(Reading time: 15 - 29 minutes)

ரு நொடி அதிர்ந்த இவளும் அடுத்த நொடி அங்கிருந்து விலகி ஓட எத்தனிக்க….. பின் கழற்றி இருந்ததால் கலைந்து தரையில் விழுந்திருந்த கொசுவம்…..இவள் கால் சிக்கி இவளை தரைக்கு தள்ள…..சட்டென எக்கிப் பிடித்தவன் அவள் விழுந்துவிடக் கூடாதென இழுத்த வேகத்தில்….அவன் வெற்று மார்பில் வந்து விழுந்தாள் அவள்…. அவளை இடையோடு ஒற்றைக்கையால் வளைத்திருந்தான் அவன்…

மனோவுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை….. நிச்சயமாக வெறுப்பாக எதுவும் இல்லை…. உள்ளுக்குள் ஏதோ பட படத்துக் கொள்ள…. ஆனால் ஏன் இத்தனையாய் நடுங்குகிறது உடல்?......

மெல்ல கண்களை உயர்த்தி அவன் முகம் பார்த்தாள்…… நேர்ப் பார்வையால் அவளை சந்தித்தவன்…..அவள் நின்று விட்டாள் எனவும் அவளைவிட்டு விலகிக் கொண்டான் …. புடவையை அள்ளாத குறையாக அள்ளிக் கொண்டு அடுத்த அறைக்கு வந்து சேர்ந்தாள் இவள்…..

அடுத்து அவள் அவனைப் பார்க்கும் போது அவன் முழுவதும் தயாராகி அவள் எப்போதும் காணும் மிஸ்டர் பெர்ஃபெக்ட் அப்பியரன்ஸிற்கு வந்திருந்தான்….. இவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்….. எதோ சொல்ல வந்து பின் அதை சொல்லாமல் விட்டான்.

பின் தனக்கென பேக் செய்திருந்த லக்கேஜை கையில் எடுத்துக் கொண்டு

“கிளம்பலாமா மனு?” என்றான் இவளை நோக்கி. இப்ப அவன் கூட கிளம்பி வெளியே போனால் இனி நைட் ஏர்போர்ட்டில் அவனை வழி அனுப்பிவிட்டு தான் வீடு வருவாள் இவள்….அடுத்து அவனை எப்போது பார்க்கப் போகிறாளாம்?....மனம் தவிக்கிறதுதான்….

வேகமாய் போய் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவன் சாதாரணமாக இருப்பது போல்தான் தெரிகிறது….ஆனால் வழக்கமாய் அவனிடம் அவள் அனுபவிக்கும் அந்த துள்ளல் குறும்பு  எதுவும் அவனிடம் இல்லையோ?

“மித்ரன் நமக்கு நடந்தது நிஜ மேரேஜ்….” இவள் சொல்ல இப்பொழுது அவன் கண்ணில் ஓர் மின்னல்.

“நான் உங்களை எந்த கம்பல்ஷனுக்காகவும் மேரேஜ் பண்ணலையே…பிரச்சனைலாம் முடிஞ்ச பிறகு…என் இஷ்டம் கேட்டு… நான் சரின்னு சொன்ன பிறகு தானே நடந்துது நம்ம மேரேஜ்….” அவன் உள்ளுக்குள் மலர்வது இவளுக்குத் தெரிகிறது தானே….

“நான் ஸ்பேஸ் கேட்டது நம்ம மேரேஜ் லைஃப்ல இல்ல….ஒரு உறுத்தல் இருக்குன்னு சொன்னேனில்லையா அந்த விஷயத்துல மட்டும்……..அதுல கொஞ்சம் என் இஷ்டத்துக்கு விட்றுங்க…கன்வின்ஸ் செய்ய ட்ரைப் பண்ணாதீங்க…..மத்தபடி நமக்குள்ள எதுவும் மாறிடல…”

“தேங்க்ஸ் மனு….” இப்பொழுது இவள் கையை இதமாய் அவனும் பற்றிக் கொண்டான்….

