்கும்……பட் பரவாயில்ல…. நீ சொன்ன மாதிரி அகதன் மேரேஜ் வேற பக்கதுல இருக்கு…….நானும் கேஸ் விஷயமாத்தான் போறேன்…. பைதவே லன்ச்சுக்கு இன்பாவ பார்க்க போகலாம்….கிளம்பு……” அவன் எழுந்து போக……மனோவுக்கு இதுவும் ஒன்றும் மனதுக்கு சந்தோஷமாக இல்லை…. இவனை அனுப்பிவிட்டு இவள் மட்டும் சந்தோஷமாகவா இருக்கப் போகிறாள்?

போய் அதே நினைவாக கிளம்ப ஆரம்பித்தாள். ‘எந்த ட்ரெஸ் போட?’ வயசானவங்கல்லாம் இருக்க வீட்டுக்கு கல்யாணத்துக்குப் பிறகு முதல் தடவை தம்பதியா போறாங்க இவங்க….ஆக புடவை உடுத்துவது என்ற ஒரு முடிவுக்கு வந்தவள்…..

அதான் அம்மா நித்து எல்லோரும் சொல்லிக் கொடுத்தாங்களே அத வச்சு சமாளிச்சுகலாம்….

 க்ரீம் மற்றும் லெமன் எல்லோ காம்பினேஷனில் ஒரு சாரி…. அந்த ரூமில் தான் அத்தனை  சுவர் உயர கண்ணாடி பார்த்திருந்ததால் அதன் முன் நின்று தான் கட்டி இருக்கும் விதத்தை ஆராய்ந்தாள்…..முன்னால்…. பின்னால்….சைடில்….

சுற்றி இருக்கிறாள் என சொல்வதை தாண்டி கட்டி இருக்கிறாள் என ஒத்துக் கொள்ளும் படியாக இருக்கிறது தான்…ஸ்டில்……

அழகாய் இருப்பது போல்தான் தோன்றுகிறது….ஸ்டில்….

கொசுவம் ஒழுங்காக வரவில்லை…ஏற்ற இறக்கமாய் இருக்கிறது…… அதை சரி செய்தால் இன்னும் பெட்டரா இருக்குமோ… இவள் அதன் பின்னை கழற்ற….முன்னிருந்த கண்ணாடியைத் திறந்து கொண்டு…..ஐயோ அது கதவு…. வெளியே வந்தான் மித்ரன்…

அந்த ரூமோட அட்டாச் பாத் போல அது……குளித்து விட்டு வெற்று மார்பும்……ஈர தலையுமாய் வெளி வந்திருந்தான் அவன்…..இவள் இருப்பதை அவனும் எதிர்பார்க்கவில்லை என தெரிகிறது அவன் பார்வையிலேயே…..

சின்ன அதிர்ச்சியும் அதன் பின் தொடந்து அவன் முகத்தில் உதித்த குறும்பும் அதைத்தான் சொல்கின்றன….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.