(Reading time: 18 - 35 minutes)

18. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

னோ அந்த கேள்வியை கேட்ட போது நிச்சயமாய் அவளுக்கு சி இ ஓ ஆகும் எண்ணமெல்லாம் எதுவுமே கிடையாது….. அவள் இப்போதுதான் நிறுவனத்திற்குள் நுழைந்திருக்கிறாள்….. அந்த பதவியின் மொத்த வேலை என்ன என்பதில் கூட தனக்கு முழு புரிதல் உண்டு என அவளுக்கு நம்பிக்கை கிடையாது…. இதில் அந்த பதவி ஆசை அவள் கனவில் கூட எங்கு வர? .

ஆனால் அவள் இப்போது இங்கு அதை குறிப்பிட காரணம் ஜஸ்ட் ஒரு இன்ஸ்டென்ட் தாட்…. இது மித்ரனோட குடும்பம்…. இந்த .குடும்பத்தோட எந்த பெரிய விஷயத்தை பத்தியும் நாங்க பேசிப்போம்…..அதுக்கு மித்ரனுக்கு உறவும் இருக்குது உரிமையும் இருக்குது என பாட்டிக்கு காண்பிக்கும் எண்ணம் அவ்வளவே…..

மத்தபடி இன்பா இப்ப இருக்கிற மனநிலையில்…..மித்ரன் தன் அம்மாவை இழந்தது தங்களாலதான்னும்….அவனை எப்டியாவது குடும்பத்தோட சேர்த்துடனும்னும் அவங்களுக்கு இருக்கிற தவிப்பில்….. இந்த ஐடியாவை கண்டிப்பா சப்போர்ட் செய்வாங்கன்ற ப்ரச்சனை இருந்தாலும்……

நிச்சயமா மித்ரன் இதை ஒத்துக்க மாட்டான்…..எத்தன தடவ இதுவரைக்கும் அது என் அண்ணா கம்பெனி அண்ணா கம்பெனி என அழுத்தி அழுத்தி சொல்லிருப்பான்…. ஆக மித்ரன் நோ சொன்னவுடனே இந்த ஐடியா அதாவே ட்ராப் ஆகிடும்….

இப்படித்தான் மனோ யோசித்தது….

அவள் நினைத்தது போலவே இவள் இதை சொல்லி முடிக்கும் முன்பாகவே கொதித்துக் கொண்டு ரியாக்ட் செய்தது பாட்டிதான்….

“ஏய் இதுக்கு நான் ஒருக்காலமும் ஒத்துக்க மாட்டேன்…… “ என ஆக்ரோஷமாய் மனோவைப் பார்த்து ஆரம்பித்த அவர்….. அவளோ அவரை அவரது கத்தலை சட்டை கூட செய்யாமல் தன் அருகில் இருந்த ஸ்லைஸ்ட் ஸ்டஃப்ட் சிக்கனிலிருந்து ஒரு துண்டை எடுத்து மித்ரன் ப்ளேட்டில் வைப்பதில் மட்டுமாய் முழு கவனமாய் இருக்க கண்டு……

மனோவின் முந்தைய பதிலான ‘நீங்க இங்க கெஸ்ட்….’ என்பதுபோல் இன்னொரு சாட்டையடி திரும்பவும் கிடைக்கும் என உறைக்க……அவ அமைதியாதானே அடிக்கா….. தன் குரலை இறக்கி “அது எங்க வர்ஷனோடது….” என முனுமுனுப்பாக முடித்தார்.

அதோடு அதைவிட்டுவிட மனமில்லாமல் களஞ்சியத்தைப் பார்த்து “களஞ்சியம் நீயாவது சொல்லு…..வரு எவ்ளவு ஆசைப்பட்டு அதை ஆரம்பிச்சான்னு…..” என ஒரு அரைகுறை கெஞ்சல் மோடுக்கு போய்…..

பின் தான் யார்ட்ட கெஞ்சுறோம் என உணர்ந்தவராக “வர்ஷன உடனே கிளம்பி வரச் சொல்லு….அவன் பார்த்துப்பான் இது எல்லாத்தையும்….” என கெத்தாக கட்டளையிட்டார்.