“சேரி அழகா கட்டி இருக்க மனு” என்றபடி இவளுடன் நடக்க தொடங்கினான்….

“ஆனாலும் நான் இத சொல்லனும்ன்றதுக்காக ஐ லவ் யூவ தவிர அத்தனையும் சொல்லியாச்சி நீ…” அவன் தான்.

நின்று முறைத்தாள் பெண்.

“ஐயோ பாவம் பையன் அழுதுகிட்டே ஃபாரின் கிளம்புறானேனு பார்த்தேன்ல அது என் தப்புதான்…”

“பையனா?” ஒரு கணம் நின்று அவளைப் பார்த்தவன் வாய்விட்டு சிரித்தான்…

பின் “அப்டி பாவம் பார்க்றவங்க கூட வந்தா என்னவாம்? இன்னும் கூட டிக்கெட் கேன்சல் பண்ணல…” சொல்லியபடி அவர்கள் கார் கதவை அவளுக்காக திறந்து வைத்தான்…

“இது ஒரு விஷயத்துல எனக்கு ஸ்பேஸ் கொடுங்கன்னு கேட்டேன்  மித்ரன்…” சிறு கெஞ்சல் கலந்து தான் சொன்னாள் இவளும்…. கிளம்புற நேரத்துல அவன மூட் அவ்ட் ஆக்கி அனுப்ப எதுவும் எண்ணமில்லை….

அதோட அவன் போறது இன்வெஷ்டிகேஷன்க்கு….எந்த நேரமும் அலர்ட்டா இருக்க வேண்டிய வேலை…..இவள நினைச்சு அவன் டென்ஷன்ல இருக்க கூடாது….

ஆக இவர்கள் அவனது அம்மா வீட்டை அடையும் போது ஒருவித இலகு மனநிலையே இருவரிடமும் இருந்தது.

னால் அந்த மெகாசைஸ் காம்பவ்ண்ட் தாண்டி அவர்கள் கார் உள்ளே நுழைய தொடங்கவும்…. அத்தனை பெரிய கேம்பஃஸைப் பார்க்கவும்… அவளுக்குள் ஏதோ ஒரு வகையில் அழுத்தத்தை உணர்ந்தாள்.

அவன் முகம் பார்த்தால் அவனும் அவ்வளவு இயல்பாய் இல்லை….

‘ஓ அவன் அப்பா இறந்த பிறகு இப்பதான் வர்றான்…..ஜஸ்ட் இவ பிடிவாதத்துக்காக வர்றான்…..ரொம்ப படுத்றனோ அவன?’ இதற்குள் இவள் கையைப் பிடித்திருந்தான் அவன். இவள் அழுத்தம் உணர்ந்தா? எது எப்படியோ அவன் பிடியில் இருப்பதில் ஒரு வகையில் சற்று இயல்பாய் இருக்க முடிகிறது தான் இவளுக்கு.

அங்கு தெரிந்த கட்டிடங்களில் பார்வையை ஓட்டினாள்…… பல பல ஏக்கர் காலி நிலத்திற்கு மத்தியில் ஒரே மாடலில் எட்டு கட்டிடங்கள் அங்கு தெரிந்தன…..

அதில் ஒன்றின் வாசலில் போய் காரை நிறுத்தினான் மித்ரன். ஏற்கனவே அங்கு காத்து நின்றாள் இன்பா.

அவள் மட்டுமாய் தான் என்றாலும் சந்தோஷமாய் வரவேற்று சற்று நேரம் இவர்களுடன் மகிழ்வாய் பேசி என்றான பின்….. இவர்களை உணவு மேஜைக்கு அழைத்து சென்ற நேரம் அங்கு வந்தார் மித்ரனின் அம்மா.

Page 4

“வாம்மா….நீ இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் “ எனத் தொடங்கி இவளிடம் சற்று இயல்பாய் பேசினாலும் மித்ரனை நேருக்கு நேராக பார்க்கவோ ஒரு வார்த்தை பேசவோ கூட அவர் முனையவில்லை…

அவனும் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை….இன்பாவிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தான் அவன்.

இவளுக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது. ஏதோ ஒரு பிடிவாதத்தில் அவனை இங்கு கூட்டி வந்தாயிற்று….அவனை நோக வச்சு தான் ஊருக்கு அனுப்புவாங்களோ…..அப்டி மட்டும் எதாவது ஆச்சுன்னா….இவ அவன் கூட கிளம்பி போய்ட வேண்டியது தான்…… இப்படியாய் ஓடத் தொடங்குகிறது இவள் மனது…

இப்பொழுது இவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். முதல் முறை ஏதோ ஏதேச்சையாகத்தான் மித்ரன் சாப்பாட்டின் மீது கண் போனது மனோவுக்கு….ஆனால் அடுத்து அவள் கவனத்தை அதைவிட்டு அவ்வளவு எளிதாக எடுக்க முடியவில்லை அவளால்…

அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் தான்…..ஆனால் பேருக்கு….. இவளுக்கு மனம் அடைத்துப் போனது…..சே…ஏதோ ஒரு வேகத்தில அவனை வலுகட்டாயமா இங்க கூட்டுட்டு வந்து கடைசில அவன சாப்ட கூட விடாம செய்துட்டனே….. தவிப்பாய் இருக்கிறது இவளுக்கு…..

அப்போது தான் அவள் அதை கவனித்தாள்…… மித்ரனின் அம்மா யாரும் கவனிக்கா வண்ணம் மித்ரனை அவ்வப்போது பார்த்தார்…..அவரும் சப்பாட்டை அளைந்து கொண்டு தான் இருந்தார்…சாப்பிடவில்லை….அப்டின்னா? யோசித்தாள் மனோகரி.

அதே நேரம் அங்கு வந்தார் ஒரு முதியவர்…. ஒல்லி தேகம்….ஒடுங்கிய ஓவல் சைஸ் முகம்….வட்ட கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி…. வெண்ணிற புடவை….

பார்த்தால் மரியாதை வரும் உருவம் தான்…..

ஆனால் வந்ததும் வராததுமாக மரியாதைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்ற விதமாக “நாய்கள கூப்டு நடுவீட்ல வச்சு சோறு போட்டவன்லாம் நாசமாத்தான் போவானாம்….” என ஆரம்பித்தவர்

“யார் வீட்டு காசுல யார்குடா பங்கு…..? பங்கு இருக்குன்னு சொல்லிட்டு சாப்ட வந்துட்டியோ…? சரியான திருடன் நீ….. கண்டிப்பா  நல்லாவே இருக்க மாட்ட….” சொத்தில் மித்ரனுக்கும் பங்கு இருக்கிறதாம் என அவருக்கு இப்போது தான் தெரிய வந்திருக்க கொதிநிலையில் இருந்த அவர் இன்னும் என்னவெல்லாம் மித்ரனைப் பார்த்து கத்தி இருப்பாரோ…..

“அத்த அவன இன்னைக்கு எதுவும் சொல்லாதீங்க….” என்ற களஞ்சியத்தின் அழுத்தமான வார்த்தையில் தான் அவர் ஒரு கணம் நிறுத்தினார்….

“இன்பா பாட்டிய கூப்டுட்டு போய் அவங்க ரூம்ல விடு….” இதுவும் மித்ரனின் அம்மா களஞ்சியம் சொன்னதுதான்.

அவ்வளவுதான் உறைந்து போய்விட்டார் அந்த பாட்டி….பின்பு இத்தனை ஆண்டு காலம் ஒரு வார்த்தை எதிர்வார்த்தை பேசாத களஞ்சியம் இப்படி பேசுவது என்றால்…..?ஆனால் எல்லாம் சில நொடிகள்தான். இதற்குள் எழுந்து அவர் கையைப் பற்றி அழைத்தாள் இன்பா….