பாட்டி இப்படியாக ரியாக்ட் செய்ய, மனோவின் கேள்விக்கு மித்ரனோ அவன் வகையில் பதில் கொடுத்தான்.

யெஸ்…..அவர்தான் ஹாட் கான்வெர்ஷேஷன்ல பவ்யமா அல்வா சாப்டுவாறே….அதைத்தான் செய்தார் சார் இப்போதும்…. மனைவி ஆசையாய் இவனுக்கு பரிமாறிய சிக்கனை கவனித்தார் அவர்.

 மனோவிடமிருந்து நிச்சயமாய் இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லைதான்….. ஆனால் அவளது முந்தைய நான் மிஸர்ஸ். மனோகரி மித்ரனுக்கு அடுத்து இப்படி ஒரு கேள்வி எனவும்….சரி பாட்டிய அவ இப்டி ஹேண்டில் பண்றா போல என சரியாகவே புரிந்து வெகு இலகுவாகவே இதை எடுத்துக் கொண்டான்…..

நியாயத்தை மீறி அவளுக்கு பயோசில அந்த ஸ்காலர்ஷிப் கொடுத்ததுக்கே கோப பட்டவ அவ…. அவளா வர்ஷனோட கம்பெனியப் போய் கேட்க போறா?

அதோடு எந்த காரணத்திற்காகவும் அவனால் தன் மனைவியை அடுத்தவங்க முன்னால விட்டுக் கொடுக்க முடியாது….. அதுவும் இந்த இடத்துல.. அவன் அம்மா, அந்த பாட்டி இவங்க  முன்னால அவளிடம் மறுப்பாக கூட எதையும் சொல்ல இவனுக்கு விருப்பம் இல்லை…. அது கூட அவளை அவங்க முன்னால தாழ்த்திக் காமிக்க கூடும்..…ஆக மனுட்ட இதப் பத்தி பேசனும்னா கூட தனியா இருக்கப்ப பேசிக்கலாம்….

இப்படியாக நினைத்தவன் அமைதியாகவே அடுத்து என்ன நடக்கிறது என்பதை கவனித்தான்.

இன்பாவோ மனோவின் இந்த கேள்வியில் “ ஹேய்….இது நல்ல மூவ்” என வேகமாக ஆரம்பித்தவள்…..”எனக்கு தெரிஞ்சு வர்ஷன் அங்க ஸ்விஸ்ல படு பிஸி….பயோசிய அவனால கான்ஸன்ட்ரேட் செய்ய முடியலைனு தான் நினைக்கேன்…. இது ஏற்கனவே உங்க ஃபீல்டு…..பயாலஜிகல் ரிசர்ச்…..கண்டிப்பா உங்களுக்கு சூட் ஆகும்….கண்டிப்பா செய்ங்க……” என கிட்டதட்ட யாரும் மறுக்க முடியாதவண்ணம் சொன்னவள்

தன் அம்மாவைப் பார்த்து “அண்ணா வரவும்….. அண்ணதான்மா பயோசிய பார்ப்பான்….ஏன்னா அவன் இது விஜி அண்ணிக்காக ஆசையா ஆரம்பிச்சது……மனோக்கு அதுக்குள்ள மேனேஜ்மென்ட் ஓரளவுக்கு பழகிடும்…..அடுத்து அவள  நேஷன் க்ரூப்ஸ பார்க்க சொல்லலாம்…… எப்டியும் வர்ஷனாவது மித்ரனாவதுதான நேஷன் க்ரூப்ஸ் சேர்மனா இப்ப இருக்க முடியும்….மித்ரனோட வைஃப்ங்கிற வகையில மனோ இருக்கட்டும்…. அண்ணாவுக்கும் இது ரொம்ப ஹெல்ஃபுல்லா இருக்கும்……அவனுக்கு விஜி அண்ணிய  கவனிக்க கூட டைம் இல்லாம போக போய்தான அவங்களுக்குள்ள இப்ப இவ்ளவு தூரம் வந்து நிக்குது ப்ரச்சனை….” என சொல்லி மனோவிற்கு தலை சுத்த வைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.