“விடு அறிவுகெட்டவளே….”இப்போது இன்பா மீது சீறி விழுந்தார் அவளது பாட்டி.

“இந்த மண்புழு கூட என்னை எதுத்துப் பேசுற அளவுக்கு வந்துட்டு என்ன….? அந்த பிச்சக்காரிதான் பேசுறான்னா….நீயும் அவ கூட சேர்ந்துகிட்டு ஆடுற….” என தொடர்ந்து பொரிந்தார்.

அதே நேரம் மனோவுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது…..மித்ரன் அம்மாவிற்கு நிச்சயம் மித்ரன் மீது பாசம் இருக்கிறது தான்…..

அதோடு ‘என் அம்மா மர்டர் செய்ய ஒத்துக்க மாட்டாங்க….அதான் வேற கல்ப்ரிட் இருப்பான்னு யோசிச்சேன்…..’ மித்ரன் சொன்னான் தானே…..அது ஞாபகம் வருகிறது இவளுக்கு….. பார்த்து பழகி இராத அம்மா மீது என்ன ஒரு நம்பிக்கை…..…வெளிப்படையாக சொல்லவில்லை எனினும் அவன் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் அம்மாவிற்காக ஏங்குகிறான்….

அம்மாவும் பையனும் சேருவாங்களோ மாட்டாங்களோ ஆனா கண்டிப்பா  அவங்க ரெண்டு பேரையும்  மனம் விட்டு பேச வச்சாகனும் என தோன்றுகிறது இவளுக்கு….

ஆனா அதுக்கு முன்னால கவனிக்கபட வேண்டிய முக்கிய நபர் இந்த பாட்டி…..

“ஏய் யார் நீ….உன்ன இங்க யார் வரச்சொன்னது….ஒழுங்கா வெளியப் போ…..அவனே இங்க அதிகப்படி….அதுல அவன் கூப்டான்னு  கூட வந்துறுக்க….” இப்போது மனோவிடமாக கத்தினார் அந்த பாட்டி.

அதுவரை யாரோ யாரையோ சொல்றாங்க என்ற வகையிலெல்லாம் மித்ரன் இல்லைதான்….ஆனால் இதில் அவன் என்னத்தை செய்து வைப்பானோ என இவள் பதறும் வண்ணம்…நெற்றி  நரம்பு புடைக்க எழப்போனவனை….

டேபிளுக்கு கீழாக இருந்த அவன் கை பற்றி அசையாதே என விழியால் அவனிடம் கெஞ்சிய மனோ இருந்த இடத்திலிருந்து சற்றும் அசையக் கூட செய்யாமல்….எந்த வித முக மாற்றமோ…..அதிகப்படியான உணர்வு வெளிப்பாடோ இன்றி….

“நான் மிஸர்ஸ் மனோகரி மித்ரன்…. நேஷன் க்ரூப்ஸோட மருமகள்…..இது என் வீடு…..ஆனா நீங்க யாரு பாட்டி சம்பந்தமில்லாம இங்க….” என்றபடி தன் உணவை தொடர்ந்தாள்.

அவ்வளவுதான் ஏய் !!! என ஆரம்பித்த பாட்டி ஆனால் அடுத்து என்ன சொல்லவென தெரியாமல் நின்று போனார்…

“வயசானவங்க நீங்க…….உங்களுக்கே முறை தெரிஞ்சிருக்கும்….நீங்க இங்க கெஸ்ட்…..அந்த எல்லைக்குள்ள நடந்துக்கோங்க நல்லா இருக்கும்…..” அவருக்கு சொல்ல வேண்டியதை சொல்லி முடித்துவிட்டது போல் இப்போது இன்பாவை நோக்கி

“நான் பயோசி சி ஈ ஓ வா ஜாய்ன் செய்யலாம்னு நினைக்கேன் இன்பா…..” என்றாள் வெகு இயல்பாக…..

அதுதான் தொடக்கம் அதன் பின் நடந்தைவைகளுக்கு….. 

Episode # 16

Episode # 18

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.